கண்ணாடியில் கவின் பொருட்கள்
முந்தைய பதிவில் அர்குவால் நகரின் ஞாயிற்றுக் கிழமை சந்தைப் பற்றிச் சொல்லி அதோடு அங்கிருக்கும் கண்ணாடியினைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்யும் ஒரு கலைக்கூடத்தைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். அங்கே ஒரு விளக்கு உருவாவதை ஆரம்பம் முதல் இறுதி வரைப் பார்த்து என் கேமராவில் பதிவு செய்து வந்தேன். அவற்றை இங்கே படக்காட்சிகளாக இணைத்திருக்கின்றேன். உங்கள் ரசனைக்காக..!
கலைக்கூடத்தின் உள்ளே நுழையும் போது வாசலில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள பொருட்கள்
விதம் விதமான வர்ணங்களில் கண்ணாடிக் கற்கள்
வேலை ஆரம்பமாகின்றது
கண்ணாடித் துகள்களை சூடாக்கி பந்து போன்ற உருவத்தில் வைத்து மிக அதிகசூட்டிலான அவனுக்குள் வைத்து பந்து போன்ற வடிவத்தில் முதலில் அமைக்கின்றார்.
நெருப்பு எறிந்து கொண்டிருக்கும் அவன்.
வட்ட வடிவத்தைப் பெறுவதற்காக ...
கவனமாக கையாளப்படும் முறை..
ஆரம்ப நிலையில் உருவான சூடான கண்ணாடிப் பந்தின் மேல் சிறிதாக்கப்பட்ட எரிமலைக் கற்களை சேர்க்கின்றார்.
கண்ணாடிக் கற்கள்
விதம விதமான வர்ணங்களில் வர்ணம் சேர்க்கபப்ட்ட எரிமலைக் கற்கள்
அவனுக்குள் வைத்து கற்களை ஒன்றாக இணைக்கின்றார்
வடிவத்தை சரி செய்கின்றார்.
காற்றினை உள்ளே ஊதி அந்த கண்ணாடிப் பந்தை விரிவடையச் செய்து பெரிதாக்குகின்றார். இதனை பலமுறை செய்யும் போதே இந்தப் வட்ட வடிவம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாக வடிவமெடுக்கின்றது.
மீண்டும் காற்றினை உள்ளே ஊதுகின்றார்.
கொஞ்சம் விரிவடைந்த கண்ணாடிப் பந்தை குளிர்ச்சியான நீரில் நனைக்கின்றார்.
மீண்டும் அவனுக்குள் வைத்து சூடாக்குகின்றார்.
நெருப்பு நிலா :-)
மீண்டும் மீண்டும் அதே முறையில் மேலும் அளவினை விரிவாக்குகின்றார்
இப்போது மேலும் விரிவடைந்த நிலையில்
எரிமலைக் கற்களும் கண்ணாடித் தூள்களும் இணைந்த வகையில்..
விளக்கு உருவாகின்றது
மீண்டும் அவனுக்குள் வைக்கின்றார்
சூடான விளக்கு
சூடாக இருக்கும் போதே ஆரம்பப்பகுதியைக் கத்தரிக்கோலால் வெட்டிவிடுகின்றார்.
விளக்கு உருவாகி விட்டது
கூர்மையான கத்தியால் சூடாக இருக்கும் போதே வெட்டி எடுத்து தனியாக வைத்து விடுகின்றார்.
ஏறக்குறைய அரை மணி நேரத்தில் ஒரு விளக்கு உருவாகி விடுகின்றது. இதே போல பொம்மைகள், தட்டு பாத்திரங்கள், கிண்ணங்கள் எனப பல தினம் தினம் இங்கே உருவாகிக் கொண்டிருக்கின்றன.
சுபா
4 comments:
சில கலைப்பொருட்களை நாம் அலட்சியமாகப்பார்க்கிறோம். அவர்கள் அதை செய்யும் விதம் பார்த்தால் மதிப்பு கூடும்.
அன்பின் சுபா,
கலைப் பொருட்களை கண்டு ரசிப்பதைப்போலவே அதைச்செய்யும் விதமும் அதே அளவிற்கு இரசிக்கக்கூடியது என்பதைத் தங்கள் படமும், விளக்கங்களும் தெளிவாக்கியிருக்கின்றன. வாழ்த்துக்கள். அழகான படங்கள்.
அன்புடன்
பவளா
உண்மைதான். கலைப்பொருட்களை குவித்து வைத்திருக்கும் போது அவை ஒவ்வொன்றையும் உருவாக்க ஒரு கலைஞன் எடுத்துக் கொள்ளும் சிரமம் நமக்கு தெரிவதில்லை. இபப்டி பார்க்கும் போது நமது பார்வைஏ மாறிவிடுகின்றது இல்லையா..
இதுவும் பொக்கிஷம் தான் :) அரிய பதிவு.
Post a Comment