Tuesday, January 6, 2004

Travelog - Seoul, S.Korea 7

கிம்சி

தென்கொரியர்களின் அன்றாட உணவுப் பழக்கத்தில் கிம்சி மிக முக்கிய அங்கம் வகிப்பதைப் பற்றி முன்னரே தெரிவித்திருந்தேன். அதைப் பற்றி மேலும் சில விபரங்களோடு இந்தப் பகுதியைத் தொடர்கிறேன்.



winter காலங்களில் எல்லா விதமான காய்கறிகளும் பயிரிடப்படுவது கிடையாது. குளிர் -12 டிகிரி வரை செல்வதால் காய்கறி பயிரிடப்படும் இடங்களெல்லாம் பனியில் உறைந்து விடும். (சில நாட்களுக்கு முன்னர் Kwangju செல்லும் வழியில் பணியில் உறைந்திருந்த நெல் வயலைப் பார்த்தேன். பச்சை பசேலென இது வரை நெல் வயலைப் பார்த்துப் பழகிய கண்களுக்கு நெல் வயலை உறைந்து போன நிலையில் பார்ப்பதற்கு மனதிற்குக் கஷ்டமாகத் தானிருந்தது)
அதனால் கோடை அல்லது இலையுதிர் காலங்களிலேயேக் காய்கறிகளைப் பதனிடும் வேலையைத் தொடங்கி விடுகின்றார்கள். காய்கறிகளை மாத்திரம் அல்ல. மீன், பல வகை கடல் வாழ் உணவு வகைகள், இறைச்சி போன்றவற்றையும் இப்படி செய்து வைத்து விடுகின்றார்கள். உப்புக்கண்டம் போடுவது என்று சொல்வார்களே, அப்படித்தான். இதனை கொரிய மொழியில் Gimjang என்று அழைக்கின்றார்கள்.

Gimjang செய்வது பரம்பரை பரம்பரையாக பேணிக் காக்கப்படும் ஒரு முக்கியக் கலையாகவே இருந்து வருகின்றது. ஒரு கொரியருக்கு முக்கியமாக மதிய, இரவு உணவுகளில் கிம்சி இல்லாமல் சாப்பிடுவது என்பது நினைத்தும் கூட பார்க்க முடியாத ஒரு விஷயம். நான் இதுவரை சென்று வந்துள்ள எந்த நாட்டிலுமே பார்த்திராத வகையில் Kimchi Burger, Kimchi Pizza இங்கு பிரத்தியேகமாக கிடைப்பதைப் பார்க்க முடிகின்றது. இந்த Berger, Pizza உணவு வகைகளிலும் கிம்ச்சியை சேர்த்து வைத்திருக்கும் பெருமை கொரியர்களையேச் சாரும்..:-)
ஒரு பேரங்காடியில் வைக்கப்பட்டிருந்த கிம்சி வகைகளைத் தான் இங்கு பார்க்கின்றோம்.

பாரம்பரிய ஓவியக் கலை

கொரியர்களின் பாரம்பரிய ஓவியம் அடிப்படையிலேயே மேற்கத்திய ஓவியக் கலையிலிருந்து வேறுபட்ட ஒன்றாக இருப்பதைப் பார்த்தவுடனேயே தெரிந்து கொள்ள முடியும். அரச மாளிகைகளிலும், இன்றளவும் பாதுகாக்கப்படும் பழங்கால பௌத்த ஆலயங்களிலும் இந்த வகை ஓவியங்களைக் காண முடியும். இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகின்ற சில ஓவியங்களின் காலம் 57 B.C லிருந்து கூட குறிக்கப்படுவதாக சில நூற்கள் குறிப்பிடுகின்றன.
Goryeo Dynasty ஆட்சிக்கு வந்த சமயத்தில் தான் புத்த சமயம் இங்கு பரவி மிகப் பிரபலமாகிக் கொண்டிருந்தது. அப்போது பரவலாக மதக் கோட்பாடுகளையும் தத்துவங்களையும், வாழ்க்கை முறைகளையும் விளக்கும் பல ஓவியங்கள் தீட்டப்பட்டதாம். Confucionism 1392 க்குப் பிறகு கொரியாவில் பரவ ஆரம்பித்த பிறகு சீனர்களின் தாக்கம் கொரிய ஓவியங்களில் பரவலாக வளர ஆரம்பித்தது. ஆனால் இந்த மாற்றங்களெல்லாம் folk art, folk painting இவற்றை எந்த அளவும் பாதிக்கவில்லை என்றே தெரிகின்றது. இன்றளவும் பழமையை விளக்கும் அந்த எளிய ஓவிய முறைகள் கல்லூரிகளிலும் பாடமாகக் கற்றுத் தறப்படுகின்றன.

No comments:

Post a Comment