Sunday, July 1, 2018

USA - Dallas - FETNA 2018

**31வது பேரவை திருவிழா - டல்லாஸ் USA**
ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கை எனும் போது அதன் முயற்சியில் முன் நிற்பவர்களில் ஒருவர் மருத்துவர். ஜானகிராமன் ஐயா. அவர் மற்றும் பேரவை விழா தலைவர், செயல்வீரர் திரு.கல்ட்வெல் வேல்நம்பி ஆகியோருடன் காலை உணவின் போது. மேலும் இணைந்து கொண்ட சகோதரர் வெற்றிச்செல்வனும்...
உணவோடு ஆக்ககரமான செயல்பாடுகளுக்கான சிந்தனைகளும் பறிமாறப்பட்டன.






USA - Dallas - FETNA 2018

**31வது பேரவை திருவிழா - டல்லாஸ் USA**
தமிழகத்தில் இஸ்லாம் என்ற தலைப்பில் தமிழகத்தில் இன்று காணக்கூடிய இஸ்லாமிய விழுமியங்களை மின்னாக்க ஆவணப்பதிவு செய்யும் ஒரு திட்டத்தை கடந்த ஆண்டு தொடங்கி அதில் மதுரை, வடசென்னை, நெல்லை ஆகிய வட்டாரங்களில் கிடைக்கின்ற வரலாற்றுச் சான்றுகளைப் பதிவு செய்து வெளியீடு செய்தோம். நேற்றைய எனது உரையின் தொடர்ச்சியாக இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளை இவ்வாண்டு இறுதியில் தொடக்குகின்றோம். இதில் பொறுப்பெடுத்து செயலாற்ற முன் வந்துள்ளார் டல்லாஸ் வாழ் தமிழர் திருமதி ஜமீலா. அவரோடு திரு ஹபீப், திரு சுல்தான் ஆகியோரும் ஆர்வம் காட்டியுள்ளனர்.
திருமதி ஜமீலாவுடன்.


Saturday, June 30, 2018

USA - Dallas - FETNA 2018

**31வது பேரவை திருவிழா - டல்லாஸ் USA**
இன்று காலை நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் அரங்கம் தனித்துவம் மிக்கது. டாக்டர் நஸ்ரினாவின் எழுச்சி மிகு உரை, பெண்கள் அனுபவிக்கும் உளவியல் பிரச்சனைகள், அதற்காக அவர் முன்னெடுத்திருக்கும் முயற்சிகள், அவரது அண்மைய அரசியல் நடவடிக்கைகள் என வந்திருந்தோரை அதிசயித்தார்.
அடுத்து பேசிய தமிழ்க்கடல் மம்மது ஐயா அவர்கள் தன் இசை வரலாறு பற்றி விவரித்தார். அவரது பேத்தி சோபியா மம்மது அவர்களது இசை விளக்கத்திற்கேற்ற பாடல்களை பாடி வியப்பூட்டினார்.
அடுத்து எனது உரையில் தமிழ் மரபு அறக்கட்டளையின் இஸ்லாமியத் தமிழ் வலைப்பக்கம் பற்றியும் வடசென்னை, மதுரை, நெல்லை ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட திட்டங்கள், அடுத்து தொடரவுள்ள காயல்பட்டினம் ஆவணப்பதிவு என சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டேன்.










Video URL: https://www.facebook.com/subashini.thf/videos/2189166227993429/

 Video URL:  https://www.facebook.com/subashini.thf/videos/2189168781326507/


USA - Dallas - FETNA 2018

நேற்றைய பெட்னா 2018 நிகழ்வு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் கொல்லப்பட்டோருக்கான மௌன அஞ்சலியுடன் தொடங்கப்பட்டது.

நேற்று காலை, வட அமெரிக்க தமிழ்ச்சங்கங்களின் பெண் ஆளுமைகள், ஜெர்மனி தோழர் உல்ரிக்க ஆகியோருடன் இனிய உரையாடல்.

முதுபெறும் அறிஞர் மம்மது அவர்களது அன்பில் மகிழ்ச்சி..

வட அமெரிக்க பேஸ்புக் நண்பர்களுடன் உரையாடல்...

என மனதில் நிற்கும் காட்சிகளாக புகைப்படங்கள்.








USA - Dallas - FETNA 2018

பெட்னா 2018 (Dallas, US) நிகழ்விற்காக வருகைபுரிந்திருக்கும் விருந்தினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் எம்பசி ஹில்டன் விருந்தினர் தங்கும் விடுதி.







USA - Dallas - FETNA 2018


31வது பேரவை திருவிழா விருந்து நிகழ்வில்..
திரு.பாலச்சந்திரன் ஐஏஎஸ்
திரு ட்ராஸ்கி மருது தம்பதியர்
திரு.சுபவீரபாண்டியன்
கவிஞர் அறிவுமதி
திரு. சு.வெங்கடேசன்
....மேலும் பல விருந்தினர்களுடன் மாலை விருந்து.





Friday, June 29, 2018

USA - Dallas - FETNA 2018

Subashini Thf is with Visa Velu.
June 29 · 
பெட்னா 2018.. தமிழ்க்கோயிலின் முன் தமிழார்வலர்களுடன்