Wednesday, May 16, 2012

லா பல்மாவில் நடையாக நடந்த கதை - 4

முதல் ட்ரேக்கிங் பயணம்
சைக்கிள் பயணம் செல்வதாக திட்டமிட்டிருந்தாலும் மலைகள் சூழ்ந்த லா பல்மா தீவில் அது அதிக பயிற்சி செய்தவர்களுக்கு சாத்தியப்படும் என்பதால் நாங்கள் அந்த முடிவை மாற்றிக்  கொண்டோம். கையோடு கொண்டு சென்றிருந்த லா பல்மா கையேட்டில் 20 சிறந்த ட்ரேக்கிங் பாதைகள் பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டிருந்தன. அவை ஒவ்வொன்றும் ஒரு நாள் பயணம் என்ற வகையில் திட்டமிடப்பட்டிருந்தவை. அந்த வகையில் எங்கள் தங்குமிடத்திற்கு அருகாமையிலேயே முதல் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்து கொண்டோம். முதல் பயணம் கல்டேரா டி டப்ரியெண்ட (Caldera de Tabriente) மலைத்தொடரின் நடுப்பகுதியைல் அமைந்த ஒன்று.

இப்படத்தில் La Caldera de Tabriente  என்ற பகுதியின் அடிவாரம் தான் நாங்கள் முதல் ட்ரேக்கிங் பயணம் செய்த இடம்

கல்டேரா டி டப்ரியெண்ட மத்தியில் எரிமலையின் வெடித்த பள்ளம் அமைந்துள்ளது. அதனைச் சுற்றி 9 கிமீ நடைப்பயனம் இது. 

எங்கள் வாகனத்தை இந்தப் பயண வழிகாட்டியில் குறிப்பிட்டிருந்தது போல தொடக்கப் பகுதியில் ஆரம்பிக்காமல் சுற்றுலா பயணிகள் அலுவலகம் இருக்கும் இடத்தின் ஆரம்பத்திலேயே நிறுத்தி விட்டு அங்கிருந்தே செல்வோம் என முடிவு செய்தோம். இதற்கு காரணம் முதலில் 9 கிமீ தூரம் என்றவுடன் இது 3 மணி நேரங்களில் முடித்து விடக்கூடிய ஒன்றுதானே. அதிலும் பைன் மரங்களாக நிறைந்திருக்கும். ஆனால் கீழேயிருந்து பார்த்துக் கொண்டே சென்றால் வித்தியாசமான நிலப்பரப்பையும் பார்த்த மாதிரியிருக்கும் என்று நினைத்து  சுற்றுலா பயணிகள் அலுவலகம் இருக்கும் இடத்திலிருந்து தொடங்கினோம். இது எல் பாசோ (El Paso)  என்ற நகரில் உள்ளது. சாலையில் செல்லும் போதே இந்த சுற்றுலா பயணிகள் அலுவலகம் இருக்கும் இடத்திற்கான குறிப்பும் வழங்கப்பட்டிருக்கின்றது.

வாகனத்தை அங்கே நிறுத்தி விட்டு பயணத்தைத் தொடங்கினோம்.

கல்டேரா டி டப்ரியெண்டட்ரேக்கிங் பயணம் ஆரம்பிக்கும் இடத்திற்கு இங்கிருந்து 6 கிமீ தூரம்.வழியில் தென்படும் பறந்த வெளிகள் அங்கு புல்மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை பார்த்துக் கொண்டே சென்றோம். 

Inline image 5

அச்சாலைகளில் இருந்த இல்லங்களிலெல்லாம் காக்டஸ் வகை செடிகள் வீட்டில் வளர்ப்பதைக் காண முடிகின்றது.

Inline image 6

இங்கு ஆரஞ்சு மரமும் சாத்துக்குடி மரமும் நன்கு விளைகின்றன. ஆக ஒவ்வொரு நிலம் உள்ள வீட்டிலும் மரம் முழுக்க ஆரஞ்சு பழங்கள் காய்த்து குலுங்குகின்ற மரங்களையும் மஞ்சள் நிற சாத்துக்குடி பழங்கள் காய்த்துக் குலுங்கும் மரங்களையும் காண முடிகின்றது. இது கண்கொள்ளாக் காட்சி.

Inline image 7

ஒரு வழியாக நடந்து கல்டேரா டி டப்ரியெண்ட மத்தியப் பகுதி ட்ரேக்கிங் ஆரம்பிக்கும் இடம் வந்து சேர்ந்தோம். அங்கு ஒரு ஆப்பிள் பழத்தைச் சாப்பிட்டு சற்று ஓய்வும் எடுத்துக் கொண்டு பயணத்தைத் தொடங்கினோம்.

இது சமமான தரை அல்ல. கொஞ்சம் கொஞ்சமாக மேலே செல்லும் ஒரு ட்ரேக்கிங் பாதை.

Inline image 8

பாதை மிகச் செம்மையாக அமைத்திருக்கின்றனர். அதிகமான வேலைப்பாடு இல்லை. ஆனால் சற்று பிடிகள் அமைத்து ஓரங்களைச் சரி செய்து சறுக்கலான பகுதிகளில் பெரிய கற்களைப் போட்டு செல்பவர்கள் பத்திரமாகச் செல்லும் வகையில் ஏற்படுத்தியிருக்கின்றனர். ஒரு வகையில் நாங்கள் செய்த ஐந்து வகை வெவ்வேறு ட்ரேக்கிங் பயணங்களில் இதுவே மிகச் சுலபமான பாதை என்று சொல்லலாம்.

Inline image 9

மேலே செல்லச் செல்ல பைன் மரங்களையும் எரிமலைச் கற்பாறைகளையும் பார்த்துக் கொண்டே செல்லலாம். ஏறக்குறைய 40% பாதை ஒருவர் செல்லக்கூடிய வகையில் அமைந்ததாக இருக்கின்றது. உயரம் செல்லும் போது மலைகளில் வளர்ந்துள்ள செடிகளின் தன்மை வேறுபடுவதைக் காண முடிகின்றது. கீழ்ப்பகுதியில் இருந்த காக்டஸ் வகைச் செடிகள் மேலே செல்லச் செல்ல இல்லாமல் குறைந்து விட்டன என்று சொல்லலாம்.

நாங்கள் காலை 10 மணியளவில் பயணத்தைத் தொடக்கியதால் மதியம் இரண்டு மணியளவில் சென்றடைய வேண்டிய பகுதியை அடைந்தோம். இது கல்டேரா டி டப்ரியெண்ட்-வின் நேஷனல் பார்க் என்பதால் இங்கு கடைகளோ விற்பனை நிலையங்களோ ஏதும் கிடையாது. இயற்கை.. இயற்கை.. இயற்கை.. அது மட்டுமே!


வழியில் வரும் போது ஒரு சற்று வயதான ஜெர்மானிய தம்பதிகளைச் சந்தித்தோம். இடையில் நின்று சிறுது அளவலாவி விட்டு பயணத்தைத் தொடர்ந்தோம். மீண்டும் வழியில் மற்றுமொரு ஜோடி நடந்து சென்று கொண்டிருந்தனர். இதைத் தவிர ஆட்களையே அங்கே காண முடியவில்லை. 

Inline image 10
அன்று சீதோஷ்ணம் கீழ்ப்பகுதியில் 24 டிகிரி இருந்தது. ஆனால் மேலே செல்லச் செல்ல குறைந்து 18 டிகிரி வரை சென்றது.  இந்த மாதத்தில் ஏறக்குறைய இவ்வகை சீதோஷ்ணம் தான் எல்லா கனேரித் தீவுகளிலும் அமைந்துள்ளது.

மேலும் சில படங்கள்..
































அன்புடன்
சுபா




6 comments:

விச்சு said...

அருமையான பயணம்.வீடும் அதில் அமைந்துள்ள காக்டஸ் வகை செடிகளும் பார்க்க அழகாக உள்ளன.இயற்கை ..இயற்கை..இயற்கை மட்டுமே. பார்க்க கண்கோடி வேண்டும்.இது லா பல்மாவில் நடையாக நடந்த கதை - 3 தானே.

Dr.K.Subashini said...

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
இல்லை.. இது நான்கு தான். மூன்றை இணைக்கவில்லை. இன்று இணைத்து விடுவேன். மின் தமிழ் மடலாடற் குழுவில் இவற்றைப் பதிப்பித்து வருகிறேன். நீங்கள் மின் தமிழில் இன்னமும் உறுப்பினர் ஆகவில்லையென்றால் ஆகிவிடுங்கள்.
அன்புடன்
சுபா

விச்சு said...

மின் தமிழில் எப்படி உறுப்பினர் ஆவது. ப்ளீஸ் லிங்க் அனுப்புங்கள். c.marimuthu1@gmail.com

Murugeswari Rajavel said...

அழகிய பதிவு.ஆனந்தம் மலர்கிறது,இயற்கையின் எழிலைக் கண்டு.பூமியில் இயற்கையின் வனப்பு பல இடங்களில் இருந்தாலும் உங்கள் பதிவின் வழியாக அதைக் கண்டு ரசித்தோம்.
மின்தமிழில் உறுப்பினர் ஆவது குறித்து எனக்கும் சொல்லுங்கள்.

Dr.K.Subashini said...

திரு.விச்சு

தாமதமான மடலுக்கு வருந்துகிறேன். இடையில் அலுவலக வேலை.. நமது தமிழ் மரபு அறக்கட்டளை தொடர்பாக லண்டன் பயணம்.. பின்னர் மீண்டும் வேலைகள் என அமைந்ததில் உடன் பதில் போட முடியவில்லை. உங்கள் மின்னஞ்சல் முகவரியை இப்போது தான் மின் தமிழில் இணைத்தேன். நீங்கள் அழைப்பை ஏற்றுக் கோண்டு மின் தமிழில் கலந்துரையாடல் செய்யலாம்.

அன்புடன்
சுபா

Dr.K.Subashini said...

திரு/திருமதி முருகேஸ்வரி ராஜகோபால்,

உங்கள் கருத்துக்கு என் நன்றி.
உங்கள் மின் அஞ்சல் முகவரியைத் தந்தால் அதனை நான் மின் தமிழில் இணைத்து வைக்கலாம்.

அன்புடன்
சுபா

Post a Comment