Sunday, July 27, 2014

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 9

ஒன்றை உருவாக்குதல் என்பது எளிதன்று. அதற்கு சிந்தனைத் திறன், செயல்திறன், உருவாக்கத் திறன் ஆகிய அனைத்தும் இணங்கி இயைந்து செயல்பட வேண்டும்.

ஆனால் ஒன்றினை சிதைத்தல் என்பது தான் எவ்வளவு சுலபமான ஒரு  ​காரியமாகி விடுகின்றது?

அயோத்தையா நகரை மன்னர் ராமாதிபோதி 1350ம் ஆண்டில் உருவாக்கினார். அவர் பரம்பரையில் அடுத்தடுத்து வந்தோரும் ஆட்சி செய்தோரும் படிப்படியாக அந்த நகரையே கலைக்கோயில்கள் நிரம்பிய புனித பூமியாக மாற்றினர். திபேத், இலங்கை ஆகிய நாடுகளுக்கும் இங்கிருந்து புத்த பிக்குகள் சென்று வருவதும், அந்த நாடுகளில் தங்கியிருந்து புத்த பிக்குகள் பயிற்சி மேற்கொண்டு திரும்பி வந்து உள்ளூரில் பௌத்தம் வளர்ப்பதும் நடைபெற, அயோத்தையா ஏறக்குறைய 300 ஆண்டு செழிப்புடன் கிழக்காசியாவில் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வந்தது.

1767ம் ஆண்டில் பர்மிய படையினர் தொடுத்த பேர் அயோத்தையாவை முழுமையாக அதன் சிறப்பை இழக்கச் செய்தது.  அரச பரம்பரயினரின் அரண்மனைகளும் அரசாங்க கட்டிடங்களும் முற்றும் முழுவதுமாக இப்போரின் போது அழிக்கப்பட்டாலும் இப்பகுதியில் அமைந்திருக்கும் புத்த ஆலயங்களில் பல  சேதத்தைக் காணவில்லை. ஆயினும் அரண்மனைப் பகுதியைச் சுற்றிலும் உள்ள கலைச்சிறப்பு மிக்க பல விகாரைகள் சிதலமடைந்து இன்றும் இந்த வரலாற்றுப் பேரழிவை நினைவுறுத்திக் கொண்டிருப்பதை இன்றும் அங்கு நாம் செல்லும் போது உணர முடிகின்றது.

அயோத்தையாவில் வாட் யாய் சாய் மொங்கோன் பார்த்த பின்னர் அங்கிருந்து சற்றே அயோத்தையா நகருக்குள் எங்கள் பேருந்து நுழைந்தது. ஆங்காங்கே செங்கற்கோயிற்கள்.. புத்த விகாரைகள்.. அடுத்தடுத்து வரிசையாக சில.. தனியாக நிற்கும் விகாரைகள்.. இவை அனைத்துமே வழிபாட்டுக்கு உகந்த நிலையில் இல்லாது உடைந்து சிதிலமடைந்த நிலையிலேயே இன்றளவும் காட்சியளிக்கின்றன.

பேருந்தை அயோத்தையா ஹெரிட்டேஜ் பார்க் வாயிற் புறத்தில் பேருந்து நிற்கும் இடத்தில் நிறுத்தி விட்டு எங்களை எங்கள் பயண வழிகாட்டி சிதிலமடைந்த அரண்மனைப் பகுதியையும் அதனைச் சுற்றி அமைந்திருக்கும் சேதமடந்த புத்த விகாரைகளையும் பார்த்து வர அழைத்துச் சென்றார்.

சிதலமடைந்த நிலையிலே கூட கண்களைக் கவரும் இந்த கோயில்கள் அதன் சிறப்பு கெடாமல் இருந்தால் இன்னும் காண கண் கோடி வேண்டுமோ என்று எண்ண வைத்தது அங்கு நான் கண்ட காட்சி.

இப்பகுதியில் அமைந்திருப்பதே வாட் ப்ரா சி சன்பெட் புத்த விகாரை. அயோத்தையாவின் மிக முக்கிய வழிபாட்டுத்தலமாக அமைந்திருந்த கோயில் இது. இந்த கோயிலும் அதனைச் சுற்றிய வளாகமும் அமைந்திருக்கும் பகுதி 1350 முதல் 1448 வரை அரசபரம்பரையினர் அதிகாரப்பூர்வ மடாலயமாகத் திகழ்ந்தது. இங்கு குறிப்பாக அமைந்திருக்கும் மூன்று விகாரைகளில் அயோத்தையா அரசர்கள் மூவரின் எரிக்கப்பட்ட பூத உடலின் சாம்பலும் எலும்புகளும் தனித்தனி விகாரைகளில் தகனம் செய்யப்பட்டுள்ளன. இந்த விகாரைகள் முற்றும் முழுதும் சேதம் அடையாத போதும் கூட  கதவுகள் முழுதாக அடைக்கப்பட்டு பார்வையாளர் யாரும் உட்சென்று காண இயலாத வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கோயில் அமைந்திருக்கும் இடம் ஒரு நீள்சதுர அமைப்பில் ஒரு வளாகம் போல அமைந்துள்ளது. இங்கே முன்னர் 16 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்ட புத்தரின் சிலை அமைக்கப்பட்டிருந்தது. இச்சிலை செம்பினால் செய்யப்பட்டு  அதன் மேல் பகுதி முழுமையாக தங்கத்தால் போர்த்தப்பட்ட வகையில் அமைக்கப்பட்ட ஒரு சிற்பமாக இது உருவாக்கப்பட்டு வழிபாட்டில் அங்கம் வகித்தது. அயோத்தையா படையினருக்கும் பர்மிய படையினருக்கும் நடைபெற்ற போரின் போது இந்தப் பகுதி அழிக்கப்பட்ட நிலையில் இங்கிருந்த இந்த புத்தர் சிலையை பர்மிய படையினர் அதன் மேல் பகுதி தங்கத்திற்காக இச்சிலையை எரித்து தங்கத்தை எடுத்துக் கொண்டனர்.  மிஞ்சிய செம்பு வடிவ சிற்பம் மட்டும் சேதமின்றி தங்கிவிட இந்தச் சிற்பமே தற்போது அமைக்கப்பட்டுள்ள வாட் போ ப்ரா மஹா சேடி சி சான்பட் ஆலயத்தினுள் ப்ரமாண்டமாக அமைக்கப்பட்டு வழிபாடும் நடந்து வருகின்றது.

தொடரும்..

சுபா

குறிப்புக்கள்
http://www.aseanworldheritage.com/2011/10/city-ayutthaya-historical-park-1.html
http://en.wikipedia.org/wiki/Ayutthaya_Historical_Park

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 8

​ஒன்றை உருவாக்குதல் என்பது எளிதன்று. அதற்கு சிந்தனைத் திறன், செயல்திறன், உருவாக்கத் திறன் ஆகிய அனைத்தும் இணங்கி இயைந்து செயல்பட வேண்டும்.

Thursday, July 3, 2014

படம் சொல்லும் தமிழகம் 2014 - 3

மண் வீடு ...சென்ற ஆண்டு ஒரு நண்பர் மாலன் அறிமுகப்படுத்திய அழகிய உணவகம். இந்த ஆண்டும் சென்று வர ஆவல் ஏற்பட்டதால் பேரா.நாகராசனும், பேரா.தெய்வசுந்தரமும் மதிய உணவுக்கு எங்கே போகலாம் என்ற உடனேயே அடையாரில் மண் வீடு என்று சொல்லி விட்டேன்.முதலில் மணல் வீடு என்று சொல்லி குழப்பியதில் ..அவர்கள் தேடினால் மணல் வீடு என்ற பெயரையே டைரக்டரியில் காணவில்லை. பின்னர் நண்பரைக் கேட்டு சரி செய்து மண் வீடு என அறிந்து தேடினால் முன் வீடு என இணையம் காட்ட.. இல்லை அது மண் வீடு என அறிந்து அங்கு சென்று மதிய உணவு சாப்பிட்டோம்.

முருங்கை இலை தக்காளி ரசம் ஸ்டார்ட்டர்..கொஞ்சம் காரமாக இருந்தாலும் ம்ம்ம் சுவை பிரமாதம்..

பிறகு பதிய உணவு.. காரக் குழம்பு .. முருங்கை இலை பருப்பு கூட்டு, வாழைப்பு வடை என எல்லாம் சுவையில் ப்ரமாதம்.

Tuesday, July 1, 2014

படம் சொல்லும் தமிழகம் 2014 - 2

வைகை ஆற்றைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கின்றேன். மானாமதுரை... திருப்பாச்சேத்தி... அப்படியே திருப்பூவனம் வரும் போது பெரிய பாலத்தை இருமுறை கடந்து வாகனத்தில் பயணித்து வரும் போது வைகை இதோ என்று நண்பர்கள் சொல்ல,  எட்டிப் பார்த்தால்.. நீரில்லா வைகை தான் கண்களுக்கு புலப்பட்டது.

ஆற்றிலே நீரோடு உன்னை  மீண்டும் காண வேண்டும் வைகையே!

சுபா