Monday, March 31, 2014

ஒரு நாள்... செல்வோமா ஸ்ட்ராஸ்புர்க் ?

கடந்த சனிக்கிழமை ஒரு நாள் பயணமாக நானும் என்னை பார்க்க வந்திருந்த திலகேஸ்வரியும் ஸ்ட்ராஸ்புர்க் சென்றிருந்தோம்.  

ஐரோப்பிய ஒன்றியத்தின் பார்லிமண்ட் இருக்கும் ஒரு நகரம் ஸ்ட்ராஸ்புர்க் என்பதால் இந்த நகரத்தின் முக்கியத்துவத்தை நம்மால் ஊகிக்க முடியும். இப்போது மட்டுமல்ல... பல நூற்றாண்டுகளாக மக்கள் குடியேற்றம் இருந்து பண்டைய நாகரிக செழுமை  நிறைந்த ஒரு நகரம் தான் இது. 

ஸ்ட்ராஸ்புர்க் ப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நகரம். ஜெர்மனியின் எல்லை நகரம் இது. இரு நாடுகளின் எல்லையில் பாய்ந்து செல்லும்  ரைன் நதியின் ஒரு மறு பகுதியில் இருக்கும் நகர் இது.  என் இல்லத்திலிருந்து 139 கிமி  தூரம் என்பதால் வாகனத்தில் பயணிக்க ஒன்றேகால் மணி நேரம் மட்டுமே தேவைப்பட்டது. 

வசந்த காலம் என்று சொல்வதை விட கோடை வந்து விட்டது என்றே நினைக்க வைத்தது சீதோஷ்ணம். 22 டிகிரி செல்ஸியஸ் வெயில் அங்கும் இங்கும் நடந்து சுற்றிப் பார்க்க மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. 


சில படங்கள் பகிர்ந்து கொள்கிறேன்.



Inline image 3
ஸ்ட்ராஸ்புர்க் கேத்தீட்ரல் - 12 நூற்றாண்டு கட்டிடம்


Inline image 1
கேத்தீட்ரல் 


Inline image 4
கேத்தீட்ரல்




Inline image 6
கேத்தீட்ரல் உள்ளே


Inline image 7
உணவகங்கள் .. பழங்கால கட்டிடக் கலையை நினைவுறுத்தும் வகையில் அமைந்த கட்டிடத்தில்


Inline image 8
ஒரு சிறுமி கழுதையை இழுத்துக் கொண்டு செல்லும் இனிய காட்சி. 


Inline image 9
ஸ்ட்ராஸ்புர்க் பழைய நகர மையம். இது ஒரு தீவு போல ரைன் நதியினால் சூந்த வகையில் அமைந்த பகுதி.



Inline image 10
ரோஹன் அரண்மனைக்கு முன் நாங்கள்

Inline image 11
ரோஹன் அரண்மனை

Inline image 12

தொல்லியல் அருங்காட்சியகத்தில் .. கிமு 300 வாக்கில் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் மெர்க்குரி தெய்வத்தின் வடிவம்.. இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.



Inline image 13
அருங்காட்சிகத்தில் ஒரு பகுதி


Inline image 14
ரைன் நதிக் கரையோரத்திலே


Inline image 15
ரைன் நதிக் கரையோரத்திலே அமைந்திருக்கும் ரோஹன் அரண்மனை

Inline image 16
ஸ்ட்ராஸ்புர்க் நகரின் காட்சி

சுபா

Saturday, February 15, 2014

பாரீஸ் சில படங்கள்..

சென்ற வாரம் 3 - 7 பெப்ரவரி அலுவல் தொடர்பாக பாரீஸில் இருந்த சமயம் எடுத்த சில புகைப்படங்கள்.

இன்று வெளியிடப்படுபவை பாரீஸ் நகரின் உள்ளே நெப்போலியனின் அரச மாளிகைப் பகுதி.

இந்த அரண்மனையை விரிவாக்கிய மண்ணன் 14ம் லூயிஸ். இவர் காலத்திலேயே லூவ்ர அருங்காட்சியகத்தில் இருக்கும் பல அரும்பொருட்கள் வாங்கப்பட்டன. எனது அருங்காட்சியகத் தொடரில் இதனை குறிப்பிட்டிருக்கிறேன்.


லா செயிண்ட் நதி. இது அரண்மையை பார்த்தவாறு அமைந்திருப்பது. கரி ஏற்றிச் செல்லும் ஒரு கப்பலை இந்த ஆற்றில் காணலாம்.


அரண்மனையில் பேரரசர் மூன்றாம் நெபோலியனின் பெயர் பதிக்கப்பட்ட வாசல். 



அரண்மையின் ஒரு பகுதி. எதிர்புறத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்.


அரண்மையின் ஒரு பகுதி. எதிர்புறத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்.


அரண்மையின் ஒரு பகுதி. எதிர்புறத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்.

சுபா




Saturday, May 11, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 15

காட்சிகள் பல.. அனுபவங்களைப் போல..


குளிர் போக்க தயாராக இருக்கும் விறகுகள்.. அலங்கரிப்பாக


சுபா.. தங்கும் விடுதியில்

இலையில்லையென்றாலும் மரங்கள் அழகே..

ஏரியின் கரை சொல்லும் கதை

கிராமத்துக் காப்பிக் கடை

மலையின் நிழல் ஏரியில்..

பனி படர்ந்த மலை உச்சி

நீரோடை

ஆற்றிலே பனி

கிராமத்து வீடு

குடி நீர் குடிக்கலாம் வாருங்கள்


பனி படர்ந்த சாலையில் பயணம்

எனது கால் ஸ்கீ

ஸ்கீ விளையாடும் மக்கள்

ஒரு அப்பாவும் ஒரு குழந்தையும் பனியில் விளையாடும் காட்சி

குளிர் போக்க அனல்

மரத்திலிருந்துத்  தலையை எட்டிப்பார்க்கும் முழு நிலா

ரோய்ட்ட கிராமம்

சுபா



இது என்ன அழகு !

தனியாக .. 

வெள்ளை நிறத்திலும் இத்தனை அழகா

யார் வருகின்றார்கள்...?

சுபா

ஏரென்பெர்க் மலையின் மேல் உள்ள பெரிய சிலுவை

தனிமை இல்லை

கவிதை சொல்லும் காட்சி

நானே இந்த ஊர் ராஜா



சுவையான ஐஸ்க்ரீமுடன்...

பயணம் முற்றும்


அன்புடன்
சுபா

Friday, May 10, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 14


போதும் பனி..

ஆல்ப்ஸ் மலைத் தொடர்ச்சியில் அமைந்திருக்கும் சுவிஸர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து மாறுபட்டது ஆஸ்திரியா. ஏனைய நாடுகள் ஆல்ப்ஸ்மலைத்தொடர்ச்சியில் ஒருபகுதி என்ற வகையில் அமைந்திருப்பது. ஆனால் ஆஸ்திரியாவைப் பொருத்தவரை முழுமையாக ஆல்ப்ஸ் மலைத்தொடர்ச்சியில் அடங்கியிருக்கும் ஒரு நாடு இது என்றே குறிப்பிட வேண்டும். இதைப்போல இங்கிருக்கும் மற்றொரு குட்டி நாடான லிக்ஸெஸ்டைனும் அமைகின்றது.

மேற்கு, கிழக்கு வடக்கு தெற்கு என எல்லா பகுதிகளும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்ச்சியில் அடங்கியிருக்கும் வகையில் ஆஸ்திரியாவின் பூகோள அமைப்பு அமைந்துள்ளது.உயரமான மலைப்பகுதி, அப்பகுதிகளில் அடர்ந்திருக்கும் பசுமையான மரங்கள்  பின்னர் தாழ்வாக இறங்கும் பகுதிகள், பனி கரைந்து உருவாக்கும் நீரோடை இவைகளே இந்த நாட்டில் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்திருக்கும் காட்சி. மலைகளுக்கிடையில் அமைந்திருக்கும் இயற்கையான பள்ளத்தாக்குகளில் மனித குடியேற்றமேற்பட்டமையின் காரணத்தால் கிராமங்கள் நகரங்கள் பெருநகரங்கள் என ஊர்கள் அமைந்திருப்பதைக் காண்போம்.

ஆஸ்திரியா முழுமையும் மலைகள் என்றமைந்திருந்தாலும் இங்கே மிகத் தரமான சாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மலை உச்சிக்குச் செல்லும் பாதை கூட விரிவாக தரமாக வாகனம் ஓட்டிச் செல்வோர் சிரமமின்றி பயணிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. பெரும்பாலும் இங்கே பனிக்காலம் இருப்பதால் பனி கொட்டி சாலையை நிரப்பிவிடும் வேளையில் அதனை சுத்தம் செய்ய வரும் வாகனங்கள் அடிக்கடி வந்து சாலையில் கொட்டிக் கிடக்கும் பனியை தூக்கி நகர்த்திக்கொட்டி சாலையை பனி இல்லாமல் ஆக்கி விடுகின்றன. மலைப்பகுதி பயணங்கள் எனும் போது கேபிள் கார் பயணம் பரவலாக அமைக்கப்பட்டிருக்கின்றன. மலையடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு செல்லும் கேபிள் கார் வசதிகள் மிக விரிவாக புழக்கத்தில் உள்ளன.

குளிர்கால விளையாட்டுக்கள் வருடம் முழுக்க இங்கே தடையில்லாமல் இயங்கிக் கொண்டேயிருக்கின்றன. விண்டர் ஒலிம்பிக்ஸ் விளையாட்டு மைதானம் இங்குள்ள சீபெல்ட் (Seefeld)  நகரில் தான் அமைந்திருக்கின்றது.  பனிக்கால விளையாட்டுக்களில் பயிற்சி பெற விரும்புவோர் எந்த தயக்கமுமின்றி ஆஸ்திரியாவின் எல்லா பகுதிகளில் தடையின்றி அமைந்திருக்கும் பனி விளையாட்டுப் பள்ளிகளில் பதிந்து பயிற்சி பெற முடியும்.

விண்டர் விளையாட்டுப் போட்டிகள் ஆசிய நாடுகளில் அவ்வளவாகப் பிரபலமாகாவிடினும் கூட ஐரோப்பா, கனடா, ரஷ்யா போன்ற நாடுகளில் முக்கிய விளையாட்டுக்களாக அமைந்துள்ளன. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு போட்டி விளையாட்டுக்கள் பனிவெளி, பனிமலையை சார்ந்தும்  நிகழ்வதால் ஆஸ்திரியா எப்போதும் வருகையாளர்கள் நிறைந்து காணப்படும் ஒரு நாடாகவே உள்ளது. எவ்விதமான குளிர்கால பனி விளையாட்டுக்கள் மக்கள் ஈடுபடுபவை என்பது பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த விக்கி பகுதி நல்லதொரு அறிமுகத்தைத் தரலாம். http://en.wikipedia.org/wiki/Winter_sport

அன்றாட அலுவலக தேவைகளின் சிந்தனைகளிலேயே பெரும்பாலும் உழன்று கொண்டிருக்கும் எங்கள் சிந்தனையிலிருந்து விடுபட்டு புதிதான அனுபவம் பெற வேண்டும் என்ற வகையிலேயே எங்களின் பயணத்தை அமைத்திருந்த்தோம். குளிர் காலத்தில் விடுமுறை என்றாலே ஏற்படும் பயம், சோம்பல் ஆகியவற்றை விலக்கி அந்த நேரத்திலும் ஏதாகினும் உடலுக்குப் பயிற்சியாக அமையும் சில முயற்சி செய்யலாமே என்ற வகையில் ஒரு சுறுசுறுப்பான பயணமாக அமைக்க திட்டமிட்டிருந்தோம். அதன் படியே ஒவ்வொரு நாளும் க்ரோஸ் கண்ட்ரி வாக்கிங், நடைப்பயணங்கள் என அமைந்தன. குளிர் பொதுவாகவே  -4 டிகிரி என்ற போதிலும் பனியில் நடைப்பயணமும் க்ரோஸ் கண்ட்ரி வாக்கிங் பயணங்களும் அந்தக் குளிரிலும் எங்களைக் கரைய வைத்தன.

அன்பான உபசாரம், சுவையான உணவு, இயற்கையின் அழகு, உடலுக்கு நலம் தரும் பயிற்சி என முழுமையான மன நிறைவளித்த மேலும் ஒரு பயணமாக இந்தப் பயணம் எங்களுக்கு அமைந்தது.

இந்தப் பயணம் முடிந்தது. பயணங்கள் நிறைந்த வாழ்வின் பதிவுகளாக இன்னொரு பயணம் விரைவில் தொடரும்.

இந்தப் பனிப்பயணத்தின் பதிவில் என்னுடன் சேர்ந்து பயணித்த உங்கள் அனைவரையும் மேலும் வேறொரு பயணத்திற்கு அழைத்துச் செல்வேன். காத்திருங்கள் ..:-)



அன்புடன்
சுபா