Sunday, January 29, 2012

கிருஷ்ணகிரிக்கு போகலாம் வாங்க...! - 2

தமிழ்நாடு ஹோட்டல் சாலை ஓரத்திலேயே இருந்ததால் எங்களுக்குச் சிரமம் இல்லாமல் போனது. சாலையில் இறங்கியதும் சுற்றும் முற்றும் பார்த்தால் என்னையும் கண்ணனையும் தவிர வேறு யாரும் இல்லை. ஹோட்டல் வெளிக்கதவு சாத்தியிருந்தது. இந்த ஹோட்டலாகத் தான் இருக்கும் என்று மனதில் நினைத்துக் கொண்டு இரும்பு கதவைத் திறந்து உள்ளே சென்று வரவேற்பு பகுதிக்குச் சென்று மெதுவாக யாரும் இருக்கின்றார்களா எனக் கூப்பிட்டு பார்த்தேன்.

படுத்திருந்திருப்பார் போல.. ஒருவர் உடனே எழுந்து வந்து ..நான் ஏதும் சொல்வதற்கு முன்னரே.. நீங்கள் ரெண்டு பேர் தானே. உங்களுக்கான அறைகள் ஒதுக்கி வைத்து விட்டோம். நீங்கள் வந்ததும் ப்ரகாஷ் கூப்பிடச் சொன்னார். கூப்பிடட்டுமா.. என்று கேட்டுக் கொண்டு எனக்கும் கண்ணனுக்கும் அறைச் சாவிகளை வழங்கினார்.

வேண்டாம் .. காலையில் பேசுவோம்.. ப்ரகாஷ் இப்போது தூங்கட்டும் என்று சொல்லிவிட்டு நாங்கள் எங்கள் அறைகள் இருந்த பகுதிக்கு வெளியே பெட்டியை இழுத்துக் கொண்டு நடந்தோம். அறை மிக நன்றாக அமைந்திருந்தது. விசாலமான அறையும் குளியல் அறையும் கூட.

செல்வ முரளியும் நண்பர் சக்தியுடன் வந்து சேர்ந்து விட்டார். காலை 7 மணிக்கு பூங்காவில் நம் நண்பர்கள் ப்ரகாஷ், செல்வா அவர் நண்பர் சக்தி எல்லோரும் சந்தித்தோம். பல மாதங்களுக்குப் பிறகு மீணுட்ம் சந்திப்பது மகிழ்ச்சி தரும் விஷயமல்லவா. பேசிக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா. காலையில் காப்பி சாப்பிடாமல் எப்படி?

காபி ஆர்டர் செய்து வாங்கி வெளியில் இயற்கையை ரசித்துக் கொண்டே சாப்பிடலாம் என்றால் எங்களுக்கு போட்டி போட்டுக் கொண்டு குரங்குகள் வந்து சேர்ந்து விட்டன. எங்கள் கையில் இருந்த பேப்பர் கப் காபி அவற்றிற்குப் பிடித்து விட்டது. எங்கள் முகத்தையும் கையையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு அவை அருகிலேயே உட்கார்ந்து விட்டன.

கொஞ்சம் காபியுடன் ஒரு பேப்பர்கப்பை நாங்கள் வைத்தோம். பாவம் பார்த்துக் கொண்டே இருக்கின்றனவே என்று. அவையும் காபி குடித்து பழகியிருக்குமோ என்ற சந்தேகத்தில். அதில் ஒரு குரங்கு அதை ஓடி வந்து எடுத்துக் கொண்டு ரெண்டு கைகளாலும் அந்தக் கப்பை எடுத்து, அதில் மீதம் இருந்த காபியைக் கொட்டி விட்டு அந்தக் கப்பை கிழி கிழி என்று கிழித்து போட்டு விட்டது.
அதேபோல அடுத்த கப்பையும்.. குரங்கு கையில் கிடைத்த பூமாலைப் போல என்று எப்போதோ படித்த பழமொழி தான் ஞாபகம் வந்தது.

மனிதர்களோடு சேர்ந்து குப்பை போடுவதில் குரங்குகளும் போட்டி போடுகின்றன. நாம் அதற்கு உதாரணமா அல்லது அவை நமக்கு உதாரணமா என்று யோசிக்கத்தான் வேண்டும்..

Saturday, January 28, 2012

கிருஷ்ணகிரிக்கு போகலாம் வாங்க...! - 1

தலைப்பைப் பார்த்ததுமே கிருஷ்ணகிரிக்குச் செல்ல ஆசை வருகிறதா? இரண்டு நாள் பயணத்தில் நான் நமது நண்பர்கள் குழுவினருடன் கிருஷ்ணகிரிக்குச் சென்று வந்த விஷயத்தை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். பதிவுகள் வேறொரு இழையில் பதிய நினைத்திருக்கிறேன். இந்த இழையில் கிருஷ்ணகிரியில் எங்கள் அனுபவம் என்பதாக மட்டுமே பதிய விரும்புகிறேன். இந்தப் பயணத்தில் கலந்து கொண்ட நா.கண்ணன், செல்வா, ஸ்வர்ணா, கவி.செங்குட்டுவன், ப்ரகாஷ் சுகுமாரன் ஆகியோரும் இங்கே உங்கள் கருத்துக்களை இணைத்துக் கொள்ளுங்கள்.

சரி முதலில் பயணத்தில் கலந்து கொண்டவர்களின் முகங்களை அறிமுகப்படுத்துவது அவசியம் இல்லையா... இந்தப் பதிவில் முகங்களும் பெயர்களும் மட்டும்..!




திரு.சுகவனம் முருகன்



பாலகன் முரளி




சுபா + கண்ணன்



ரவி






ஸ்வர்ணா குழந்தையுடன்


சக்தி





திரு.திருமதி கவி.செங்குட்டுவன்


ப்ரகாஷ்


தொடரும்...

அன்புடன்
சுபா