Monday, August 27, 2018

ஓஸ்லோ - வைக்கிங் ஊருக்கு ஒரு பயணம் -18



ஓஸ்லோவில் இருந்த நாட்கள் இனிமையாக அமைந்தன.
நான் செல்லும் நாளில் மழை பெய்து விடுமோ என்ற ஐயம் இருந்தது. ஆனால் ஒவ்வொரு நாளும் வெயில் இதமாக அமைந்ததால் காலைத் தொடங்கி முழு நாளும் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகளுக்கும், அருங்காட்சியகங்களுக்கும் சென்று அங்கு எனக்கு தேவைப்பட்ட தகவல்களை நேரில் பார்த்தும் தேடியும் அறிந்து கொள்ள முடிந்தது.
ஓஸ்லோவை மனதில் நினைக்கும் போது என் மனதை இதமாக வருடுவது அதன் கலப்படமற்ற குளிர்ந்த காற்று. இக்காற்று நம் உடலின் சுவாசத்தில் நுழைந்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றதோ என நான் வியக்கும் வகையில் இதமான அனுபவமாக அமைந்தது.
நகரின் மையப் பகுதியிலேயே நான் தங்கியிருந்ததால், அது மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியென்பதால் பொதுமக்களை அவதானிக்க வாய்ப்பு அமைந்தது. Man watching என்போமே... அப்படி மனிதர்களின் முகங்கள், செயல்பாடுகள், நடவடிக்கைகளைப் பார்த்து ஆராய வாய்ப்பும் நிறைய கிடைத்தது.
புதிதாக அறிமுகமான திரு.ரமேஷ் சுஜா தம்பதியினரும் அவரது குடும்பத்தினர், திரு முருகையா வேலழகன் - யசோதா தம்பதியினர், நோர்வே தமிழ்ச்சங்க தோழர்கள் அனைவரின் அன்பும் மறக்கமுடியாதது.
நோர்வே தமிழ்ச்சங்க தோழர்கள் செய்ய வேண்டிய பணிகள் என சிலவற்றை குறிப்பிட்டு சொல்லியிருக்கின்றேன். நான் முன்வைத்த கருத்துக்கள் காலத்தின் தேவை என்பதை நண்பர்களும் ஆமோதித்தது மனதிற்கு உற்சாகமளிப்பதாக இருக்கின்றது.
அடுத்த முறை நோர்வே செல்லும் போது விடுபட்ட பெர்கன் மற்றும் ஏனைய பகுதிகளுக்கும் சென்று வர விருப்பம் இருக்கின்றது. காலமும் வாய்ப்பும் அமைந்தால் விரைவில் மீண்டும் நோர்வே வருவேன்.
சுபா

Sunday, August 26, 2018

ஓஸ்லோ - வைக்கிங் ஊருக்கு ஒரு பயணம் -17









ஓஸ்லோ அரச மாளிகை -​19ம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்ட ​ஒரு அரச மாளிகை. பிரான்சில் பிறந்தவரும் சுவீடன் நோர்வே ஆகிய இரு நாடுகளையும் ஆட்சி செய்தவருமான மன்னன் மூன்றாம் சார்ல்ஸ் கட்டிய மாளிகை இது. தற்பொழுது இந்த அரச மாளிகை நோர்வே மன்னரின் வசிப்பிடமாகவும் உள்ளது. இம்மாளிகையைக் கட்டிய மன்னன் மூன்றாம் சார்ல்ஸின் செம்பினால் உருவாக்கப்பட்ட உருவச்சிலை இந்த மாளிகையின் முன் புறத்தில் அமைந்துள்ளது. இது 1849ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
அரச மாளிகையைச் சுற்றிலும் உள்ள பூங்கா மிக எளிய வகையில் ஆனால் இயற்கை அமைப்பு கெடாத வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஏனைய பல அரச மாளிகைகள் போலல்லாது இந்த அரச மாளிகையின் பூந்தோட்டம் முழுமையையும் பொது மக்களும் வந்து பார்த்து ரசித்துச் செல்லும் வகையில் அனுமதித்திருக்கின்றனர்.
அரச மாளிகையைச் சுற்றி பாதுகாப்புக் காவலர்கள் நிற்கின்றனர். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அரச மாளிகையைச் சுற்றி இவர்கள் அணி செல்கின்றனர்.
அரச மாளிகையைச் சுற்றியுள்ள தோட்டம் முன்னர் காட்டுப் பகுதியாக இருந்தது என்றும் மாளிகை அமைக்கப்பட்டபோது 2000 மரங்கள் இத்தோட்டத்தில் இருந்தன என்றும் பின்னர் அவர் படிப்படியாகக் குறைந்து இன்று ஏறக்குறைய 1000 மரங்கள் சூழ்ந்த பகுதியாக இருக்கின்றது என்றும் அங்குள்ள குறிப்புக்கள் சொல்கின்றன. இன்று நோர்வே நாட்டின் அரசராக இருப்பவர் டென்மார்க் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தற்சமயம் மன்னராக இருப்பவர் மன்னர் ஐந்தாம் ஹரால்ட்.
-சுபா

ஓஸ்லோ - வைக்கிங் ஊருக்கு ஒரு பயணம் -16







Video UR: https://www.facebook.com/subashini.thf/videos/2251487045094680/

Video URL: https://www.facebook.com/subashini.thf/videos/2251486618428056/


ஓஸ்லோவின் கடற்கரை பகுதி - நோர்வேஜியன் கடல், அதனைச் சுற்றியுள்ள பல நூறு தீவுகள் இயற்கையின் கொடை. கப்பல் கட்டுவதிலும் நீண்ட தூர கடற்பயணங்களிலும் புகழ்பெற்றவர்கள் நோர்வே நாட்டினர். ஓஸ்லோ நகரிலிருந்து நோர்வேஜியன் கடலின் காட்சிகள்.
-சுபா

ஓஸ்லோ - வைக்கிங் ஊருக்கு ஒரு பயணம் -15












இன்று மதியம் நோர்வே தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஒரு சந்திப்புக்கூட்டம் ஒன்று ஓஸ்லோவில் நடைபெற்றது. தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகள் பற்றியும் தமிழ் ஆவணங்கள் ஆவணப்படுத்தவேண்டியதன் அவசியம் பற்றியும் உரையாற்றியதோடு நோர்வே நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களின் புலம்பெயர்வு தொடர்பான ஆவணப்பதிவுகள் ஏன் காலத்தின் கட்டாயம் என்ற என் கருத்தை முன் வைத்தேன். நோர்வே தமிழ்ச்சங்கத்தின் தலைவர் நிகழ்வினைத் தொடக்கிவைக்க சகோதரர் மு.வேலழகன் அறிமுக உரையாற்றினார். இரண்டரை மணி நேரம் சந்திப்பும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலுமாக இந்த நிகழ்வு அமைந்தது.
-சுபா

Saturday, August 25, 2018

ஓஸ்லோ - வைக்கிங் ஊருக்கு ஒரு பயணம் -14

எனது குறுகிய கால ஓஸ்லோ பயணத்தில் இன்று மதியம் நோர்வே தமிழ் சங்கம் சார்பில் ,Stovner helse stasjon / Nedre Fossum Gård இல், 13.00 - 15.00 வரை சந்திப்பு நிகழ்வு ஒன்றினை நண்பர் மு.வேலழகன் ஏற்பாடு செய்திருக்கின்றார்.
தொடர்புக்கு:
மு.வேலழகன் (+47 45066950)
( நோர்வே தமிழ் சங்கம் சார்பில் )


ஓஸ்லோ - வைக்கிங் ஊருக்கு ஒரு பயணம் -13









Vigeland - சிற்பி Gustav Vigeland உருவாக்கியுள்ள சிற்பப்பூங்காவில்...

ஓஸ்லோ - வைக்கிங் ஊருக்கு ஒரு பயணம் -12







Video URL: https://www.facebook.com/subashini.thf/videos/2250261638550554/

Kon-Tiku Museum
நார்வேயிலிருந்து கடல்வழியே பயணித்து பசிபிக் பெருங்கடலைக் கடந்து இந்த மரக்கலம் கோன்-திக்கி, ரா, டிக்ரிஸ், ஈஸ்டர் தீவுகள் மற்றும் போலினீசியா ஆகிய இடங்களுக்குப் பயணித்தது. வியப்பூட்டும் பல சாதனைகள் பற்றிய ஒரு சிறந்த அருங்காட்சியகம்.

ஓஸ்லோ - வைக்கிங் ஊருக்கு ஒரு பயணம் -11







Video URL: https://www.facebook.com/subashini.thf/videos/2250253708551347/

FRAM - நோர்வே நாட்டிற்குப் புகழ்சேர்க்கும் ஒரு வரலாற்றுச் சாதனை சின்னம். உலகின் எல்லை துருவங்களைக் காணவேண்டும் என செய்த மனித முயற்சி. மிகப்பலமான மரக்கலம். இது உலகின் வட துருவத்திற்கும் தென் துருவத்திற்கும் பயணித்து செய்த சாதனை. இதனைச் செலுத்திய புவியியல் வல்லுனர்கள் ஆகியொரைப் பற்றி விவரிக்கும் அருங்காட்சியகம். முழு கப்பலும் அதில் பயன்படுத்தப்பட்ட அனைத்து கருவிகளும் இங்குள்ளன. ஒரு பிரம்மாண்டம்!

ஓஸ்லோ - வைக்கிங் ஊருக்கு ஒரு பயணம் -10






நார்வே மக்களின் பண்டைய வாழ்வியல் செய்திகளைக் கூறும் அருங்காட்சியகம் Folkemuseum. இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே கிராமங்களை உருவாக்கி நோர்வே மக்களின் வீடுகள், மற்றும் விவசாயம், உடைகள், கால்நடை போன்ற செய்திகள் விரிவாக விளக்கப்படுகின்றன.

ஓஸ்லோ - வைக்கிங் ஊருக்கு ஒரு பயணம் -9








ஓஸ்லோ வைக்கிங் அருங்காட்சியகத்தில்..
850 ஆண்டுகள் பழமையான 2 அரச பரம்பரை பெண்மணிகளின் ஈமச்சடங்கு மரக்கப்பல் மற்றும் அதில் இருந்த சடங்கு பொருட்கள்...
மேலும் பல வெவேறு மரக்கலங்கள். கடலடியில் கண்டெடுக்கப்பட்ட மூழ்கிய வைக்கிங் கலங்கள்..
இப்படி பல..