Sunday, August 26, 2018

ஓஸ்லோ - வைக்கிங் ஊருக்கு ஒரு பயணம் -17









ஓஸ்லோ அரச மாளிகை -​19ம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்ட ​ஒரு அரச மாளிகை. பிரான்சில் பிறந்தவரும் சுவீடன் நோர்வே ஆகிய இரு நாடுகளையும் ஆட்சி செய்தவருமான மன்னன் மூன்றாம் சார்ல்ஸ் கட்டிய மாளிகை இது. தற்பொழுது இந்த அரச மாளிகை நோர்வே மன்னரின் வசிப்பிடமாகவும் உள்ளது. இம்மாளிகையைக் கட்டிய மன்னன் மூன்றாம் சார்ல்ஸின் செம்பினால் உருவாக்கப்பட்ட உருவச்சிலை இந்த மாளிகையின் முன் புறத்தில் அமைந்துள்ளது. இது 1849ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
அரச மாளிகையைச் சுற்றிலும் உள்ள பூங்கா மிக எளிய வகையில் ஆனால் இயற்கை அமைப்பு கெடாத வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஏனைய பல அரச மாளிகைகள் போலல்லாது இந்த அரச மாளிகையின் பூந்தோட்டம் முழுமையையும் பொது மக்களும் வந்து பார்த்து ரசித்துச் செல்லும் வகையில் அனுமதித்திருக்கின்றனர்.
அரச மாளிகையைச் சுற்றி பாதுகாப்புக் காவலர்கள் நிற்கின்றனர். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அரச மாளிகையைச் சுற்றி இவர்கள் அணி செல்கின்றனர்.
அரச மாளிகையைச் சுற்றியுள்ள தோட்டம் முன்னர் காட்டுப் பகுதியாக இருந்தது என்றும் மாளிகை அமைக்கப்பட்டபோது 2000 மரங்கள் இத்தோட்டத்தில் இருந்தன என்றும் பின்னர் அவர் படிப்படியாகக் குறைந்து இன்று ஏறக்குறைய 1000 மரங்கள் சூழ்ந்த பகுதியாக இருக்கின்றது என்றும் அங்குள்ள குறிப்புக்கள் சொல்கின்றன. இன்று நோர்வே நாட்டின் அரசராக இருப்பவர் டென்மார்க் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தற்சமயம் மன்னராக இருப்பவர் மன்னர் ஐந்தாம் ஹரால்ட்.
-சுபா

No comments:

Post a Comment