Friday, April 19, 2019

ரொமேனியா பயணம் - 10- ரோமானிய அரசின் சின்னங்கள்

ரொமேனியாவின் தேசிய அருங்காட்சியகம். அதன் ஒரு பகுதி பண்டைய ரோமானிய அரசின் சின்னங்கள் பலவற்றைக் பாதுகாக்கும் பகுதி ..இங்கு எதைப்பார்த்தாலும் தங்கம் தங்கம் தங்கம் தான்...  இப்பகுதியில் கிமு 2, கிமு 1 வாக்கில் அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பல்வேறு வகை தங்க ஆபரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்குள்ள பிரமிக்க வைக்கும் ஒரு பொருள் என்னவென்றால் தங்கத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு புத்தகத்தின் முழு அட்டை பகுதி. அதன் வீடியோவை இணைத்திருக்கின்றேன் பாருங்கள். இது கிபி 16 வாக்கில் உருவாக்கப்பட்டது.

https://www.facebook.com/subashini.thf/videos/2402193510024032/





ரொமேனியா பயணம் - 9- புக்காரெஸ்ட்

புக்காரெஸ்ட் ரொமேனியாவின் தலைநகரம்.
இந்த ஊரின் பெயர் இன்று கிடைக்கின்ற ஆவணங்களின் அடிப்படையில் கி.பி 1459 வாக்கில் இதே பெயருடன் இந்த நகர்ம் விளங்கியதைக் குறிக்கின்றது. மன்னன் 3ம் விலாடின் அரண்மனை ஒன்றும் இங்கு இருந்தது. அனேகமாக கி.பி 1290- 1300ல் ஆட்சி செய்த ராடு நாக்ரு உருவாகிய நகரமாக இது இருக்கலாம் என்பது வரலாற்றாசிரியர்களின் கருத்து.
ஓட்டோமான் பேரரசின் தாக்கத்தினால் இன்றும் இப்பகுதியில் அதிக துருக்கியர்கள் வாழ்கின்றனர். அழகிய கட்டுமான அமைப்புடன் உருவாக்கப்பட்ட கட்டிடங்கள் நிறைந்த ஒரு நகரம் புக்காரெஸ்ட். பல்கலைக்கழகம், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், ஏராளமான உணவகங்கள் என மிக பிசியாகக் காட்சியளிக்கின்றது புக்கரெஸ்ட்.
-சுபா






ரொமேனியா பயணம் - 8- நாடாளுமன்றக் கட்டிடம்

ரொமேனியா நாடாளுமன்றக் கட்டிடம்
இது ஒரு அரண்மனை வடிவில் கட்டப்பட்டுள்ளது. 6000 அறைகள் கொண்ட ஒரு கட்டிடம் இது. அமெரிக்காவின் பெண்டகன் கட்டிடத்திற்கு அடுத்து மிகப் பெரிய எண்ணிக்கையில் அறைகளைக் கொண்டு அமைந்த கட்டிடம் இது. பிரமாண்ட கட்டிடம். மேலே 12 தளங்கள் கீழே பாதாளத்தில் 12 அடுக்குகளில் கட்டிடத்தின் கீழ் பகுதி அமைந்துள்ளது. ரொமேனியா கம்யூனிஸ ஆட்சி காலத்தில் இந்த வளாகம் கட்டப்பட்டது. இவ்வளவு பெரிய ஒரு கட்டிடமா என வியக்க வைக்கின்றது. தற்சமயம் சில புனரமைப்பு வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் உள்ளே சென்று காண வாய்ப்பு அமையவில்லை. வெளிப் பகுதியில் இருந்து எடுத்த சில புகைப்படங்கள் மட்டும்.

https://www.facebook.com/subashini.thf/videos/2402175453359171/





ரொமேனியா பயணம் - 7- ஜிப்சி

சிந்து நதிக்கரையில், அதாவது இன்றைய பாக்கிஸ்தான் நிலப்பகுதியில் வாழ்ந்த பண்டைய சிந்தி இன மக்கள் பெருவாரியாக வடக்கு நோக்கி சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் கால்நடையாகவே குடி பெயர்ந்தனர். ரொமேனியாவில் ரொமானி இனத்தவர் என அழைக்கப்படும் இவர்கள் ஜிப்சிக்களாகவே ஐரோப்பா முழுவதும் பரந்து விரிந்து வாழ்கின்றனர். முறையான வாழ்க்கை முறை தொழில் என்றில்லாமல் பொதுவாகவே திருட்டு, பிச்சை எடுத்தல், குறி சொல்லுதல், ஜோதிடம் பார்த்தல், என்ற வகையிலேயே இவர்கள் ரொமேனியா மட்டுமன்றி ஹங்கேரி மற்றும் ஏனைய கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் அறியப்படுகின்றனர்.

ரொமேனியாவின் மக்கள் தொகையில் இந்த சிந்தி ஜிப்சி இன மக்கள் 3 விழுக்காட்டினர்.

இந்த இன மக்களைப் பற்றியும் இவர்களின் பூர்வீகம் பற்றியும் தொடர்ந்து ஆய்வுகள் நிகழ்ந்தமையின் விளைவாக இவர்களது பூர்வீகம் பண்டைய இந்தியா என்பதும் இவர்கள் சமூக கட்டமைப்பில் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்ட சமூகமாக வாழந்தவர்கள் என்றும் இவ்வாய்வுகள் விவரிக்கின்றன. இவர்களது மொழிக்கூறுகள் ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழிக்கூறுகளை உள்ளடக்கியவை என்பது ஆய்வில் அறியப்பட்டது. இந்தோ ஐரோப்பிய இனக்குழு என்ற வகையில் இந்த மக்கள் அடையாளப்படுத்தப்படுகின்றனர். ரொமேனியாவில் இந்த ஜிப்சி இன மக்கள் நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டு சமூகப் புறக்கணிப்புக்குள்ளாகிய வகையில் வாழ்ந்து வந்தனர் என்பது கண்கூடு.

பொதுவாகவே கைப்பைகளைத் திருடிச் சென்றுவிடுவர், பிச்சை கேட்டு நச்சரிப்பர் என்ற பொதுவான என்ணம் இவர்கள் மேல் சாதாரண ரொமேனிய மக்களுக்கு இருக்கின்றது.

இன்று ருமேனியாவின் மிக முக்கிய கலாச்சார நடனம் மனேலா ஜிப்ஸி மக்களின் கொடையாகும். காம இச்சையை வெளிப்படுத்தும் விதமாக அங்க அசைவுகள் கொண்ட ஒரு வகை நடனம் இது. இன்று இந்த ரோமா மக்கள் மிகப் பெரிய வீடுகளைக் கட்டிக் கொண்டு ஏதோ ஒரு வகையில் வருமானத்தை தேடிக்கொண்டு வாழ்கின்றார்கள். இவர்களது மாடமாளிகைகள் போன்ற வீடுகளை கிட்ச் அருங்காட்சியகத்தில் உள்ள புகைப்படங்களின் வழி காட்டுகிறேன் பாருங்கள்.
-சுபா









ரொமேனியா பயணம் - 6- புகாரஸ்ட் நகர்

புகாரஸ்ட் நகரின் சில காட்சிகள்
அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் அருங்காட்சியகங்கள்..














ரொமேனியா பயணம் - 5- தேசிய அருங்காட்சியகம்

புகாரஸ்ட் நகரில் இருக்கும் தேசிய அருங்காட்சியகம் இந்த நகரின் சிறப்பு வாய்ந்த ஒரு அருங்காட்சியகம் என அறியப்படுவது. கிபி 2 நூற்றாண்டில் டனுப் நதிக்கரையில் அமைக்கப்பட்ட மிகப் பெரிய கோயில் வளாகம் ஒன்றின் அனைத்து பாகங்களும் இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே பாதுகாக்கப்படுகின்றன.
அக்காலகட்டத்தில் ரோமானிய பேரரசு இப்பகுதிக்கு வந்தமையும் இங்கு ஆட்சியை கைப்பற்றி நாடு நகரம் சாலைகள் என அமைத்ததையும் இந்த ரோமானிய கோயில் புடைப்புச் சிற்பங்களாக மிக அழகாக வெளிப்படுத்துகின்றது. கிபி 110 ல் இருந்து 120 வரைக்குமான காலகட்டத்தில் அமைக்கப்பட்ட கோயிலாக இது தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
சிற்ப வடிவங்கள் மிக நேர்த்தியாக இருக்கின்றன . பண்டைய ரோமானிய தாக்கத்தை குறிப்பாக இப்பகுதியில் டனுப் நதி ஓடும் இப்பகுதியில் அமைந்ததை சிறப்புடன் காட்டும் இக்கோயில் இன்று இந்த அருங்காட்சியத்தில் உள்ளேன் அழகாக பாதுகாக்கப்படுகின்றது.











Thursday, April 18, 2019

ரொமேனியா பயணம் - 4- ஆர்த்தடோக்ஸ் கத்தோலிக்கம்

ஆர்த்தடோக்ஸ் கத்தோலிக்கம் என்பது கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முதன்மை சமயமாக விளங்குவது. கத்தோலிக்க மற்றும் சீர்திருத்த கிருத்துவ தேவாலயங்களை விட ஆர்த்தடாக்ஸ் தேவாலயங்கள் மிகுந்த அழகியல் பாணியுடன் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு வீடியோ பதிவை இணைக்கிறேன் பாருங்கள். புகாரஸ்ட் நகரின் ஒரு தேவாலயத்தின் காட்சி இது. சுவரோவியங்கள் பிரமிக்க வைக்கின்றன. - Bucharest


https://www.facebook.com/subashini.thf/videos/2401469246763125/