Thursday, April 18, 2019

ரொமேனியா பயணம் - 3- வரலாறு

ரொமேனியாவின் பல பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகள் இந்த நிலப்பகுதியில் ஏறக்குறைய கி.மு.8000 காலகட்டத்தில் மனித இனம் வாழ்ந்த ஒரு பகுதியாக சான்று பகர்கின்றன. கி.மு. 600 வாக்கில் பண்டைய கிரேக்கர்கள் இந்த நிலப்பகுதியில் வணிகத்திற்காக வந்து சென்ற அடையாளங்கள் அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன. இவர்களில் பலர் கருங்கடல் பகுதிகளிலேயே தங்கி இப்பகுதி மக்களாகவே வாழத்தொடங்கினர்.

ரோமானியர்களோ ரொமேனிய மக்களை டாசியன் என்ற பெயரில் அடையாளப்படுத்தினர். படிப்படியாக இப்பகுதியின் வர்த்தகம் புகழ்பெறவே பல நாட்டினர் ரொமேனியாவிற்கு வரத்தொடங்கினர். பல இனக்குழு மக்கள் இங்கேயே தங்கிவிட்டனர்.

கி.பி 14ம் நூற்றாண்டு வாக்கில் தான் பல சிறு நகரங்களும் ஊர்களும் ராடு நேக்ரு (1310-1352) வினால் ஒருங்கினைக்கப்பட்டு வாலாச்சியா என்ற பெயரில் இப்பகுதி விளங்கியது. பின்னர் மொல்டோவியா என்ற பகுதி உருவானது. இன்று மொல்டோவியா ஒரு தனி நாடாகத் திகழ்கின்றது.

கி.பி15ம் நூ ஓட்டோமான் பேரரசின் துருக்கியப் படைகள் இப்பகுதியைத் தாக்கின. இந்தக் காலகட்டத்தில் மன்னராக இருந்தவர் தான் விலாட் என்ற மன்னன். இன்று நாம் அறிந்த ட்ராகுலா பேய் கதைக்கு நாயகன் இவன்.

கி.பி.17, 18ம் நூற்றாண்டில் வாலாச்சியாவும் மொல்டோவியாவும் துருக்கியின் ஆளுமைக்குள் வந்தன. பல அரசியல் மாற்றங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. கி.பி.1859ம் ஆண்டு இந்த 2 பெரிய மாவட்டங்களும் இணைக்கப்பட்டு புதிய நாடான ரொமேனியா பிறந்தது.

1877ம் ஆண்டு துருக்கியிடமிருந்து ரொமேனியா சுதந்திரம் பெற்றது. கி.பி.1881ம் ஆண்டு ரொமேனியா ஒரு பேரரசாக மாற்றம் கண்டது. அதன் முதலாம் பேரரசராக மன்னர் முதலாம் கார்ல் முடிசூட்டிக் கொண்டார்.

முதலாம் இரண்டாம் உலகப் போர் ரொமேனியாவுக்கு குறிப்பிடத்தக்க பாதிப்பினை ஏற்படுத்தியது. 2ம் உலகப் போரின் போது ஜெர்மனி-ஜப்பான் கூட்டு நாடுகளுடன் தனது நட்பை நிலை நாட்டியது ரொமேனியா.

1943ம் ஆண்டுக்குப் பின்னர் ரஷிய படைகள் ரொமேனிய எல்லைக்குள் புகுந்து ஆக்கிரமித்துக் கொண்டன. கம்யூனிச ஆட்சி 1947க்குப் பின் உருவானது. 1958 வாக்கில் ரஷிய படைகள் ரொமேனியாவை விட்டு வெளியேறின. உள்ளூரில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, பல அரசியல் சலசலப்புக்களை தொடர்ந்து வழங்கி வந்த நிலையில் திடீரென்று ரொமேனியாவின் கம்யூனிச அரசு 1989ம் ஆண்டு வீழ்ச்சி கண்டது. நாடாளுமன்றத்துடன் கூடிய பார்லிமண்ட் அதனைத் தொடர்ந்து அமைந்தது. 2004ம் ஆண்டில் ரொமேனியா நாட்டோ உறுப்பு நாடுகளில் ஒன்றாக இணைந்தது. அடுத்து 2007ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது.

ரொமெனியவின் இன்றைய பிரதமர் வியோரிக்கா டான்சிலா என்ற பெண்மணியாவார். ரொமேனியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையும் இவருக்குண்டு.
-சுபா






ரொமேனியா பயணம் - 2- பேருந்து பயணம்

மத்திய கிழக்கு ஐரோப்பாவின் நாடுகளில் ஒன்று ரொமேனியா.
பொதுவாக பலர் ரொமேனியாவையும் ரோம் நகரத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்வார்கள். ரோம் நகரம் பண்டைய ரோமானியப் பேரரசின் மையமாகத் திகழ்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நகரம். இன்றைய இத்தாலியின் தலைநகரம்.
ரொமேனியா மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்று. ஏறக்குறைய 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாடு. உக்ரேன், புல்காரியா, ஹங்கேரி, செர்பியா ஆகிய நான்கு நாடுகளை எல்லையாகக் கொண்டும் கருங்கடலை ஒரு பகுதியில் எல்லையாகவும் கொண்ட நாடு இது.
ஐரோப்பாவின் 10 நாடுகளைக் கடந்து செல்லும் டனூப் நதி ரொமேனியாவின் நிலத்திற்கும் வலம் சேர்க்கின்றது. அடுத்த 4 நான்கு நாட்கள் ரொமேனியாவின் தலைநகர் புக்காரெஸ்ட் நகரில் ..அவ்வப்போது இந்த நகருக்கு தொடர்புள்ள சில வரலாற்றுச் செய்திகளை வாய்ப்பு கிடைக்கும்போது புகைப்படங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
காலையில் விமான நிலையம் வந்து இறங்கி பேருந்தில் புகாரஸ்ட் நகர் நோக்கி பயணித்த போது எடுத்த புகைப்படங்கள் சில..பொருளாதார ரீதியாக ஏழ்மையான நாடு என்பது விமான நிலையத்திலிருந்து சாலையில் செல்லும் போதும் ஒவ்வொரு இடத்திலும் பிரதிபலிக்கின்றது.
-சுபா




ரொமேனியா பயணம் - 1

Subashini Thf is feeling fresh.
அடுத்த சில நாட்கள் ரொமேனியா தலைநகர் புக்கரெஸ்ட் (Bucharest) நகரில்...
சில அலுவலகப் பணிகள் ... அதோடு.. சில வரலாற்று தேடல்கள்..


Monday, April 1, 2019

சிங்கை பயணம் - மார்ச் 2019: 17

கடந்த வாரம் சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஆண்டு விழா மற்றும் முத்தமிழ் விழா நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தேன். விழா குழுவினருடன் மற்றும் எழுத்தாளர் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்று சேவையாற்றியோருக்கு நினைவு பரிசுகளை வழங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில..






























சிங்கை பயணம் - மார்ச் 2019: 16

சிங்கப்பூர் தேசிய அருங்காட்சியகம்.
1849 ஆம் ஆண்டு முதல் வரலாற்று ஆவணங்களைச் சேகரித்து அருங்காட்சியமாகப் படிப்படியாக செயல்பட்டு வரும் சிங்கப்பூரின் மிக முக்கிய அருங்காட்சியகம் இது.
சிங்கப்பூர் வரலாறு.. மலேசியாவிலிருந்து சிங்கை பிரிந்த வரலாறு.. சிங்கையில் வணிகம்.. வணிகத்தில் தமிழர்களின் பங்கு சிங்கையில் இருந்து வெளிவந்த பத்திரிகைகள்...அவை கூறும் பல்வேறு அரசியல் செய்திகள்.. அதுமட்டுமன்றி சிங்கப்பூரின் புவியியல் தன்மைகள்... மிகப் பழமையான தொல்லியல் கண்டுபிடிப்புகள் ...மக்களின் வாழ்வியல் தொடர்புடைய தகவல்கள் என ஏராளமான தகவல்களை கொண்டிருக்கும் இந்த தேசிய அருங்காட்சியகம் சிங்கப்பூருக்கு பெருமை சேர்க்கும் மிக முக்கிய வரலாற்று கட்டிடம்.






















சிங்கை பயணம் - மார்ச் 2019: 15

Garden of the bay
தோட்டக்கலையில் ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயமாக இந்த கண்கவர் வடிவங்களை ரசிப்பார்கள். இயற்கைக்கு இயல்பான அழகு உண்டு. ஆயினும் அந்த இயற்கையை சற்று வடிவமைத்து கைத்திறனைக் காட்டி பல்வேறு வடிவங்களை உருவாக்கும் திறனும் இக்காலத்தில் வளர்ந்திருக்கின்றது.
சிங்கப்பூரில் உள்ள இந்த் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற பல்வேறு வடிவங்களை பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம். காளான்களுக்காக ஒரு தனிப்பகுதி உள்ளது . மண்ணின் தோழர்களான பல்வேறு வகை பூச்சிகளை பற்றியும் அறிந்துகொள்ள தகவல்கள் உள்ளன.
எப்போதும் பல்வேறு வகையான சிந்தனைகளில் மூழ்கி கிடக்கும் நாம் அவ்வப்போது அவற்றில் இருந்து விடுபட்டு பசுமையை ரசிப்போம்.





















சிங்கை பயணம் - மார்ச் 2019: 14

Garden of the bay
இயற்கையின் அழகை வெல்வதற்கு உலகில் வேறு ஒன்றும் இல்லை. சிங்கப்பூரின் தெற்குப் பகுதி கண்கவர் பூந்தோட்டம் இந்த இடம். மூன்று மணி நேர நடை.. பல்வேறு வகை தாவரங்கள்.. ஆயிரக்கணக்கானவை இங்கு மிக அழகிய வகையில் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றன.
தாவரங்களை பார்க்கும்போதும், தாவரங்களுடன் நேரத்தை செலவிடும் போதும் நமது மனம் நிறைவு கொள்கிறது . அமைதி அடைகிறது..
இயற்கையின் ஒரு அங்கம் நாம்.
இயற்கையை ரசிப்போம்.
-சுபா



https://www.facebook.com/subashini.thf/videos/2389849834591733/