காலை 6:45 விமானம் ஒரு மணி நேரம் 5 நிமிடப்பயணத்தில் பூடா பெஸ்ட் வந்து சேர்ந்தது. விமான நிலையத்திலிருந்து பூடா பெஸ்ட் செல்ல பேருந்து எடுத்து பின் மெட்ரோ ரயில் எடுக்க வேண்டும். 25 நிமிட பயணத்தில் பூடாபெஸ்ட் வந்து் விட்டேன்.
இன்று விடுமுறை நாள் என்பதால் மக்களை பார்ப்பதே அரிதாக இருக்கின்றது. அதுவும் காலை வேளே வாறு. காலை உணவு சாப்பிடலாம் என கடைகளை தேடினால் உள்ளூர் வகை உணவகங்கள் திறக்கப்படவில்லை. pizzahut, Starbucks, KFC, இப்படித்தான் திறந்துள்ளன. நான் ஒரு பெர்கர் ஆர்டர் செய்து கப்புச்சீனோ வாங்கிக்கொண்டேன்.
இப்போதைக்கு இது போதும்.
பூடாபெஸ்டில் ஏறக்குறைய 100 அருங்காட்சியகங்கள் உள்ளன. என் பட்டியல் நீளமாக இருக்கின்றது. எதை பார்ப்பது ..எதை விடுவது?
No comments:
Post a Comment