Monday, March 5, 2012

கிருஷ்ணகிரிக்கு போகலாம் வாங்க...! - 9

தமிழகத்திலே இம்முறை சிவகங்கை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கிருஷ்ணகிரியிலும் நிறைய புளிய மரங்களைப் பார்த்தேன். மரங்கள் நிறைய புளி (காய்கள்). பறித்து உடைத்துப் பார்த்தால் பச்சையாக இருக்கின்றன. இன்னமும் காய்ந்து போக சில மாதங்கள் ஆகலாம் போல.




மிகப் பெரிய உறுதியான மரங்கள். ஒவ்வொரு மரங்களிலும் ஏராளமான புளி. இவை சாலையோரத்தில் நிழலுக்காக வைக்கப்பட்டுள்ள மரங்கள் என்றே நினைக்கிறேன்.



பினாங்கிலே முன்னர் நான் சிறுமியாக இருந்த சமயத்தில் எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் நிறைய மரங்கள் இருக்கும். ஒரு சிறிய ஆறு. அதைத் தாண்டினால் இடது பக்கத்தில் மங்குஸ்தீன் மரத்தோப்பு. வலது பக்கத்தில் சிறுவர்கள் விளையாட்டு மையமும் காற்பந்து திடலும் இருக்கும். இங்கே சில பெரிய புளிய மரங்களிருந்தன. இப்போதும் இருக்கும் என்றே நினைக்கின்றேன்.

அப்போதெல்லாம் அந்த புளியமரத்தின் கொடியைப் பிடித்துக் கொண்டு ஊஞ்சல் ஆடுவோம். கொடியைப் பிடித்துக் கொண்டு மேலிருந்து கீழே குதிப்போம். இவையெல்லாம் சந்தோஷமான விளையாட்டுக்கள். இப்போது நினைத்தால் கூட அந்த கணத்திற்கு மனம் சென்று விடுகின்றது. அந்தப் பசுமை, கொடியின் கரகரப்பு, கைவலிக்க அந்தக் கொடியை பிடித்துக் கொண்டு குதித்து மகிழ்ந்தவையெல்லாம் மனக் கண் முன் வந்து போகின்றன.

தொடரும்..
சுபா

No comments:

Post a Comment