Tuesday, July 3, 2012

லா பல்மாவில் நடையாக நடந்த கதை - 10

சாண்டா க்ரூஸ் - மனதில் நிற்கும் சில காட்சிகள்


சாண்டா க்ரூஸ் துறைமுகம் - நீல வானும் நீல கடற்கரையும்...

பெட்டூனியா மலர்களும் வேறு சில மலர்களைத் தாங்கிய பூச்செடிகளும்  வீடுகளை அலங்கரிக்கின்றன


சாலையோரத்து வீடுகள், பால்கனியில் தொங்கும் பூக்கள் - இவை சாலையை சோலையாக்குகின்றன..


சுபா - சண்டா க்ரூஸ் நகர மைய சாலையில்.. சியாஸ்டா நேரத்தின் போது. சாலையே வெறிச்சோடிப் பொய் விடுகின்றது சியாஸ்டா நேரத்தில்.. மக்கள் மதிய ஓய்வு எடுக்கும் போது கடைகள் 2 மணி நேரங்களுக்கு மூடப்படுவதால் ஆட்கள் நடமாட்டம் சாலையில் மிகக் குறைவே.. 

உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. சாலையோரம் அமர்ந்து மக்கள் உணவருந்திக் கொண்டும் ஓய்வெடுத்துக் கொண்டும் இருக்கும் காட்சி





ஒரு உணவகம்.. கனேரித் தீவின் கட்டிடக் கலையைப் பிரதிபலிப்பதாக


சுபா - சாண்டா க்ரூஸில்


ஒரு வீட்டின் வாசல் பகுதி. கதவில் மாட்டப்பட்டிருக்கும் மாதா படத்தின் காட்சி ஆசிய நாடுகளில் மக்கள் வீட்டு வாசலில் சுவாமிப் படங்களை மாட்டி தொங்க விட்டிருப்பதைப் போன்றே அமைந்துள்ளது.


சாண்டா க்ரூஸ் - நகரின் மையப் பகுதி.. கட்டிடங்கள் சாலை ஓரத்தில்..அவற்றின் அமைப்பு..


எல் சல்வடோர் தேவாலயம்


எல் சல்வடோர் தேலாயத்திற்கு முன் புறம் மலரால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சிலுவை (ஒரு புறம் முழுதும் மஞ்சள் நிறப் பூக்கள்)

அதே சிலுவையின் மறு புறம் முழுதும் சிவப்பு நிற மலர்களால் அலங்காரம்..

தொடரும்..

சுபா













Sunday, July 1, 2012

லா பல்மாவில் நடையாக நடந்த கதை - 9


சாண்டா க்ரூஸ்



லா பல்மா தீவின் தலைநகரம் சாண்டா க்ரூஸ். இத்தீவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது இந்நகரம். கடற்கரை துறைமுக நகரம் இது. மே மாதம் 3ம் நாள் 1493ம் ஆண்டில் Alonso Fernández de Lugo இத்தீவைக் கைப்பற்றி உருவாக்கிய நகரம். ஏனைய கனேரி தீவிகளைப் போலவே இத்தீவும் கடற்கொள்ளையற்களின் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு நகரம். அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமிடையிலான வர்த்தகப் போக்குவரத்துக்கு முக்கியமாக விளங்கிய, விளங்கிவரும் ஒரு துறைமுக நகரம் இது.



வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி இது மிகப்பழமையான ஒரு நகரமாகக் கருதப்படுகின்றது. பழங்குடி மக்கள் வாழ்ந்தமைக்கான தடயங்களையும் இப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

1553ம் ஆண்டு ஜூலை 21ம் நாள் இந்தத் தீவை 700 பேர் கொண்ட ப்ரென்ச் படை ஆக்கிரிமித்தது. 9 நாள் நடைபெற்ற போரில் இந்த நகரத்தையே முற்றிலும் அழித்துச் சென்றது இப்படை. இந்த அழிவுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட நகர் தான் இப்போது உள்ள சாண்டா க்ரூஸ். அதற்குப் பின்னர் இந்த நகரம் ஒரு துறைமுக நகரமாக விரிவாக வளர்ச்சியடைந்ததோடு அக்கால கட்டத்தில் உலகிலேயே மூன்றாவது மிக முக்கிய துறைமுகமாக விளங்கியது என்பது வியக்க வைக்கின்றது.

நாங்கள் லா பல்மாவில் இருந்த நாட்களில் மூன்று முறை சாண்டா க்ரூஸ் சென்று வந்தோம். ஒரு தலைநகருக்குரிய எல்லா அம்சாங்களும் உள்ள ஒரு சிறு நகரம் இது. பொருட்காட்சி சாலைகள், நகர மையம், டவுன் ஹால், கத்தோலிக்க தேவாலயங்கள், வரலாற்று சின்னமாகத் திகழும் கட்டிடங்கள், தற்கால வாழ்க்கை முறைக்குத் தேவையான நவீன அங்காடிக் கடைகள், உணவகங்கள், சாலையோர இசைக் கலைஞர்கள், வரலாற்றில் இடம் பெறுபவர்களின் சிலைகள் என்று பார்க்க நிறைய அம்சங்கள் நிறைந்த ஒரு நகரம் இது.



சாண்டா க்ரூஸ் நகரத்தின் வீடுகளின் கட்டிட அமைப்பு ஒரே வகையாக அமைந்திருப்பதையும் முன்பக்கத்தில் பால்கனி வைத்து அதில் பூக்கள் கொண்டு அலங்கரித்திருப்பதையும் நகர் முழுதும் காணலாம். இவ்வகை கட்டிடக் கலை இங்கு ப்ரத்தியேகமாக அமைந்துள்ளதோடு இது சுற்றுலா பயணிகளைக் கவரும் ஒரு அம்சமாகவும் திகழ்கிறது. என்னைப் போலவே பலர் கேமராவின் லென்ஸைத் திருப்பி மாற்றி படம் எடுத்துக் கொண்டு செல்வதைப் பார்த்துக் கொண்டே நானும் பல படங்களை எடுத்துக் கொண்டேன்.



லா பல்மா தீவு முழுதுமே மிகத் தூய்மையாக, சாலைகளில் எங்கனுமே குப்பைகளைப் பார்க்க முடியாத படி நேர்த்தியாகப் பாதுகாக்கப்படுகின்றது. தலைநகரத்திலும் இதே நிலைதான். சாலைகள், கடைத்தெருக்கள், துறைமுகப்பகுதி, உணவகத்தின் சுற்றுச் சூழல் எல்லாமே மிகத் தூய்மையாக அமைந்து மிக ரம்மியமான அனுபவத்தை உருவாக்குவதாக அமைந்துள்ளது.

சாண்டா க்ரூஸ் நகர மத்தியில் வரலாற்றுச் சின்னங்களும் கட்டிடங்களும் அமைந்துள்ள பகுதியில் தான் 16, 17ம் நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டிடங்கள் பல இருக்கின்றன. கனேரி தீவுகளுக்கே உறிய கட்டிடக் கலை அமைப்பை காட்டும் அழகான கட்டிடங்கள் இவை. பொதுவாகவே வெள்ளை நிறத்திலும் இடைக்கிடையே எரிமலைக் கற்களை இணைத்த கரும் பகுதிகளும் இணைந்ததாக அமைவது கனேரித் தீவுகளின் கட்டிடக் கலை. இந்த வகை கட்டிடங்கள் சூழ்ந்ததாக இப்பகுதியில் பல கட்டிடங்கள், தேவாலயங்கள் ஆகியவை இருக்கின்றன.



இப்பகுதியில் தான் டவுன் ஹால் கட்டிடமும் உள்ளது. இக்கட்டிடம் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அரசர் இரண்டாம் பிலிப் அவர்களின் காலத்தைச் சார்ந்தது. டவுன் ஹால் கட்டிடத்தின் எதிர் புறத்தில் எல் சல்வடோர் தேவாலயம் இருக்கின்றது. கத்தோலிக்க கிறிஸ்துவ சமய வழிபாடுகள் இன்றளவும் இத்தேவாலயத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

லா பல்மா செல்பவர்கள் சாண்டா க்ரூஸ் நகரைச் சுற்றிப்பார்ப்பதற்காக ஒரு நாள் ஒதுக்கிக் கொள்ளலாம். நகரின் அருகாமையிலேயே அமைந்துள்ள மலைப்பகுதிக்கு நடைப்பயணம் செய்வதற்கும் வாய்ப்புக்கள் உள்ளதால் நகரைச் சுற்றிப் பார்த்து நடைப்பயணமும் மே|ற்கொண்டு வரலாம். சாண்டா க்ரூஸில் தான் இத்தீவின் விமான நிலையமும் அமைந்துள்ளது. துறைமுகம், விமான நிலையம், வர்த்தகம், கலை பண்பாட்டு விஷயங்கள் என பல வகையில் முக்கியத்துவம் கொண்டதாகத் திகழ்கின்றது சாண்டா க்ரூஸ்.

தொடரும்..

சுபா

Thursday, June 28, 2012

லா பல்மாவில் நடையாக நடந்த கதை - 8


காய்கறிகளும் பழங்களும்

பழங்களும் காய்கறிகளும் ஒவ்வொரு நாட்டிற்கு வித்தியாசப்படுவனவாக உள்ளன. வாழை, அவக்காடோ, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவை இங்கே அதிகமாகப் பயிரிடப்படுவதைப் பற்றி முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். இவற்றைப் போலவே இத்தீவில் மாங்காய் மரங்களும் பப்பாளி மரங்களும் நிறைந்து இருக்கின்றன. பப்பாளி, மாம்பழம் வாழை கலந்த ஒரு பழச்சாறு சாப்பிட்டுப் பார்த்தேன். சுவை அபாரமாக இருந்தது. கூடுதல் இனிப்புச் சுவை வேண்டுமே என்று சக்கரை கலக்கத் தேவையே இல்லை. அவ்வளவு சுவை.

காடுகளிலும் மலைப்பிரதேசங்களிலும் நான் வெகுவாக figue ( ஃபிக் ) பழ மரங்களைப் பார்த்தேன். அவை ஓவ்வொன்றும் ராட்சத வடிவில்.. இங்கு ஜெர்மனியில் நான் பார்ப்பது போன்று செடி வகை என்றில்லாமல் மிக மிகப் பெரிதான மரங்கள். கொடிகள் போல மரத்தின் கிளைகள் நெளிந்து வளைந்து படர்ந்து மரம் முழுக்க காய்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

லா பல்மாவில் இருந்த ஒரு ஞாயிற்றுக் கிழமை லோஸ் லியானோஸ் நகரில் நடைபெறும் ஞாயிற்றுக் கிழமை சந்தைக்குச் சென்றிருந்தோம். இந்த சந்தையில் உள்ளூர் மக்கள் விரும்பி வந்து காய்கறிகளையும் பழங்களையும் வாங்கிச் செல்கின்றனர். உள்ளூர் மக்களோடு சுற்றுப் பயணிகளும் இங்கே கூடுகின்றனர்.

தங்கள் வீடுகளிலுள்ள தோட்டங்களில் விளைகின்ற காய்கறிகளையும் பழங்களையும் கொண்டு வந்து வியாபாரிகள் விற்பனைக்ku வைக்கின்றனர். இதில் உள்ள பழவகைகளைப் பார்க்கும் போது சில புதியதாகவும் சில நான் பார்த்தும் சுவைத்தும் இல்லாததாகவும் அமைந்திருந்தன.



இவை மரக்கூஜா பழங்கள். மரக்கூஜா பழச்சாற்றை பல முறை அறுந்தியிருக்கும் எனக்கு இப்பழங்கள் எப்படியிருக்கும் என்று இதுவரை தெரியாது. சந்தையில் வியாபாரி ஸ்பானீஸ் கலந்த டோய்ச் மொழியில் விளக்கிச் சொன்ன பிறகு தான் தெரிந்து கொண்டேன். இரண்டு பழங்களை கொடுத்து என்னைச் சாப்பிட்டுப் பார்க்கவும் சொன்னார்கள். சாப்பிட்டுப் பார்த்து கொஞ்சம் பழங்களை வாங்கிக் கொண்டேன்.



மரக்கூஜா பழத்தை இரண்டாக வெட்டினால் இப்படியிருக்கின்றது. மாதுளம் பழம் போன்ற கொட்டைகள் நிறைந்த பழம். நல்ல சுவை.


ஃபிக் (figue) பழங்கள் மரத்தில். அவக்காடோ, ஆரஞ்சு, வாழை போலவே அதிகமாக இத்தீவில் காணப்படும் ஒரு பழம். சற்று மலைப்பாங்கான இடத்தில் ராட்சத வடிவில் இம்மரங்கள் வளர்ந்திருக்கின்றன. ஏப்ரல் மே மாதத்தில் கரும் பச்சை நிறத்தில் தோற்றமளிக்கும் இப்பழங்கள் ஜூலை ஆகஸ்டு செப்டம்பர் மாடஹ்ங்களில் கரும் ஊதா நிறமாக மாறி சாப்பிட உகந்ததாக அமைந்து விடுகின்றது. 





இது ஒரு வகை தக்காளி ஆனால் பழ வகையில் சேர்த்துக் கொள்ளப்படுவது. நல்ல புளிப்புச் சுவை நிறைந்த பழம். இதிலும் கொஞ்சம் வாங்கிக் கொண்டேன்.



இவை சிறிய வகையில் இருக்கும் ஹனி டியூ போன்ற ஒரு பழம். வித்தியாசமான, அதே நேரம் இனிப்பும் கொஞ்சம் புளிப்பும் கலந்த சுவை நிறைந்த பழம். இதிலும் கொஞ்சம் வாங்கிக் கொண்டேன்.

எனக்குத் தெரிந்த அவக்காடோ, வாழை, மாம்பழம், பப்பாளி, ஃபிக் போன்றவற்றோடு இந்தப் புதிய பழங்களும் வாரம் முழுக்க சுவைக்க இது நல்ல வாய்ப்பாக அமைந்தது.

சந்தையில் பழங்கள் மட்டுமல்லாது காய்கறிகளும் கூட நிறைந்திருக்கின்றன. பசுமையான கீரை வகைகள் , தக்காளி, மிளகாய், ப்ரோகோலி முட்டைக் கோஸ், அவரை வகை, கிழங்கு வகைகள் என பல ரகம்.


பழங்கள் போல காட்சியளிக்கும் இவை மிளகாய் வகையைச் சேர்ந்தது.


மூலிகை செடிகள் விற்பனைக்காக..


சந்தையில்..







தொடரும்...

சுபா


சந்தையில் காய்கறிகள்..

Saturday, June 16, 2012

லா பல்மாவில் நடையாக நடந்த கதை - 7


அவகாடோ

லா பல்மா தீவில் எங்கெங்கு பார்த்தாலும் வாழை தோப்புக்கள் நிறைந்துள்ளன என்று முதல் பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன். பழங்களுக்கு இந்தத் தீவில் குறைவே இல்லை எனலாம். வாழையைப் போலவே இங்கே அவக்காடோ மரங்களும் நிறைந்து காணப்படுகின்றன.




வீடுகளில் தோட்டத்தில் நட்டு வைக்கப்பட்டுள்ள அவக்காடோ மரங்கள்.. பூக்கள் நிறைந்திருக்கின்றன!

அவக்காடோ மரத்தை லா பல்மா செல்லும் வரை நான் பார்த்ததேயில்லை. சூப்பர்மார்க்கெட்டுகளில் கிடைக்கும் பழத்தை வாங்கி உணவுக்குப் பயன்படுத்துவதோடு சரி. அதனால் முதலில் அவக்காடோ மரத்தை பார்த்தபோது மாங்காய் மரம் போல இருக்கின்றதே என நினைத்துக் கொண்டிருந்தேன். ஓரிரு நாட்களுக்குப் பிறகு ஒரு நீண்ட மலைப்பாதை நடைப்பயணத்தின் போதுதான் அவக்கோடோ தோப்பில் மரத்தில் காய்கள் காய்த்துக் குலுங்குவதைப் பார்த்தேன். அதுமுதல் இம்மரத்தை வெகு சுலபமாக அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.




ஒரு மரத்தில் கொத்துக் கொத்தாக அவக்காடோ காய்கள்

அவக்காடோ காயை /பழத்தின் சுவையை விவரிப்பது சற்றே சிரமம். இதனைத் சுவைத்தவர்களுக்கே அதன் சுவை தெரியும். ஒரு விதமான க்ரீம் போன்ற வழுவழுப்பான அதே சமயம் மிக இனிப்போ, கசப்போ புளிப்போ ஏதுமற்ற ஒரு சுவை அது. பொதுவாக சாலட் வகைகளில் சேர்த்துக் கொள்ளவும், இத்தாலிய பாஸ்டா வகைகளில் சேர்த்தும் நான் உணைவு தயாரிப்பதுண்டு.

தென் அமெரிக்க உணவில் அவக்காடோ நிச்சயம் இடம்பெறும். குறிப்பாக மெக்ஸிகோ, கொலம்பியா, இக்குவாடோர், சிலி போன்ற நாடுகளில் ரொட்டிக்கு ஸ்ப்ரட் போல, சட்னி போல தயாரித்து அவகாடோ பழத்தைப் பயன்படுத்துகின்றார்கள்.




இப்படத்தில் மலைப்பிரதேசத்தில் அவக்காடோ தோட்டம் அமைத்திருப்பதைக் காணலாம். இளம் பச்சை நிறமாக இருப்பது அவக்காடோ தோட்டம்.

லா பல்மா தீவில் தோப்புக்களில் மட்டுமல்லாமல் ஆசிய நாடுகளில் நாம் வாழை, மாமரங்களை வைத்திருப்பது போல வீடுகளிலும் அவக்காடோ மரங்களை வைத்திருக்கின்றார்கள். பார்ப்பதற்கு சற்றேரக்குறைய மாங்காய் மரம் போலவே தோன்றுகின்றது அவக்காடோ மரம். பொதுவாக மிகப் பெரிதாக வளர்ந்திருக்கும் ஒரு மரத்தில் ஒரே சமயத்தில் ஏறக்குறைய 100 அவக்காடோ காய்கள் தொங்கிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

அவக்காடோ காயாக இருக்கும் போது சமைப்பார்களா எனத் தெரியவில்லை. ஆனால் பழுத்தவுடன் இதனை வெவ்வேறு வகை பதார்த்தங்கள் சமைக்கலாம். இப்பழம் பழுத்துவிட்டால் தொட்டுப் பார்க்கும் போடே மெண்மையாக இருக்கும். அதன் தோலை ஒரு பக்கத்தில் நீளமாக கத்தியால் கீறி விட்டு கையாலேயே தோலை பழத்திலிருந்து பிரித்து எடுத்து விடலாம். ஓடு கழண்டு விடுவது போல இதன் தோல் பழத்திலிருந்து பிரிந்து விடும். பழத்தின் நடுவே பெரிய கடினமான கொட்டை இருக்கும். இது கடனமாக இருப்பதால் பழத்தை இரண்டாக வெட்டுவது என்பது சற்று சிரமம்.



சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள அவக்காடோ - கருமையான நிறத்தில்

லா பல்மா உணவகங்களில் அவக்காடோ விதம் விதமாக சமையலில் பயன்படுத்தப்பட்டாலும் சாலட்டில் அதன் சுவை கெடாத /மறையாத வண்ணம் அப்படியே சாப்பிடுவது தான் எனக்குப் பிடித்திருந்தது. அவக்காடோ சாலட் என்று இணையத்தில் தேடினால் பல ரெசிப்பிகள் கிடைக்கின்றன. ஒரு படம் இணையத்திலிருந்து கிடைத்ததை கீழே இணைத்திருக்கிறேன். இங்கே க்ளிக் செய்து பாருங்கள். இன்னும் விதம் விதமான அவக்காடோ கொண்டு தயாரிக்கப்பட்ட சாலட்களின் படங்களைக் காணலாம்.



தொடரும்..

அன்புடன்
சுபா

Monday, June 11, 2012

லா பல்மாவில் நடையாக நடந்த கதை - 6

தெனகூயாவும் லா பல்மாவின் தெற்கு முனையும்

லா பல்மாவின் தெற்கு முனைக்கு நான் நடந்தே சென்று அடைந்ததை நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இன்று மேலும் சில படங்களைப் பகிர்ந்து கொள்ள இப்பதிவு. ஒவ்வொரு படமும் இயற்கயின் அழகை தனித்தனியாக வேறு படுத்திக் காட்டுவதாக உள்ளன. தெனகூயா எரிமலை தொகுப்பில் தேர்ந்தெடுத்த சில படங்கள் மட்டும் இதோ.


தெனகூயா எரிமலை நோக்கி



கடந்து செல்லும் பாதையில் எரிமலை கற்கள்.. ஆங்காங்கே வளர்ந்து தெரியும் சிறு செடிகள் , புதர்கள்.




சான் அந்தோனியோ எரிமலை வாய்ப்பகுதி. தெனகூயா செல்வதற்கு முன் சான் அந்தோனியோ எரிமலையையும் சென்று பார்த்து அங்கு எடுக்கப்பட்ட படம். இப்பகுதியில் நிற்பதும் பனி படர்ந்த சூழலில் காற்றைச் சுவாசிப்பதும் சுகமான அனுபவம்.



சான் அந்தோனியோ எரிமலை வாய் பகுதியில் உள்ள பாறைகள்



சான் அந்தோனியோ எரிமலை கக்கிய நெருப்புக் குழம்பிலிருந்து உருவாகிய பாறைகள்


சான் அந்தோனியோ எரிமலை கக்கிய நெருப்புக் குழம்பிலிருந்து உருவாகிய பாறைகள்


சான் அந்தோனியோ எரிமலை கக்கிய நெருப்புக் குழம்பிலிருந்து உருவாகிய பாறைகள் - சற்று வித்தியாசமாக


சான் அந்தோனியோ எரிமலை கக்கிய நெருப்புக் குழம்பிலிருந்து உருவாகிய பாறை .. இயற்கையாகவே இந்தப் பாறையின் அமைப்பு சாவ்வு நாற்காலி போல இருப்பது கண்களைக் கவர்தாக இருக்கின்றது அல்லவா?



சான் அந்தோனியோ எரிமலை கக்கிய நெருப்புக் குழம்பிலிருந்து உருவாகிய பாறைகள்






தென்கூயா நோக்கிச் செல்லும் பாதையின் மற்றொரு புறம்



எரிமலை கற்கள்.. என் கையில்..



லா பல்மா வரை படம் .. இதன் தெற்கு முனைப்பகுதிதான் அடுத்த படங்களில் ..



தெற்கு முனைப்பகுதி.. நுனியில் அட்லாண்டில் சமுத்திரம்



தென் முனை.. மேலும் ஒரு கோணத்தில்


தென்முனை


தெனகூயா எரிமலையின் வாய்



தென்கூயா எரிமலையைப் பார்த்துக் கொண்டு ஒரு சிறு செடி.. பார்க்க பெரிய மரத்தின் சாயலைக் கொண்டிருந்தாலும் இது 20 செமீ உயர்ம் உள்ள ஒரு செடிதான்


எரிமலைக் குழம்பிலிருந்து உருவான பாறை.. அதில் வளரும் தாவரங்கள்..


எரிமலைக் குழம்பிலிருந்து உருவான பாறை.. அதில் வளரும் தாவரங்கள்..


எரிமலைக் குழம்பிலிருந்து உருவான பாறை.. அதில் வளரும் தாவரங்கள்..


இங்கே காணப்படும் ஒரு செடி வகை



தெனகூயாவை நோக்கி என் பார்வை..!


அன்புடன்
சுபா