Saturday, January 19, 2019
நோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 13
Skimuseum - பனிச்சறுக்கல் தொடர்பான தகவல்களை வழங்கும் ஒரு அருங்காட்சியகம் இது .மக்களோடு மன்னர் குடும்பமும் சேர்ந்து பல்வேறு வகையில் பணி தொடர்பான நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட தகவல்களை இந்த அருங்காட்சியகம் ஆவணப்படுத்தியுள்ளது. நோர்வே மற்றும் ஏனைய நாடுகளில் பனியில் பயணம் செய்தல் ...அதற்கு தேவைப்படும் கருவிகள்.. விளையாட்டு தொடர்பான சாதனங்கள் வடதுருவம் தென்துருவம் ஆகியவற்றிற்கான பயணங்கள் ... என பல தகவல்களை இந்த அருங்காட்சியகம் ஆவணப்படுத்தியுள்ளது.
நோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 12
Holmonkollbacken பனிச்சறுக்கு விளையாட்டு மைதானம் .70000 பார்வையாளர்கள் அமரக்கூடிய மைதானம் இங்கு உள்ளது . Holmenkollbacken பனிச்சறுக்கு மைதானம். 1904ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மைதானம் உலகப் புகழ்பெற்ற வகையில் அமைந்துள்ளது. உலகின் பல நாடுகளில் இருந்து பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடும் விளையாட்டாளர்கள் இங்கு போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். மேலும் சில காட்சிகள்அதன் மேல் உயரத்தில் இருந்து சில காட்சிகள்.
https://www.facebook.com/subashini.thf/videos/2343840355859348/
https://www.facebook.com/subashini.thf/videos/2343843579192359/
https://www.facebook.com/subashini.thf/videos/2343843875858996/
நோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 11
ஐக்கிய நாடுகள் சபையின் முதலாம் பொதுச் செயலாளர் நார்வேயைச் சேர்ந்தவர். இவரது பெயர் Trygve Lie. 1948 முதல் 1953 வரை இவர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளராக பதவி வகித்தார் . இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் இருந்த அரசியல் சூழல் எத்தகைய கடுமையானதாக இருந்திருக்கும் என்பதை எல்லோராலும் ஓரளவு ஊகிக்க முடியும் . இவர் 1940 முதல் 1946 வரை நோர்வேயின் வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றியிருக்கின்றார். அவரது இல்லம் என்று நார்வேயின் முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது.
நோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 10
இரண்டு மாகாணங்களுக்கு இடையேயான எல்லையை நிர்ணயம் செய்யும் ஒரு நினைவுச்சின்னம் இது. பண்டைய காலத்தில் மன்னரால் இரண்டு மாகாணங்களுக்கு இடையேயான எல்லையை குறிப்பிடுவதற்காக நிறுத்தப்பட்ட நினைவுச்சின்னம். இன்று பண்டைய சட்டம் புழக்கத்தில் இல்லை என்றாலும் பாதுகாக்கப்படும் ஒரு புராதன சின்னமாக சாலையில் இந்த நினைவுச் சின்னம் அப்படியே உள்ளது.
Friday, January 18, 2019
நோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 9
புராணங்கள் இல்லாத மனிதர்கள் உண்டா?
நோர்வே மக்களின் வாழ்விலும் கர்ண பரம்பரைக் கதைகள் சில உள்ளன. இங்கு ட்ரோல் எனும் கதாபாத்திரம் பெரிதும் அறியப்பட்ட ஒரு கதாபாத்திரம். வயதான பெரிய பூதம் போன்ற வடிவில் இந்த புராணப்பாத்திரம் காட்டப்படுகின்றது. குழந்தைகளைப் பயமூட்டுவதற்காக இந்தக் கதாபாத்திரம் கையாளப்படுவதாகவே அறிகிறேன். நோர்வே மலைப்பகுதிகளில் உள்ள கிறிஸ்மஸ் மரங்களின் மேல் பனி படர்ந்திருக்கும் போது பார்ப்பதற்கு ஒரு பூதம் போலத்தான் இருக்கிறது. அதனை மனதில் கொண்டுதான் இந்த ட்ரோல் பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். பொதுவாகவே ஒரு பெண் குழந்தையை வைத்துக் கொண்டிருப்பது போல இது காட்டப்படுகின்றது. ஹோல்மன்கோல்லென் பகுதியில் நான் பார்த்த ஒரு ட்ரோல் சிலையையும் பனி படர்ந்த கிறிஸ்மஸ் மரங்கள் பூதம் போன்று காட்சி அளிக்கும் ஒரு படத்தையும் காணலாம்.

நோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 8
Sister Churches (Sosterkirkene) - 2 தேவாலயங்கள் பக்கத்துக்குப் பக்கம் என அமைக்கப்பட்டுள்ளன. 12ம் நூற்றாண்டு (கி.பி.1150 மற்றும் கி.பி.1200) கட்டுமானம். க்ரான் (Gran) மானிலத்தின் க்ரனவொல்லென் (Granavollen) கிராமத்தில் இந்த தேவாலயங்கள் உள்ளன. இங்குள்ள வழக்கத்தின்படி இரண்டு சகோதரிகள் கட்டியதாக குறிப்பிடப்படுகின்றது. 1912ம் ஆண்டிலும் பின்னர் 1990 இந்த தேவாலாயங்கள் இருமுறை சீரமைக்கப்பட்டு இன்று மிகச் சிறப்பாகக் காட்சியளிக்கின்றன. இந்த இரண்டு தேவாலயங்களுக்கு அருகில் மயானமும் ஒரு கற்கோபுரமும் உள்ளது.
Subscribe to:
Posts (Atom)