2013ல் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயம் நான் கோவிலூருக்குச் செல்வதற்கு முன்னர் காரைக்குடியில் எடுத்த புகைப்படம். அதிகாலை நேரத்து புத்துணர்ச்சியுடன் படத்தில் டாக்டர்.சந்திரமோகனும் டாக்டர்.காளைராசனும்.
படத்தின் பின்னால் இருப்பது ஒரு செட்டினாட்டு இல்லம். ஆனால் தற்சமயம் இது ஒரு வர்த்தகக் கூடமாக மாறியிருக்கின்றது. பழனிச்சாமி பாத்திரக் கடையும் வலது புறத்தில் ஒரு அடகுக்கடையும் ஏனைய சில கடைகளும் உள்ளே இருக்கின்றன. மழை பேய்ந்து ஓய்ந்த நேரம். சாலையில் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. சாலையோரத்து காய்கறிக்கடை. ஒரு ஆட்டோ ரிக்ஷா.. சில மோட்டார் சைக்கிள்கள். அதிகாலை நேரத்து இளம் வெயிலுடன்.
No comments:
Post a Comment