Saturday, September 23, 2017

போலந்து - Karol Wojtyla - 8

Karol Wojtyla என்ற பெயரை விட போப்பாண்டவர் 2ம் ஜோன் பால் என்றால் பலரும் அறிந்திருப்பர். இவர் க்ராக்காவ் நகருக்கருகாமையில் உள்ள சிற்றூரில் பிறந்தவர். நிக்கலவுஸ் கோப்பர்னிக்கஸ் கல்வி பயின்ற அதே க்ராக்காவ் பல்கலைக்கழகத்தில் இவர் கல்வி கற்றார்.
இளமை காலத்தில் நாடகத்துறையில் நாட்டம் கொண்டிருந்தார்.ஹிட்லரின் நாசி அரசுக்கு எதிரான கருத்துக்களை நாடகங்களின் வழி பிரச்சாரம் செய்தது இவர் சார்ந்திருந்த நாடகக் குழு. அவர் அச்சமயத்தில் எழுதிய சீர்திருத்த பாடல்களும் நாடகங்களும் இன்றும் போலந்தில் நாடகக் குழுவினரால் நடிக்கப்படுகின்றன. 2ம் உலகப்போரில் நாசி அரசு போலந்தை கைப்பற்றிய சமயத்தில் இவர் ரகசிய அமைப்பின் வழியாக சமயக்கல்வி படித்து வந்தார்.
இவர் 1946ம் ஆண்டு பாதிரியாராக பதவியேற்றார். இந்த St Florian தேவாலயத்தில் அப்போது பணியாற்றினார்.1958ம் ஆண்டு பிஷப்பாகவும் பின்னர் 1963ம் ஆண்டு ஆர்ச்பிஷப்பாகவும் பதவி உயர்வு பெற்றார். மக்களால் மிகவும் விரும்பப்பட்ட பாதிரியாராகத் திகழ்ந்தார்.
பின்னர் 16.10.1978ம் ஆண்டு கத்தோலிக்க கிருத்துவ சமயத்தின் தலைமைப் பீடமாகிய வாட்டிக்கனில் இவர் 246வது போப்பாண்டவராக பதவியேற்றார்.
இன்று அவர் ஆரம்பகாலத்தில் பணியாற்றிய இத்தேவாலயத்திற்குச் சென்றபோது பதிந்த புகைப்படங்கள்.







No comments:

Post a Comment