Monday, July 2, 2018

USA - Dallas - FETNA 2018

*பேரவையின் 31வது விழா இறுதி நிகழ்வு.
தமிழறிஞர்கள், அமைப்புகள் கருத்துக்களம்.
விழா நேற்று மதியம் நிறைவடைந்தது!










Sunday, July 1, 2018

USA - Dallas - FETNA 2018

கவிஞர் அறிவுமதியுடன்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே அது காலங்காலமாய் காதல் கவிதைகள் பேசுமே...
எங்கே செல்லும் இந்தப் பாதை யாரோ... யாரோ... அறிவார்'
பிரிவொன்றைச் சந்தித்தேன் முதல் முதல் நேற்று!
நுரையீரல் தீண்டாமல் திரும்புவது காற்று!


USA - Dallas - FETNA 2018

நாட்டிய தேவதை நர்த்தகி நடராஜ் மற்றும் அவர் தோழியுடன் காலை தஞ்சாவூர் வகை பரதக்கலை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். தனது நாட்டியப்பயணத்தில் தான் சந்தித்து இன்று வரை கடந்து வந்த பாதைகள் பற்றியும் பகிர்ந்து கொண்டார். இவர்கள் இருவருமே கலைக்கு தம் வாழ்வை ஒப்படைத்தவர்கள். வாழ்த்துவோம். வளர்க!



USA - Dallas - FETNA 2018

**31வது பேரவை திருவிழா - டல்லாஸ் USA**
அமெரிக்க பெரியார்-அம்பேத்கர் வட்டத்தை உருவாக்கி முனைப்புடன் செயல்படும் Kanimozhi MV , அவரது இணையர் மற்றும் அவர்களது இரு குழந்தைகளையும் நேற்று சந்தித்து உரையாடினேன். முதல் நாள் கனிமொழியின் எழுச்சிமுகு கவிதைகளும் கவிதை அரங்கிற்குப் பெருமை சேர்த்தன.
மூன்றாம் தலமுறை பெரியார் சிந்தனைகளை ஏந்தி வளரும் குடும்பம் என்று கேட்ட போது மனம் மகிழ்ந்தேன்.
இனிய வாழ்த்துக்கள்... இந்த அமைப்பின் எல்லா செயல்பாடுகளுக்கும்.


USA - Dallas - FETNA 2018

**31வது பேரவை திருவிழா - டல்லாஸ் USA**
தொல்லியல், வரலாற்று ஆவணங்கள் பாதுகாப்பு தொடர்பான தமிழ் மரபு அறக்கட்டளை கலந்துரையாடல் இன்று காலை 11-12:30 வரை நடைபெற்றது. வரலாற்றின் மீது பற்று கொண்ட ஆர்வலர்கள் வந்து கலந்து கொண்டனர்.








USA - Dallas - FETNA 2018

**31வது பேரவை திருவிழா - டல்லாஸ் USA**
ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கை எனும் போது அதன் முயற்சியில் முன் நிற்பவர்களில் ஒருவர் மருத்துவர். ஜானகிராமன் ஐயா. அவர் மற்றும் பேரவை விழா தலைவர், செயல்வீரர் திரு.கல்ட்வெல் வேல்நம்பி ஆகியோருடன் காலை உணவின் போது. மேலும் இணைந்து கொண்ட சகோதரர் வெற்றிச்செல்வனும்...
உணவோடு ஆக்ககரமான செயல்பாடுகளுக்கான சிந்தனைகளும் பறிமாறப்பட்டன.






USA - Dallas - FETNA 2018

**31வது பேரவை திருவிழா - டல்லாஸ் USA**
தமிழகத்தில் இஸ்லாம் என்ற தலைப்பில் தமிழகத்தில் இன்று காணக்கூடிய இஸ்லாமிய விழுமியங்களை மின்னாக்க ஆவணப்பதிவு செய்யும் ஒரு திட்டத்தை கடந்த ஆண்டு தொடங்கி அதில் மதுரை, வடசென்னை, நெல்லை ஆகிய வட்டாரங்களில் கிடைக்கின்ற வரலாற்றுச் சான்றுகளைப் பதிவு செய்து வெளியீடு செய்தோம். நேற்றைய எனது உரையின் தொடர்ச்சியாக இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளை இவ்வாண்டு இறுதியில் தொடக்குகின்றோம். இதில் பொறுப்பெடுத்து செயலாற்ற முன் வந்துள்ளார் டல்லாஸ் வாழ் தமிழர் திருமதி ஜமீலா. அவரோடு திரு ஹபீப், திரு சுல்தான் ஆகியோரும் ஆர்வம் காட்டியுள்ளனர்.
திருமதி ஜமீலாவுடன்.