Sunday, October 29, 2017

மலேசியா இன்று - 2

Subashini Thf updated her cover photo.
5 mins
மலேசியா இன்று!
கோலாலம்பூர் விமான நிலையத்தில் கேஎல்எம் விமானம் தரையிறங்கிய போது 31 டிகிரி செல்சியஸ். மழை தூரல்.
எனது பயணப் பையை 1 மணி நேரத்திற்குப் பின்னர் தான் பார்க்க முடிந்தது. காணாமல் போய்விட்டு மீண்டும் கிடைத்தது. நல்ல வேளை. தொலைந்து விட்டதோ என்ற கவலை மனதில் இருக்க அந்த வேளையில் பயணப்பை கிடைத்ததில் அலுப்பும் கவலையும் தீர்ந்தது. 
விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் செண்ட்ரல் ஸ்டேஷனுக்கு ஒரு டிக்கட் எடுத்துக் கொண்டு துரித ரயிலில் பயணித்தேன். வழியெங்கும் பச்சைப் பசேலென செம்பனைக் காடுகள்.
செம்பனைக் காடுகளையும் தமிழர்களையும் பிரிக்க முடியாது. தோட்டத்தொழிலாளர்களாகk காடுகளை அழித்து வளம் கொழிக்கும் செம்பனையைப் பயிரிட்ட உழைப்பாளி வர்க்கம் நம் தமிழ் மக்கள். மலேசியாவின் பொருளாதாரத்தை கட்டமைத்து சீரமைத்ததில் தமிழ் மக்களின் பங்கு மிக அதிகம்.
நண்பர்கள் சந்திப்பு... உரையாடல்.. இப்படி மாலைப் பொழுது இனிதே கழிகின்றது.
உள்ளூரில் அரசியல் செய்திகளே அதிகம் காதில் விழுகின்றன. விரைவில் தேர்தல் வரவேண்டும். நாளிதழ்களில் தேர்தல் தொடர்பான செய்திகள், கூட்டனி அமைத்தல் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
-சுபா

Friday, October 27, 2017

மலேசியா இன்று - 3


மலேசியாவைப் பொருத்தவரை தீபாவளிக் கொண்டாட்டம் என்பது இங்கு வாழும் பல்லின மக்களுடன் இணைந்து கொண்டாடுவது தான், ஒவ்வொரு வீட்டிலும் தீபாவளிக்கு முன்னர் வீட்டில் உள்ளவர்கள் செய்கின்ற பலகார வகைகளில் முருக்கு அதிரசம், நெய்யுருண்டை, சீடை போன்றவை கட்டாயம் இடம் பெறும் இவற்றோடு மலாய் பலகாரங்களாக பிஸ்கட் வகைகளும் மாவினால் தயாரிக்கப்படும் சில கார வகை பண்டங்களும் இடம் பெறும்,
இப்படி தயாரிக்கப்படுகின்ற பலகாரங்களைத் தீபாவளியன்று காலையில் வழிபாட்டுக்குப் பின்னர் தான் வீட்டில் உள்ளவர் அனைவரும் உண்ண அனுமதி கிடைக்கும். குடும்பத்தில் உள்ளோர் சாப்பிடுவது என்பதோடு அண்டை வீட்டுக்காரர்களுக்கு இந்தப் பலகாரங்களை ஒரு தட்டில் வைத்துக் கொடுப்பதும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கின்றது. நம் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு சீனர், அல்லது மலாய்க்காரர் என்றால் அவர்களுக்குத் தட்டில் பலகாரங்களை வைத்து கொடுக்கும் போது நமக்குப் பரிசாக பேக்கட்டுகளில் பணத்தை வைத்து பரிசாகத் தருவார்கள். அங்பாவ் என்று இதற்குப் பெயர். இதே போல சீனர் பெருநாள், இஸ்லாமிய ரமடான் திருநாள் ஆகிய பண்டிகை நாட்களில் அவர்கள் வீட்டிலிருந்து நமக்குப் பலகாரங்கள் வரும்போது நாமும் அவர்களுக்கு பணத்தை பரிசாக அங்பாவ் பேக்கட்டில் வைத்து கொடுப்போம்.
இன்று எனக்கு தீபாவளைப் பலகாரங்கள் பரிசாகக் கிடைத்தன. இதில் தமிழர் பாரம்பரிய பலகாரங்கலும் மலாய் இனத்தோர் பலகாரங்களும் கலந்திருப்பதைக் காணலாம்.
Thursday, October 26, 2017

மலேசியா -1

எங்க ஊரு வந்தாச்சே...
வின் பயணக் காட்சிகள்.
தரையிறங்கும் போது செம்பனைத் தோட்டத்தின் பசுமைக் காட்சிகள்.. கண்களுக்கு விருந்தாக..
Monday, October 23, 2017

போலந்து - The Cloth Hall -7

The Cloth Hall என அழைக்கப்படும் இந்த கட்டிடம் க்ராக்கவ் நகரின் மையப் பகுதில் அமைந்திருக்கும் பிரம்மாண்டமான ஒரு கட்டிடம். க்ராக்காவ் நகரின் ஒரு சின்னமாகவும் இது திகழ்கின்றது. இது வியாபார மையமாக பல ஆண்டுகளாகச் சிறப்புடன் திகழும் ஒரு பகுதியில் அமைந்திருக்கின்றது என்பதோடு இங்கிருந்துதான் உப்பு ஏனைய பிற ஐரோப்பிய நாடுகளின் நகரங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஐரோப்பாவின் பழமையான உப்பு வணிக பாதையின் மையமாக இப்பகுதி விளங்கியது.
இக்கட்டிடம் 14ம் நூ கட்டப்பட்டது. பின்னர் அடுத்தடுத்து விரிவாக்கமும் சீரமைப்பும் செய்யப்பட்டன.
இந்தக் கட்டிடத்தின் கீழ்ப்பகுதியில் அதாவது நிலத்தின் அடியில் ஒரு அருங்காட்சியகம் உள்ளது. இது முழுக்க நிலத்தடியில் நிகழ்ந்த வணிகத்தின் சான்றுகள் நிறைந்த ஒரு பகுதி.