Friday, May 12, 2017

குரோய்ஷியா பயணம் - சுமை தாங்கிகள்

உலகம் பூராவும் பெண்கள் தான் சுமை தாங்கிகள் போல...ஹ்ம்ம்ம் இங்கே குரோய்ஷியா வந்தால் சிலையே காட்டுது பாருங்கள்..
 ஆண்கள் சண்டைக்கு வர வேண்டாம்..:-)


குரோய்ஷியா பயணம் - சாக்ரெப் கத்தீட்ரல்

சாக்ரெப் நகரின் சிறப்புக்களில் ஒன்று இங்கு பழைய நகரில் அமைந்திருக்கும் சாக்ரெப் கத்தீட்ரல். கி.பி 1102ல் இதன் முதல் கட்டுமானம் தொடங்கியது. 1254ல் பிஷப் திமொதி அவர்கள் இதனை கோத்திக் கட்டுமான அமைப்பில் வடிவமைக்கும் பணியைத் தொடங்கினார். 1880ம் ஆண்டு நிகழ்ந்த நிலநடுக்கத்தின் போது இது பெரிய சேதம் அடைந்தது. அடுத்த சில ஆண்டுகளில் உட்புறத்தை சீரமைத்தனர். ஆனால் வெளிப்புறம் சிதலமடைந்தே இருந்தது. 1990 தொடங்கி ஜெர்மானிய ஆர்க்கிடெக்ட் குழு ஒன்று இதன் வெளிப்புறத்தோற்றத்தை அதன் பழைய வடிவிற்கே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
மிகப்பிரமாண்டமான தேவாலயம் இது. வழிபாட்டில் இருக்கின்றது. பொதுமக்கள் பார்வையிட அனுமதி உள்ளது. கட்டணம் இல்லை. புகைப்படங்களும் தடையின்றி எடுக்க அனுமதி உண்டு.












குரோய்ஷியா பயணம் - சாக்ரெப் கத்தீட்ரல்.. 1880ம் ஆண்டு நிலநடுக்கம்

சாக்ரெப் கத்தீட்ரல் 1880ம் ஆண்டு நிலநடுக்கத்தில் சிதைந்தது. அதன் சீரமைப்புப் பணிகள் இன்னமும் தொடர்கின்றன. அன்று நிலநடுக்கத்தின் போது நின்று போன கடிகாரம் நிலநடுக்கம் ஏற்பட்ட மாலை 7:03 மணியைக் காட்டிக் கொண்டு இன்றும் இருக்கின்றது.














குரோய்ஷியா பயணம் - காதலர்களுக்கு நாற்காலி

காதலர்கள் வந்து அமர்ந்து இருவருமாக பார்க்கை ரசிக்க என பிரத்தியேகமாக ஒரு நாற்காலியை பார்க்கில் வைத்திருக்கின்றார்கள். தனியாக வருவோர் இதில் உட்காரவில்லை. நான் சிறிது நேரம் பக்கத்தில் உள்ள மற்றொரு நாற்காலியில் அமர்ந்திருந்தேன். சற்று நேரத்திற்குப் பின்னர் ஒரு இளம் ஜோடி வந்து இதில் அமர்ந்து மகிழ்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். காதலுக்கு அங்கீகாரம் தரும் சிந்தனை, அருமை.





குரோய்ஷியா பயணம் - சாக்ரெப் புற நகர்ப்பகுதிகளில்

சாக்ரெப் புற நகர்ப்பகுதிகளில் வறுமை தெரிகிறது. குறைந்த மக்கள் தொகை. ஏறக்குறைய 5 மில்லியன் மக்கள் மட்டுமே. குரோய்ஷிய மொழியே எல்லா வகையான இடங்களிலும் புழங்குகின்றனர் என்றாலும் ஜெர்மானிய மொழியும் ஆங்கில மொழியும் இங்கு பயன்பாட்டில் இருக்கின்றது.











குரோய்ஷியா பயணம் - சாக்ரெப் சாலைகளில்

காலையில் சாக்ரெப் நோக்கிய பயணத்தில் சில சாலைக்காட்சிகள்..










குரோய்ஷியா பயணம் .. at Zagreb airport

... at Zagreb airport
வானிலிருந்து சாக்ரெப் நெருங்கும் காட்சி..
விமான நிலையத்தில் மிகக் குறைவான பயணிகள்...
பொதுவாக, வெள்ளிக்கிழமை ஒரு அனைத்துலக விமான நிலையத்தில் இருக்கும் கூட்டம் இங்கு காணப்படவில்லை..