நேற்று ஒரு பயண வழிகாட்டியின் குழுவில் இணைந்து கொண்டு 90 நிமிடம் புடாபெஷ்டின் முக்கிய வரலாற்றுச் சின்னங்களைப் பார்க்கச் சென்றிருந்தேன். இந்தக் குழுவில் மட்டுமல்ல.. வேறு சில பகுதிகளிலும் என்னைப் போல பயணித்துக் கொண்டிருந்தோரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்த போது அதிகமான பெண்கள் இப்படி பெரும் நகரங்களைச் சுற்றிப்பார்க்க வருகின்றனர் என்பதைக் காணமுடிகின்றது. பெரும்பாலோர் ஸ்பெயின், ஜெர்மனி, வட அமெரிக்க நாடுகளிலிருந்து இப்படி பயணிக்கின்றனர்.
உலகை அறிந்து கொள்ள பெண்களும் தனியாக பயணம் செய்வது மேற்குலகில் இயல்பான ஒரு விசயமாகத்தான் உள்ளது.
No comments:
Post a Comment