Friday, January 18, 2019

நோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 7

வைக்கிங் கால தேவாலயம்
இன்றைக்கு ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் பழமையான இத்தேவாலயம் இன்றும் அதன் சிறப்பு குறையாமல் காட்சியளிக்கின்றது.
நோர்வே - க்ரான் மாநிலத்தில்.
இங்கு வாசலில் உள்ள குறியீட்டுக் கல் நோர்வேயின் பண்டைய தலைநகரமான ட்ரோன்னியம் இங்கிருந்து 500 கிமீ தூரம் என்பதைக் காட்டுகிறது.








நோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 6

19 மாநிலங்கள் கொண்ட நாடு. ஓஸ்லோ இதன் தலைநகரம் .ஒஸ்லோ தனி மானிலம் என்ற வகையிலும் அமைந்துள்ளது.
இன்று ஓஸ்லோவிலிருந்து கிழக்கு நோக்கி மேலும் 2 மாநிலங்களைக் கடந்து க்ரான் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டேன். கடல்பரப்பிலிருந்து. 300 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் ஒரு பகுதி இது.














Thursday, January 17, 2019

நோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 5

நார்வே நாட்டிற்கு 1956ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து மோட்டார் சைக்கிளில், நில வழியாக பல நாடுகளை கடந்து வந்தவர் அந்தோணி ராஜேந்திரன். அவரது பயணம்.. அவர் நோர்வே நாட்டில் ஏற்படுத்திய இலங்கை தொடர்புகள் ... நோர்வே இலங்கை வர்த்தக முயற்சி பற்றி ஒரு பேட்டியை அவருடைய உறவினர் கூற இன்று பதிவு செய்தோம் .இன்று அவர் மறைந்து விட்டார்.. ஆனாலும் நார்வே வரலாற்றில் இடம்பெறும் இலங்கையிலிருந்து வந்த முதல் இலங்கைத்தமிழர் என்ற பெருமைக்குரிய Anthony ராஜேந்திரன் வரலாற்றினை உலகத் தமிழர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.










நோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 4

நோர்வே அரச சாசனம் 1814ம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது. Eidsvolls bygningen நகரில் உள்ள Carsten Anker இல்லம் இது. இங்குதான் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இந்த இல்லத்தில் தான் நிகழ்ந்தது. இவரது சகோதரர் பீட்டர் அங்கர் தமிழகத்தின் தரங்கம்பாடியில் டானீஷ் இந்தியா வர்த்தக நிறுவனத்தின் இயக்குனராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கட்டிடத்தில் கார்ஸ்டன் அங்கர் தமிழக சூழலை ஓவியமாக வரைந்திருக்கிறார். அதனை இங்கு காணலாம்.
தமிழக தொடர்பால் இந்திய ஏலக்காய் கிராம்பு ஆகியவையும் நோர்வே உணவு வழக்கில் இணைந்தது.
-சுபா














நோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 3

நார்வே அரசியல் சாசனம் 1814ம் ஆண்டு எழுதப்பட்ட மாளிகை வளாகத்தில்














நோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 2

வானிலிருந்து ...
நோர்வேயின் ஒஸ்லோ நெருங்கும் காட்சிகள்

https://www.facebook.com/subashini.thf/videos/2342340439342673/










நோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 1

நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் இயங்கிவரும் நோர்வே தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா வருகின்ற சனிக்கிழமை நடைபெறுகின்றது. நிகழ்ச்சியில் உரையாற்ற இன்று ஓஸ்லோ புறப்படுகின்றேன்.
ஏறக்குறைய 12,000 தமிழ் மக்கள் நோர்வேயில் வாழ்கின்றனர். இங்கு தமிழ் அமைப்புகள் தமிழ்ப்பள்ளிகளை அமைத்து சிறப்புடன் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.


-சுபா