Saturday, June 28, 2014

படம் சொல்லும் தமிழகம் 2014 - 1

படங்கள் சொல்லும் செய்தி என்பது மனித மனதின் எண்ணங்களுக்கும் பார்வைக்கும் ஏற்ப மாறுபடுவது தானே!

தமிழகத்தில் ஆங்காங்கே நான் பார்த்த காட்சிகளில் சில...

தொடர்ந்து இந்த இழையில் பகிர்ந்து வரலாம் என நினைக்கின்றேன்.

உங்கள் கருத்துக்கள் இந்த இழையைச் சிறப்பிக்கும் நண்பர்களே!.

படம் 1.

திருமலை (திருவண்ணாமலைக்கு அருகில்) பகுதியில் எடுக்கப்பட்ட படம். காலை 5.30 மணி வாக்கில் எடுக்கப்பட்டது. திருமலை சமண மடத்தில் பூஜை ஆறு  மணிக்கு நடைபெறும் என்றும் கலந்து கொள்ள தயாராகி இருக்கும் படியும் சொல்லியிருந்தார்கள். நான் 5.30 மணிக்கு முன்னராகவே எழுந்து வயல் வெளியில் நடந்த போது நிகழ்ந்த சூரியோதயத்தை என் காமெராவில் பதிவு செய்தேன்!


Tuesday, June 3, 2014

கோல்மார் நகரில் ஒரு நாள்..!




ஜெர்மனிக்கும் ஃப்ரான்ஸ் நாட்டிற்கும் இடையில் ​இருக்கும் ஒரு நகரம் கோல்மார் (Colmar).  9ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு நகரம்.
இந்த நகரம் 1871-1918 வரை ஜெர்மனியின் எல்லைக்குள் இருந்தது. அதன் பின்னர் குறுகிய காலம் 2ம் உலகப் போர் காலகட்டத்திலும் (1940-1945) கோல்மார் ஜெர்மனியின் வசம் இருந்த நகர்.

அல்ஸாஸ் என சிறப்புடன் அறியப்படும் இப்பகுதியில் லிட்டல் வெனிஸ் பிரபலமானது. இங்கு படகுப்பயணம் செய்வதும் சுற்றுப்பயணிகளைக் கவரும் ஒரு அம்சம்.

அது மட்டுமல்ல.. 7க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்கள் இங்குள்ளன. 

கோல்மார் செல்ல விரும்புபவர்கள் பயண வழிகாட்டி நூலிலோ அல்லது இணைய பக்கத்திலோ தேடினால் இந்த நகரைப் பற்றிய தகவல்கள், இங்கு முக்கியமாகப் பார்க்க வேண்டிய இடங்கள் என நீண்ட பட்டியல் தயாரித்துக் கொண்டு செல்லலாம்.

சில மிக முக்கிய இடங்களாக 
  • பார்த்தோலி மியூஸியம்
  • உண்டெர் லிண்டென் மியூஸியம்
  • செயிண்ட் மார்ட்டின் தேவாலயம்
  • லிட்டல் வெனிஸ் பகுதி
  • தி கோய்ஃபுஸ் 
  • டோமினிக்கன் தேவாலயம்
  • மீனவர் கிராமம்
  • Statue of Liberty  சிறிய வடிவிலானது. சாலையின் நடுவே வெண்கலத்தால் அமைக்கப்பட்ட சிலை இது
  • யூதர்களின் தேவாலயம் - சினாகோக்


...இப்படி பல இடங்களை பார்த்து மகிழ்ந்து வரலாம்.

இங்கு நேற்று நானும் என் உறவினர் திலகேஸ், நண்பர் அருண்குமார் மூவரும் ஒரு நாள் பயண்ம் சென்றிருந்தோம். பத்தோலி அருங்காட்சியகம், லிட்டல் வெனிஸ் பகுதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படம் இங்கே. சில..!