Saturday, March 30, 2019

சிங்கை பயணம் - மார்ச் 2019: 13

சிங்கை தமிழ் எழுத்தாளர் கழக ஆண்டு விழா மற்றும் முத்தமிழ் விழா ..
அரங்கம் நிறைந்த சிங்கை தமிழ் ஆர்வலர்கள் நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர் ..தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகள் எவ்வாறு உலகளாவிய வகையில் தமிழர் வாழ்வும் வரலாறும் அமைந்திருக்கின்றது என்ற வகையிலும் எனது சொற்பொழிவினை அமைத்திருந்தேன். வீடியோ பதிவு செய்திருக்கின்றார்கள். அதன் தகவல்கள் கிடைத்தவுடன் பகிர்ந்து கொள்கிறேன்..












சிங்கை பயணம் - மார்ச் 2019: 12

Subashini Thf updated her profile picture.
சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தியிருக்கும் இந்திய மரபு மையத்தில் வரலாற்றின் ஒரு பகுதியாய்....!


சிங்கை பயணம் - மார்ச் 2019: 11

தமிழர்கள் அதிகம் வந்து செல்லும், வசிக்கும், கடைகள் இருக்கும் பகுதியான சிராங்கூன் சாலை லிட்டில் இந்தியா பகுதி.... மாலை நேர காட்சி













சிங்கை பயணம் - மார்ச் 2019: 10

இரவு வெளிச்சத்தில் சிராங்கூன் சாலை கோயில் ஒன்று... பேரழகுடன்





சிங்கை பயணம் - மார்ச் 2019: 9


மஸ்ஜித் அப்துல் கபூர்







சிங்கை பயணம் - மார்ச் 2019: 8

Indian heritage center
இந்திய மரபு மையம் -சிங்கப்பூர்
இரவு நேர காட்சி கண்களை கவர்கிறது!











சிங்கை பயணம் - மார்ச் 2019: 7

சிங்கப்பூர் தேசிய நூலகம்.. ஆய்வாளர்களுக்கு மிக அருமையான சேகரங்களை கொண்டிருக்கும் உலகத்தரம் வாய்ந்த ஒரு நூலகம். இன்றைய மதியம் இப்பகுதியில் மலாயா சிங்கை ஆகிய நாடுகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வெளிவந்த தமிழ் சஞ்சிகைகளை தேடி அலசிக்கொண்டிருந்தேன். இங்குள்ள அலுவலர்கள் மிக நட்புடன் பழகுகின்றனர். எனக்கு உறுப்பினர் அட்டை இல்லாத போதும் எந்த சிரமமும் தராமல் எனக்கு தேவையான மைக்ரோ பிலிம் சஞ்சிகைகளை வழங்கினர். துரை சகோதர் இடையில் சிறிது நேரம் வந்து இருந்து கூடுதல் உதவியும் செய்தார். 1910, 29 , 39, 51 ஆகிய காலகட்டங்களில் வெளிவந்த சிங்கையின் சஞ்சிகைகள் சிலவற்றை மின்னாக்கம் செய்ய முடிந்தது.
சிங்கை தேசிய நூலகத்தின் வளாகத்தின் சில காட்சிகள்..
















சிங்கை பயணம் - மார்ச் 2019: 6

சிங்கப்பூர் தேசிய நூலகத்தில், இன்றைக்கு ஏறக்குறைய 100 ஆண்டுகள் பழமையான சிங்கப்பூரில் இருந்து வெளிவந்த அரிய பழைய வார மாத சஞ்சிகைகள் மின்னாக்கம்.









சிங்கை பயணம் - மார்ச் 2019: 4

இந்திய மரபு மையத்தில் பெரியார் பற்றிய ஆவணங்கள்... பெரியார் மலாயா சிங்கை வருகை தந்த போது நிகழ்ந்த நிகழ்ச்சிகள் நடவடிக்கைகள் பற்றிய ஆவணத் தொகுப்பு..










சிங்கை பயணம் - மார்ச் 2019: 5

சுபா + சுபா
ஜெர்மனி + பாப்புவா நியூ கினி