Wednesday, October 31, 2018

SriLanka - 33. திரு . ராஜசேகர்

மலையக மக்களின் வரலாறு...
திரு . ராஜசேகரின் சேகரிப்பிலிருந்து சில முக்கிய ஆவணங்கள் மின்னாக்கம் செய்தோம்.





SriLanka - 32.மலையகத்தில்..ஹட்டன் நகரில்

மலையகத்தில்..
ஹட்டன் நகரில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் பதிவு.. இப்போது.



SriLanka - 31. யாழ்ப்பாணத்திலிருந்து மலையகம் நோக்கி

யாழ்ப்பாணத்திற்கான 4 நாள் பயணம் மிகச் சிறப்பாக அமைந்தது. இந்தப் பயணத்தில் எங்களுக்கு எல்லா வகையிலும் ஏற்பாடுகளில் உறுதுணையாக இருந்து செயலாற்றிய தோழர் வலண்ரீனா இளங்கோவன் அவர்களுக்கும் எங்களை மிகுந்த அன்புடன் கவனித்து உபசரித்ததோடு ஏராளமான வரலாற்று ஆய்வுத்தகவல்களை நம் பதிவுகளுக்காக வழங்கிய பேரா.முனைவர்.புஷ்பரட்ணம் அவர்களுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றி.
அடுத்த சில நாட்கள் மலையகத்தில்.


Tuesday, October 30, 2018

SriLanka - 30. தம்பகொலபடுன

சங்கமித்திரை இலங்கை வந்தடைந்த இடம் எனக் கருதப்படும் தம்பகொலபடுன - மாதகல் சிற்றூரில்..








SriLanka - 28. மாண்புமிகு விக்ணேஸ்வரன் அவர்களுடன்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு விக்ணேஸ்வரன் அவர்களுடன் சந்தித்து உரையாடினோம். தற்கால அரசியல் நிலைத்தன்மை, தமிழர்களின் நிலை பற்றிய பேட்டி பதிவு ஒன்றினைச் செய்தோம்.




SriLanka - 27. சர் பொன் இராமநாதன்

சர் பொன் இராமநாதன் அவர்கள் ஏற்படுத்திய கல்லூரிக்கு இன்று சென்றிருந்தோம். இந்த வளாகத்தில்,
-பெண்கள் கல்லூரி
-இராமநாதன் இல்லம்
-சமாதி கோயில்
-அலுவலகம் 
ஆகியன உள்ளன.
சர்.பொன்.இராமநாதன் அவர்கள் ஆண்களுக்கான பரமேஸ்வரா ( இன்னாளைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) கல்லூரியும் பெண்களுக்காக இக்கல்லூரியையும் உருவாக்கினார். அவரைப் பற்றியும் இக்கல்லூரி பற்றியும் விரிவான பேட்டி பதிவு ஒன்றினைச் செய்துள்ளோம்.
-சுபா













SriLanka - 20.தனிநாயகம் அடிகளார் முற்றம்

எனது அண்மைய இலங்கை பயணத்தில், யாழ்ப்பாணத்தில் இருந்தபோது தமிழறிஞர் தனிநாயகம் அடிகளாரின் பிறந்த ஊரான லைடன் தீவு பகுதிக்கு சென்று வர ஒரு யோசனை இருந்தது .ஆனால் அது சாத்தியப்படவில்லை. ஆயினும் யாழ் நூலகத்தின் அருகில் தனிநாயகம் அடிகள் முற்றம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது .அங்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. கடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த தமிழ் அறிஞர்களில் ஒருவர் தனிநாயகம் அடிகள். தான் பிறந்த இலங்கை தீவு மட்டுமன்றி உலகின் பல தீவுகளுக்கும் நாடுகளுக்கும் பயணம் செய்து தமிழரின் பண்டைய புலம்பெயர்வுகளைப் பற்றிய தகவல்களையும் ஆரம்பகால தமிழ் நூல் அச்சு வடிவம் பெற்றமையை உலகுக்கு கூறும் செய்திகளையும் சேகரித்து பல உலகத் தரம் வாய்ந்த ஆய்வுக் கட்டுரைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் படைத்தவர். இவரது நூல்களும் கட்டுரைகளும் இன்றும் தமிழர் புலம் பெயர்வு பற்றிய ஆய்வுகளுக்கு மிக முக்கிய ஆதாரமாக அமைகின்றன.


-சுபா

Monday, October 29, 2018

SriLanka - 26. யாழ்ப்பாணத்தில் மூன்றாம் நாள் நிகழ்வுகள்

29.10.2018 (திங்கட்கிழமை)
காலை நிகழ்வு
************************
இலங்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையும் தமிழ் மரபு அறக்கட்டளையும் இணைந்து நடத்திய செயலமர்வு யாழ் பல்கலைக்கழக விரிவுரைமண்டபம் இல.408ல், காலை 9 மணிக்குத் தொடங்கி மதியம் 1 மணி வரை நடைற்றது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணப்பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் திரு.சிவகணேசன் வரவேற்புரையாற்றினார்.
யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் புஷ்பரட்ணம் தலைமையுரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சிக்குத் துணைவேந்தரின் பிரதிநிதியாக வந்து வாழ்த்துரை வழங்கினார் சித்தமருத்துவத்துறையின் தலைவர் பேரா.மிகுந்தன்.
கலைப்பீடத்தின் பீடாதிபதி கலாநிதி கே.சுந்தர் அவர்கள் வாழ்த்துரை வழங்கி யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை கிளை அமைத்து செயல்படுவதை பல்கலைக்கழகம் வரவேற்கின்றது எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து த.ம.அவின் பேராசிரியர்.நா.கண்ணன் “அயலகத் தமிழர் வரலாறும் இலங்கைத் தமிழர்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
”இலங்கைத் தமிழர் வரலாற்றினை ஆவணப்படுத்தலின் தேவைகள்” என்ற தலைப்பில் இந்த நிகழ்வின் நோக்கவுரையை வழங்கி தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக்கிளை அமைப்பைத் தொடக்கி வைத்தார் த.ம.அ தலைவர் கலாநிதி க.சுபாஷிணி.
யாழ் பல்கலைக்கழகத்தின் தகைசால் பேராசிரியர் சிவலிங்கராஜா அவர்கள் கருத்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியின் தொகுப்புரையை வழங்கினார் த.ம.அ செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் மதுமிதா.
நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியை நிறைவுக்குக் கொண்டு வந்தார் வரலாற்றுத்துறை பேராசிரியர் திருமதி.சாந்தி அருளானந்தம்.
மதிய நிகழ்வுகள்
******************
கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியின் கலாச்சார விழா மதியம் 2லிருந்து 5 வரை நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் குழுவினர் முனைவர்.க.சுபாஷிணி, முனைவர்.நா.கண்ணன், எழுத்தாளர் மதுமிதா ஆகியோர் உரையாற்றினர்.
மாலை 6 மணிக்கு புன்னாலைக்கட்டுவன் கிராமத்தில் செயல்படும் சனசமூக நிலையத்திற்குத் த.ம.அ வின் முனைவர். க.சுபாஷிணி, எழுத்தாளர் மதுமிதா ஆகியோர் வருகை புரிந்தனர். போரினால் முற்றிலும் சேதமடைந்த இக்கிராமத்தை மீட்டெழுப்பும் பணியில் இங்குள்ள சமூக அமைப்பான ஸ்ரீ துர்கா அமைப்பும், இலங்கை ஐயை குழுமமும் செயல்படுகின்றனர். காலை நேர, மாலை நேர வகுப்புக்களை இவர்கள் இலவசமாக நடத்தி வருகின்றனர். தேசிய அளவில் பளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற இக்கிராமத்தைச் சேர்ந்த தனுசியாவையும், ஆசிரியர்களையும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு செய்து கவுரவித்தனர்.
மாலை 7 மணிக்கு இணுவில் பொது நூலக சனசமூக நிலையத்திற்கு த.ம.அ குழுவினர் சென்றிருந்தோம். நூலகத்தின் சேகரத்தை பார்வையிட்டதோடு நூலகத்தின் செயல்பாடுகள், அதன ஆரம்பகால வரலாறு பற்றி கேட்டறிந்து பதிவு செய்தோம்.
-சுபா










SriLanka - 26 இணுவில் பொது நூலகம்

இணுவில் பொது நூலகம் சனசமூக நிலையத்தின் பொறுப்பாளர்களுடன் இன்று மாலை ஒரு சந்திப்பு.








SriLanka - 25. புன்னாலைக்க்கட்டுவன் கிராமம்

புன்னாலைக்க்கட்டுவன் கிராமம் போரின் போது முற்றிலும் சேதப்பட்ட ஒரு கிராமம். இங்கு மாலை நேரப்பள்ளியை இலங்கை ஐயை குழுமம் இலவசமாக மிகுந்த ஈடுபாட்டுடன் நடத்தி வருகின்றனர்.
இந்த கிராமத்தைச் சேர்ந்த செல்வி தனுசியா தேசிய அளவில் பளு தூக்கும் போட்டியில் வெற்றி்பெற்று விரைவில் ஆசிய அளவிலான போட்டியில் பங்கு பெற மலேசியா செல்கின்றார்.












SriLanka - 24.வீரமணி ஐயர்

கற்பகவல்லி நின்
பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா..!
இப்பாடலையும் மேலும் பல தமிழிசைப்பாடல்களையும் இயற்றிய வீரமணி ஐயர் ஆசிரியராகப்பணிபுரிந்த கல்லூரி என்பது தனிச்சிறப்பு.
மாணவர்களின் கலாச்சார நிகழ்ச்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்தன.