நிலவு தோன்றுதலும் சூரியன் மறைதலும்
நிலவு தோன்றுவதும் சூரியன் மறைவதும் எல்லா இடங்களிலும் நடப்பதுதானே. இதனை லா பல்மாவில் இருந்த ஒரு நாள் ஒரு மாலையில் ஏறக்குறை 30 நிமிட இடைவேளையில் பதிவாக்கினேன். முதலில் மேகங்களிலிருந்து வெளி வந்து எட்டிப் பார்க்கும் நிலவு.
மேகக்கூட்டம் விலகி விட தெளிவாகத் தெரியும் நிலவு.
சில நிமிடங்களில் சூரியன் மறைகின்றது.
தென்னைமரங்கள் இருப்பதும் மறையும் சூரியனின் அழகை மேலும் அதிகரிப்பதாகத் தான் உள்ளது.
சூரியனை மிக அருகாமையில் பார்க்க எடுத்த முயற்சி!
சூரியன் கடலுக்குள் புதைந்து கொள்கின்றதா..?
மழை மேகம் சூழ்ந்தாலும் சூரியனின் எழில் மிகு வடிவம் தன்னை முழுதாக மறைத்துக் கொள்ள வில்லை. பேரழகு!
2 comments:
நிலவும் சூரியனும்!!! சூரியன் மறைவதை அற்புதமாகப் படமாக்கியுள்ளீர்கள்.
சூரியன் மறையும்போது வெளிவரும் வண்ணக்கலவைகள் இதுவரை எந்த ஓவியனும் தீட்டாத ஒன்று.
Post a Comment