Saturday, December 3, 2011

திருவண்ணாமலை நினைவுகள்

திருவண்ணாலைக்குப் பயணம் செய்த போது அங்கு பதிவு செய்த சில காட்சிகள் - சிறு விளக்கங்களுடன்.


சென்னையிலிருந்து புறப்படும் போது சாலையில் இடையே நடந்து செல்லும் மாடுகளும் கன்றுக் குட்டிகளும். இவை சாலை நெரிசலைப் பற்றிய கவலையின்றி, மெதுவாக செல்வது வாகனமோட்டுபவருக்கு சிரமத்தைத் தந்தாலும் இவையும் மக்களோடு சேர்ந்து அவற்றின் வேலைகளை மட்டும் மனதில் நினைத்துக் கொண்டு சாலையை மறைத்துக் கொண்டு நடப்பது என்னைப் போன்ட் சுற்றுப் பயணிகளுக்கு கண்களுக்கு விருந்து.

செங்கல்பட்டு செல்லும் வழியில் அமைந்திருக்கும் விருந்தினர் ஓய்வு விடுதி. இங்கு காலை உணவு சாப்பிட்டு பயணித்தோம்.

மூன்று பெண்களும் காலை உணவை ஆர்டர் செய்து விட்டு காத்திருக்கிறோம்.. பொங்கல் இட்டலி காப்பி.. வடை.. நல்ல காலை உணவு விருந்து.

செல்லும் வழியில்.. செஞ்சிக் கோட்டைக்கு முன்னே..நான்!




நாங்கள் இரண்டு நாட்கள் தங்கியிருந்த விருந்தினர் மாளிகை. நேர்த்தியான தூய்மையான கட்டிடம். ரமணாஸ்ரமத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது.

சீதாம்மா கொடுத்த நூலை வாசித்து திருவண்ணாமலை சிறப்புக்களை தெரிந்து கொள்கிறேன்.

திட்டம் போட வேண்டாமா..? எங்கு முதலில் செல்வது..? எப்போது புறப்படுவோம் என ஆலோசனை நடக்கின்றது.




செங்கம், செல்லும் சாலையில்.. இருவர் ஒரு மாட்டை மோட்டார் சைக்கிளில் வைத்து ஏற்றிக் கொண்டு செல்கின்றனர். எதற்காக .. தெரியவில்லை!



புரிசைக்கு செல்லும் வழியில் வரிசையாக மகளிர் அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர்.. ஏதாவது மகளிர் மாநாடாக இருக்குமோ ?

வண்ண வண்ண சேலையில் பெண்கள்.

புரிசை கிராமத்து ஆண்கள்.. ஓய்வு நேரத்தில் தாயம் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அருகில் நெல்லை கொட்டி காய வைத்திருக்கின்றனர்.

மகளிர் புரிசை கிராமத்து சிவன் கோயிலின் வாசலை கோலம் போட்டு அழகு செய்கின்றனர் அந்த மாலை வேளையில்.

இந்தப் பெண் குழந்தைகள் தங்களுக்குத் தெரிந்த கோலத்தை போட்டு மகிழ்கின்றனர்.

புரிசை கிராமத்து தேனீர் கடை.


புரிசை கிராமத்து இளம் சிறார்கள்.. காலில் மண்.. முகமெல்லாம் புன்னகை.. தங்களை நான் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை நான் மறுக்காமல் எடுத்துக் காட்டினேன். படத்தைப் பார்த்து அவர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி.


புகைப்படம் எடுக்கனும்னா இப்படியா வெட்கப்படுவது சீத்தாம்மா..? :-)

1 comment:

geethasmbsvm6 said...

மாட்டை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டுப் போவாரா இருக்கும். அதாலே நடக்க முடியலை போலிருக்கு. வேறே வண்டி கிடைச்சிருக்காது. :(

Post a Comment