சாக்ரெப் நகரின் சிறப்புக்களில் ஒன்று இங்கு பழைய நகரில் அமைந்திருக்கும் சாக்ரெப் கத்தீட்ரல். கி.பி 1102ல் இதன் முதல் கட்டுமானம் தொடங்கியது. 1254ல் பிஷப் திமொதி அவர்கள் இதனை கோத்திக் கட்டுமான அமைப்பில் வடிவமைக்கும் பணியைத் தொடங்கினார். 1880ம் ஆண்டு நிகழ்ந்த நிலநடுக்கத்தின் போது இது பெரிய சேதம் அடைந்தது. அடுத்த சில ஆண்டுகளில் உட்புறத்தை சீரமைத்தனர். ஆனால் வெளிப்புறம் சிதலமடைந்தே இருந்தது. 1990 தொடங்கி ஜெர்மானிய ஆர்க்கிடெக்ட் குழு ஒன்று இதன் வெளிப்புறத்தோற்றத்தை அதன் பழைய வடிவிற்கே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
மிகப்பிரமாண்டமான தேவாலயம் இது. வழிபாட்டில் இருக்கின்றது. பொதுமக்கள் பார்வையிட அனுமதி உள்ளது. கட்டணம் இல்லை. புகைப்படங்களும் தடையின்றி எடுக்க அனுமதி உண்டு.
No comments:
Post a Comment