Sunday, October 29, 2017

மலேசியா இன்று - 2

Subashini Thf updated her cover photo.
5 mins
மலேசியா இன்று!
கோலாலம்பூர் விமான நிலையத்தில் கேஎல்எம் விமானம் தரையிறங்கிய போது 31 டிகிரி செல்சியஸ். மழை தூரல்.
எனது பயணப் பையை 1 மணி நேரத்திற்குப் பின்னர் தான் பார்க்க முடிந்தது. காணாமல் போய்விட்டு மீண்டும் கிடைத்தது. நல்ல வேளை. தொலைந்து விட்டதோ என்ற கவலை மனதில் இருக்க அந்த வேளையில் பயணப்பை கிடைத்ததில் அலுப்பும் கவலையும் தீர்ந்தது. 
விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் செண்ட்ரல் ஸ்டேஷனுக்கு ஒரு டிக்கட் எடுத்துக் கொண்டு துரித ரயிலில் பயணித்தேன். வழியெங்கும் பச்சைப் பசேலென செம்பனைக் காடுகள்.
செம்பனைக் காடுகளையும் தமிழர்களையும் பிரிக்க முடியாது. தோட்டத்தொழிலாளர்களாகk காடுகளை அழித்து வளம் கொழிக்கும் செம்பனையைப் பயிரிட்ட உழைப்பாளி வர்க்கம் நம் தமிழ் மக்கள். மலேசியாவின் பொருளாதாரத்தை கட்டமைத்து சீரமைத்ததில் தமிழ் மக்களின் பங்கு மிக அதிகம்.
நண்பர்கள் சந்திப்பு... உரையாடல்.. இப்படி மாலைப் பொழுது இனிதே கழிகின்றது.
உள்ளூரில் அரசியல் செய்திகளே அதிகம் காதில் விழுகின்றன. விரைவில் தேர்தல் வரவேண்டும். நாளிதழ்களில் தேர்தல் தொடர்பான செய்திகள், கூட்டனி அமைத்தல் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
-சுபா

Friday, October 27, 2017

மலேசியா இன்று - 3


மலேசியாவைப் பொருத்தவரை தீபாவளிக் கொண்டாட்டம் என்பது இங்கு வாழும் பல்லின மக்களுடன் இணைந்து கொண்டாடுவது தான், ஒவ்வொரு வீட்டிலும் தீபாவளிக்கு முன்னர் வீட்டில் உள்ளவர்கள் செய்கின்ற பலகார வகைகளில் முருக்கு அதிரசம், நெய்யுருண்டை, சீடை போன்றவை கட்டாயம் இடம் பெறும் இவற்றோடு மலாய் பலகாரங்களாக பிஸ்கட் வகைகளும் மாவினால் தயாரிக்கப்படும் சில கார வகை பண்டங்களும் இடம் பெறும்,
இப்படி தயாரிக்கப்படுகின்ற பலகாரங்களைத் தீபாவளியன்று காலையில் வழிபாட்டுக்குப் பின்னர் தான் வீட்டில் உள்ளவர் அனைவரும் உண்ண அனுமதி கிடைக்கும். குடும்பத்தில் உள்ளோர் சாப்பிடுவது என்பதோடு அண்டை வீட்டுக்காரர்களுக்கு இந்தப் பலகாரங்களை ஒரு தட்டில் வைத்துக் கொடுப்பதும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கின்றது. நம் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு சீனர், அல்லது மலாய்க்காரர் என்றால் அவர்களுக்குத் தட்டில் பலகாரங்களை வைத்து கொடுக்கும் போது நமக்குப் பரிசாக பேக்கட்டுகளில் பணத்தை வைத்து பரிசாகத் தருவார்கள். அங்பாவ் என்று இதற்குப் பெயர். இதே போல சீனர் பெருநாள், இஸ்லாமிய ரமடான் திருநாள் ஆகிய பண்டிகை நாட்களில் அவர்கள் வீட்டிலிருந்து நமக்குப் பலகாரங்கள் வரும்போது நாமும் அவர்களுக்கு பணத்தை பரிசாக அங்பாவ் பேக்கட்டில் வைத்து கொடுப்போம்.
இன்று எனக்கு தீபாவளைப் பலகாரங்கள் பரிசாகக் கிடைத்தன. இதில் தமிழர் பாரம்பரிய பலகாரங்கலும் மலாய் இனத்தோர் பலகாரங்களும் கலந்திருப்பதைக் காணலாம்.
Thursday, October 26, 2017

மலேசியா -1

எங்க ஊரு வந்தாச்சே...
வின் பயணக் காட்சிகள்.
தரையிறங்கும் போது செம்பனைத் தோட்டத்தின் பசுமைக் காட்சிகள்.. கண்களுக்கு விருந்தாக..
Monday, October 23, 2017

போலந்து - The Cloth Hall -7

The Cloth Hall என அழைக்கப்படும் இந்த கட்டிடம் க்ராக்கவ் நகரின் மையப் பகுதில் அமைந்திருக்கும் பிரம்மாண்டமான ஒரு கட்டிடம். க்ராக்காவ் நகரின் ஒரு சின்னமாகவும் இது திகழ்கின்றது. இது வியாபார மையமாக பல ஆண்டுகளாகச் சிறப்புடன் திகழும் ஒரு பகுதியில் அமைந்திருக்கின்றது என்பதோடு இங்கிருந்துதான் உப்பு ஏனைய பிற ஐரோப்பிய நாடுகளின் நகரங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஐரோப்பாவின் பழமையான உப்பு வணிக பாதையின் மையமாக இப்பகுதி விளங்கியது.
இக்கட்டிடம் 14ம் நூ கட்டப்பட்டது. பின்னர் அடுத்தடுத்து விரிவாக்கமும் சீரமைப்பும் செய்யப்பட்டன.
இந்தக் கட்டிடத்தின் கீழ்ப்பகுதியில் அதாவது நிலத்தின் அடியில் ஒரு அருங்காட்சியகம் உள்ளது. இது முழுக்க நிலத்தடியில் நிகழ்ந்த வணிகத்தின் சான்றுகள் நிறைந்த ஒரு பகுதி.

Saturday, September 23, 2017

போலந்து - Karol Wojtyla - 8

Karol Wojtyla என்ற பெயரை விட போப்பாண்டவர் 2ம் ஜோன் பால் என்றால் பலரும் அறிந்திருப்பர். இவர் க்ராக்காவ் நகருக்கருகாமையில் உள்ள சிற்றூரில் பிறந்தவர். நிக்கலவுஸ் கோப்பர்னிக்கஸ் கல்வி பயின்ற அதே க்ராக்காவ் பல்கலைக்கழகத்தில் இவர் கல்வி கற்றார்.
இளமை காலத்தில் நாடகத்துறையில் நாட்டம் கொண்டிருந்தார்.ஹிட்லரின் நாசி அரசுக்கு எதிரான கருத்துக்களை நாடகங்களின் வழி பிரச்சாரம் செய்தது இவர் சார்ந்திருந்த நாடகக் குழு. அவர் அச்சமயத்தில் எழுதிய சீர்திருத்த பாடல்களும் நாடகங்களும் இன்றும் போலந்தில் நாடகக் குழுவினரால் நடிக்கப்படுகின்றன. 2ம் உலகப்போரில் நாசி அரசு போலந்தை கைப்பற்றிய சமயத்தில் இவர் ரகசிய அமைப்பின் வழியாக சமயக்கல்வி படித்து வந்தார்.
இவர் 1946ம் ஆண்டு பாதிரியாராக பதவியேற்றார். இந்த St Florian தேவாலயத்தில் அப்போது பணியாற்றினார்.1958ம் ஆண்டு பிஷப்பாகவும் பின்னர் 1963ம் ஆண்டு ஆர்ச்பிஷப்பாகவும் பதவி உயர்வு பெற்றார். மக்களால் மிகவும் விரும்பப்பட்ட பாதிரியாராகத் திகழ்ந்தார்.
பின்னர் 16.10.1978ம் ஆண்டு கத்தோலிக்க கிருத்துவ சமயத்தின் தலைமைப் பீடமாகிய வாட்டிக்கனில் இவர் 246வது போப்பாண்டவராக பதவியேற்றார்.
இன்று அவர் ஆரம்பகாலத்தில் பணியாற்றிய இத்தேவாலயத்திற்குச் சென்றபோது பதிந்த புகைப்படங்கள்.போலந்து - St Mary's Basilica 7

St Mary's Basilica
264 வது போப் ஆக பதவியேற்ற Pope John Paul II வாட்டிக்கன் செல்வதற்கு முன்னர் ஆர்ச்பிஷப் ஆக பணியாற்றிய தேவாலயம். 14ம் நூ. கட்டிடம்.இந்த தேவாலயத்தின் உட்புற கட்டுமானம் மிக நுணுக்கமாக செய்யப்பட்டுள்ளது. காணக் கண் கோடி வேண்டும் எனச் சொல்லலாம். ஜெர்மனியின் நுரன்பெர்க் நகரின் மிகச்சிறந்த சிற்பி Veit Stoss இதனை உருவாக்கியிருக்கின்றார். ஓக் மற்றும் எலுமிச்சை மரங்களினால் உருவாக்கப்பட்ட கருவறை பகுதியின் மேல் தங்கமுலாம் பூசப்பட்டார் போன்ற கலைப்படைப்பு.

வீடியோ காட்சி
https://www.facebook.com/subashini.thf/videos/2036145993295454/


போலந்து - 6

க்ராக்காவ் சிங்கத்துடன்..
In front of the Town Hall Tower and museum.


போலந்து - நிக்கலஸ் கோப்பர்னிக்கஸ் - 5

நிக்கலஸ் கோப்பர்னிக்கசுடன்..
இவரது கண்டுபிடிப்புத்தான் சூரியனை இதர கோள்கள் சுற்றி வருகின்றன என உலகுக்குக் கூறியது. க்ராக்காவ் பல்கலைக்கழகத்தில் தான் இவர் கற்றார். தன் ஆய்வினையும் இங்கு தான் தொடர்ந்தார். இவரது கண்டுபிடிப்பினை விவரிக்கும் கையெழுத்து ஆவணம் புகைப்படத்தில். பல்கலைக்கழக வளாகத்திலேயே அருங்காட்சியகம் இருக்கின்றது. 15ம் நூ. கணித மற்றும் வானியல் ஆய்வாளர் இவர்.போலந்து - கலை பண்பாட்டு நகரம் -4

க்ராக்காவ்- போலந்தின் கலை பண்பாட்டு நகரம். சில காட்சிகள்.
போலந்து - க்ராக்காவ் ஜகீலோனியன் பல்கலைக்கழகம் -3

Collegium Maius - க்ராக்காவ் ஜகீலோனியன் பல்கலைக்கழகம். 1364ம் ஆண்டில் மன்னர் கசிமியர் கட்டிய பல்கலைக்கழகம். உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று.போலந்து - விமான நிலையத்திலிருந்து -2

க்ராக்காவ் (போலந்து) விமான நிலையத்திலிருந்து...
நேரமும் இணையமும் கிட்டும் போது சில வரலாற்றுத் தகவல்களைப் பகிர்கிறேன்...