லா பல்மாவிலே நடையோ நடையென்று நடந்து சென்றது இந்த ஆண்டு ஏப்ரல் கடைசியில். அந்தக் கதையை எனது லா பல்மா பதிவில் குறிப்பிட்டு நான் கண்ட காட்சிகளைப் படங்களின் வடிவில் உங்களுக்கும் கண்டு களிக்க வழங்கியிருந்தேன். ஐரோப்பாவின் ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த ஆப்பிரிக்க கண்டத்தின் அருகில் உள்ள தீவு அது. அங்கிருந்து தாவி மீண்டும் தமிழகம் வரலாம் என்று முடிவு செய்து இன்று ஒரு புதிய பயணத்தொடரைத் தொடங்குகின்றேன். இந்த ஆண்டு ஜனவரி மாதம் நான் தமிழகம் வந்திருந்த போது கிருஷ்ணகிரிக்குச் சென்று அங்கிருந்து தருமபுரி சென்று பின்னர் ஈரோடு சென்று அங்கிருந்து புறப்பட்டு காரைக்குடிக்குச் சென்ற விஷயத்தை ஒரு சில பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். அந்த காரைக்குடி பயணத்தைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று விரும்புகின்றேன்.
இந்தப் பயணத்தில் என்னுடம் உடன் இருந்தவர்கள் சிலர். அவர்களை அறிமுகப்படுத்தி விட்டு பயணத்தைத் தொடரலாம் என நினைக்கின்றேன்.
டாக்டர்.நா.கண்ணன்
முனவர்.காளைராசன்
முனைவர்.வள்ளி
பாலு
திரு.மைக்கல்
இவர்களோடு எனது 3 நாட்களை காரைக்குடியிலும் இந்த நகரின் அருகாமையில் உள்ள மற்ற சில சிற்றூர்களிலும் கழித்த அனுபவத்தோடு அங்கே மேலும் பலரைச் சந்தித்த அந்த நல்ல பொழுதுகள் மனதில் பதிந்திருக்கின்றன. அந்த நினைவுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் எனக்கு மகிழ்ச்சி.
சரி.. இப்போது காரைக்குடிக்குப் போவோமா..???
தொடரும்...
சுபா
No comments:
Post a Comment