Monday, January 21, 2019

நோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 18

பார்த்தாலே குளிருமே.. 
Fetsund Lenser - நோர்வே நாட்டின் பாதுகாக்கப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. ஒரு திறந்தவெளி அருங்காட்சியகமும் கூட.. இதனைப் பற்றி விரிவாக ஒரு தனி பதிவினை விரைவில் பகிர்கிறேன் இப்போது சில புகைப்படங்கள் மட்டும்..
Glomma நதி Øyeren ஏரியில் இணையும் பகுதி Akershus வட்டாரத்தில்.
















Sunday, January 20, 2019

நோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 17

Wat That Norway - ​நோர்வே தாய் பௌத்த​ விகார் - ஓஸ்லோவிலிருந்து கோர்டமான் விமான நிலையம் செல்லும் சாலையின் அருகே ஒரு பௌத்த விகாரை ஒன்று இருக்கின்றது. பெரிய வளாகத்தில் இது உள்ளது. நேர்வேயில் குடியேறிய தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள் இந்த பௌத்த விகாரையை அமைத்திருக்கின்றனர்.
இரண்டு மாடிக் கட்டிடமாக இரண்டு தனி வளாகங்கள் உள்ளன. கோயில் ஒரு கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் இருக்கின்றது.
நோர்வே மக்களை மணந்து தாய்லாந்திலிருந்து இங்கு குடியேறியிருக்கும் தாய்லாந்து பெண்கள் முயற்சியில் இக்கோயில் உருவாகியுள்ளதாக அறிய முடிகின்றது. நான் சென்ற சமயத்தில் இரண்டு புத்த பிக்குகள் அமர்ந்து பொதுமக்களுடன் உரையாடிக் கொண்டிருந்தனர்.
சில புகைப்படங்களைக் காணலாம்.












நோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 16

நோர்வே அறிவோர் அரங்கம் நண்பர்கள் சந்திப்பு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது . தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு செயல்பாடுகளை பற்றிய விளக்கத்தை முதலில் வழங்கிய பின்னர் கலந்துரையாடலாக இலங்கை மற்றும் உலகத் தமிழர் தொடர்பான பல்வேறு விஷயங்களைப் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. உறுப்பினர்கள் வந்து கலந்து சிறப்பித்தனர்.நண்பர் வ.ஐ.செ.ஜெயபாலன் அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.






























Saturday, January 19, 2019

நோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 15

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இயங்கிவரும் நார்வே தமிழ் சங்கத்தின் பொங்கல் திருவிழா நிகழ்ச்சி நேற்று மிகச் சிறப்பாக நடந்தேறியது .அதில் எனது உரை பட்டிமன்றம் ,பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள், சினிமா பாடல்கள் என நிகழ்ச்சி மிக ஜனரஞ்சகமாக சிறப்பாக நடந்தேறியது. பெரும்பாலும் இளைய தலைமுறை இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தியது சிறப்புக்குரியது ..
நோர்வே தமிழ்ச்சங்க செயற்குழுவிற்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.


























நோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 14

நோர்வே தமிழ்ச்சங்க பொங்கல் விழா நிகழ்வு இனிதே இப்போது தொடங்குகின்றது.


https://www.facebook.com/subashini.thf/videos/2343912935852090/






நோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 13

Skimuseum - பனிச்சறுக்கல் தொடர்பான தகவல்களை வழங்கும் ஒரு அருங்காட்சியகம் இது .மக்களோடு மன்னர் குடும்பமும் சேர்ந்து பல்வேறு வகையில் பணி தொடர்பான நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட தகவல்களை இந்த அருங்காட்சியகம் ஆவணப்படுத்தியுள்ளது. நோர்வே மற்றும் ஏனைய நாடுகளில் பனியில் பயணம் செய்தல் ...அதற்கு தேவைப்படும் கருவிகள்.. விளையாட்டு தொடர்பான சாதனங்கள் வடதுருவம் தென்துருவம் ஆகியவற்றிற்கான பயணங்கள் ... என பல தகவல்களை இந்த அருங்காட்சியகம் ஆவணப்படுத்தியுள்ளது.



























நோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 12

Holmonkollbacken பனிச்சறுக்கு விளையாட்டு மைதானம் .70000 பார்வையாளர்கள் அமரக்கூடிய மைதானம் இங்கு உள்ளது . Holmenkollbacken பனிச்சறுக்கு மைதானம். 1904ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மைதானம் உலகப் புகழ்பெற்ற வகையில் அமைந்துள்ளது. உலகின் பல நாடுகளில் இருந்து பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடும் விளையாட்டாளர்கள் இங்கு போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். மேலும் சில காட்சிகள்அதன் மேல் உயரத்தில் இருந்து சில காட்சிகள்.


https://www.facebook.com/subashini.thf/videos/2343840355859348/





https://www.facebook.com/subashini.thf/videos/2343843579192359/

https://www.facebook.com/subashini.thf/videos/2343843875858996/












நோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 11

ஐக்கிய நாடுகள் சபையின் முதலாம் பொதுச் செயலாளர் நார்வேயைச் சேர்ந்தவர். இவரது பெயர் Trygve Lie. 1948 முதல் 1953 வரை இவர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளராக பதவி வகித்தார் . இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் இருந்த அரசியல் சூழல் எத்தகைய கடுமையானதாக இருந்திருக்கும் என்பதை எல்லோராலும் ஓரளவு ஊகிக்க முடியும் . இவர் 1940 முதல் 1946 வரை நோர்வேயின் வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றியிருக்கின்றார். அவரது இல்லம் என்று நார்வேயின் முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது.








நோர்வே : தமிழ்ச்சங்க பொங்கல் விழா - 10



இரண்டு மாகாணங்களுக்கு இடையேயான எல்லையை நிர்ணயம் செய்யும் ஒரு நினைவுச்சின்னம் இது. பண்டைய காலத்தில் மன்னரால் இரண்டு மாகாணங்களுக்கு இடையேயான எல்லையை குறிப்பிடுவதற்காக நிறுத்தப்பட்ட நினைவுச்சின்னம். இன்று பண்டைய சட்டம் புழக்கத்தில் இல்லை என்றாலும் பாதுகாக்கப்படும் ஒரு புராதன சின்னமாக சாலையில் இந்த நினைவுச் சின்னம் அப்படியே உள்ளது.