காய்கறிகளும் பழங்களும்
பழங்களும் காய்கறிகளும் ஒவ்வொரு நாட்டிற்கு வித்தியாசப்படுவனவாக உள்ளன. வாழை, அவக்காடோ, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவை இங்கே அதிகமாகப் பயிரிடப்படுவதைப் பற்றி முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். இவற்றைப் போலவே இத்தீவில் மாங்காய் மரங்களும் பப்பாளி மரங்களும் நிறைந்து இருக்கின்றன. பப்பாளி, மாம்பழம் வாழை கலந்த ஒரு பழச்சாறு சாப்பிட்டுப் பார்த்தேன். சுவை அபாரமாக இருந்தது. கூடுதல் இனிப்புச் சுவை வேண்டுமே என்று சக்கரை கலக்கத் தேவையே இல்லை. அவ்வளவு சுவை.
காடுகளிலும் மலைப்பிரதேசங்களிலும் நான் வெகுவாக figue ( ஃபிக் ) பழ மரங்களைப் பார்த்தேன். அவை ஓவ்வொன்றும் ராட்சத வடிவில்.. இங்கு ஜெர்மனியில் நான் பார்ப்பது போன்று செடி வகை என்றில்லாமல் மிக மிகப் பெரிதான மரங்கள். கொடிகள் போல மரத்தின் கிளைகள் நெளிந்து வளைந்து படர்ந்து மரம் முழுக்க காய்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
லா பல்மாவில் இருந்த ஒரு ஞாயிற்றுக் கிழமை லோஸ் லியானோஸ் நகரில் நடைபெறும் ஞாயிற்றுக் கிழமை சந்தைக்குச் சென்றிருந்தோம். இந்த சந்தையில் உள்ளூர் மக்கள் விரும்பி வந்து காய்கறிகளையும் பழங்களையும் வாங்கிச் செல்கின்றனர். உள்ளூர் மக்களோடு சுற்றுப் பயணிகளும் இங்கே கூடுகின்றனர்.
தங்கள் வீடுகளிலுள்ள தோட்டங்களில் விளைகின்ற காய்கறிகளையும் பழங்களையும் கொண்டு வந்து வியாபாரிகள் விற்பனைக்ku வைக்கின்றனர். இதில் உள்ள பழவகைகளைப் பார்க்கும் போது சில புதியதாகவும் சில நான் பார்த்தும் சுவைத்தும் இல்லாததாகவும் அமைந்திருந்தன.
மரக்கூஜா பழத்தை இரண்டாக வெட்டினால் இப்படியிருக்கின்றது. மாதுளம் பழம் போன்ற கொட்டைகள் நிறைந்த பழம். நல்ல சுவை.
ஃபிக் (figue) பழங்கள் மரத்தில். அவக்காடோ, ஆரஞ்சு, வாழை போலவே அதிகமாக இத்தீவில் காணப்படும் ஒரு பழம். சற்று மலைப்பாங்கான இடத்தில் ராட்சத வடிவில் இம்மரங்கள் வளர்ந்திருக்கின்றன. ஏப்ரல் மே மாதத்தில் கரும் பச்சை நிறத்தில் தோற்றமளிக்கும் இப்பழங்கள் ஜூலை ஆகஸ்டு செப்டம்பர் மாடஹ்ங்களில் கரும் ஊதா நிறமாக மாறி சாப்பிட உகந்ததாக அமைந்து விடுகின்றது.
இது ஒரு வகை தக்காளி ஆனால் பழ வகையில் சேர்த்துக் கொள்ளப்படுவது. நல்ல புளிப்புச் சுவை நிறைந்த பழம். இதிலும் கொஞ்சம் வாங்கிக் கொண்டேன்.
இவை சிறிய வகையில் இருக்கும் ஹனி டியூ போன்ற ஒரு பழம். வித்தியாசமான, அதே நேரம் இனிப்பும் கொஞ்சம் புளிப்பும் கலந்த சுவை நிறைந்த பழம். இதிலும் கொஞ்சம் வாங்கிக் கொண்டேன்.
எனக்குத் தெரிந்த அவக்காடோ, வாழை, மாம்பழம், பப்பாளி, ஃபிக் போன்றவற்றோடு இந்தப் புதிய பழங்களும் வாரம் முழுக்க சுவைக்க இது நல்ல வாய்ப்பாக அமைந்தது.
சந்தையில் பழங்கள் மட்டுமல்லாது காய்கறிகளும் கூட நிறைந்திருக்கின்றன. பசுமையான கீரை வகைகள் , தக்காளி, மிளகாய், ப்ரோகோலி முட்டைக் கோஸ், அவரை வகை, கிழங்கு வகைகள் என பல ரகம்.
பழங்கள் போல காட்சியளிக்கும் இவை மிளகாய் வகையைச் சேர்ந்தது.
மூலிகை செடிகள் விற்பனைக்காக..
சந்தையில்..
சுபா
சந்தையில் காய்கறிகள்..
No comments:
Post a Comment