Thursday, February 4, 2016

பயணங்கள் தரும் அனுபவங்கள் - பதிந்து வைப்போமே!

அண்மைய எனது தமிழகப் பயனத்தின் போது அவ்வப்போது ரயில் பயணம் மேற்கொள்வது தேவையாகிப் போனது. முந்தைய எனது பயணங்களிலும் இரவுப் பயணம் செய்த அனுபவம் இருந்தாலும் இம்முறை அடிக்கடி இது நிகழ்ந்ததில் சற்று அனுபவம் அதிகமானது என்று தான் சொல்வேன்.

இரவு பயணத்தில் படுத்துச் செல்லும் 3 அடுக்கு படுக்கை கொண்ட சீட்களில் நான் சென்ற போதெல்லாம் கீழ் பகுதிக்கென்றே முன்கூட்டியே புக் செய்து வாங்கிக் கொண்டேன். 

ஒரே ஒரு பயனத்தைத் தவிர ஏனைய அனைத்து பயணத்திலும் யாராவது ஒருவர் அந்த கீழ் சீட்டை கேட்காமல் இருப்பதில்லை. நீங்கள் மேலே என் சீட்டில் படுத்துக் கொள்ளுங்கள். நான் கீழே படுத்துக் கொள்கின்றேன். உங்கள் சீட்டைவிட்டுத் தரமுடியுமா என கேட்பது ஒவ்வொரு முறையும் நடந்தது அந்த ஒருமுறையைத் தவிர. 

அப்படி சொல்லி கீழ் சீட்டைக் கேட்பவர்கள் பெரும்பாலும் பெண்கள். 
  • உடம்பு நிலை சரியில்லை. 
  • மேலே ஏறி படுக்க முடியாது. 
  • இப்போ தான் ஆப்பரேஷன் செய்தேன்.
..இவை காரணங்களாக அமைகின்றவை. 

ஒரு முறை நான் என் இருக்கையில் படுத்துவிட்டேன். எனக்கு அருகாமையில் இருந்த இரு ஆடவர்களை இதே போல ஒரு நடுத்தர வயது பெண்மணி கேட்க அதற்கு அவர் நானும் இப்போதுதான் ஆப்பரேஷன் செய்து கொண்டிருக்கின்றேன். மேலே ஏற முடியாது எனச் சொல்லி விட்டார். இன்னொருவர் எனக்கு சர்க்கரை நோய் இருக்கின்றது. அதனால் தான் கீழே படுக்கை புக் செய்து வாங்கி இருக்கின்றேன். தர முடியாது எனச் சொல்லி விட்டார். 

ஆக தமிழக ரயில் பயணத்தில் நாம் புக் செய்து கீழ் படுக்கை இருக்கை வாங்கினாலும் யாராவது ஒரு பெண்மனி தனக்கு உடம்பு சரியில்லை எனச் சொல்லிக் கொண்டு இப்படி நம் இருக்கையை மாற்றி விட முயற்சிப்பார் என்பதை நன்கு தெரிந்து கொண்டேன். 

பயணங்கள் காட்டும் அனுபவங்கள் பல. அதில் இதுவும் ஒன்று.

சுபா