Wat That Norway - நோர்வே தாய் பௌத்த விகார் - ஓஸ்லோவிலிருந்து கோர்டமான் விமான நிலையம் செல்லும் சாலையின் அருகே ஒரு பௌத்த விகாரை ஒன்று இருக்கின்றது. பெரிய வளாகத்தில் இது உள்ளது. நேர்வேயில் குடியேறிய தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள் இந்த பௌத்த விகாரையை அமைத்திருக்கின்றனர்.
இரண்டு மாடிக் கட்டிடமாக இரண்டு தனி வளாகங்கள் உள்ளன. கோயில் ஒரு கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் இருக்கின்றது.
இரண்டு மாடிக் கட்டிடமாக இரண்டு தனி வளாகங்கள் உள்ளன. கோயில் ஒரு கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் இருக்கின்றது.
நோர்வே மக்களை மணந்து தாய்லாந்திலிருந்து இங்கு குடியேறியிருக்கும் தாய்லாந்து பெண்கள் முயற்சியில் இக்கோயில் உருவாகியுள்ளதாக அறிய முடிகின்றது. நான் சென்ற சமயத்தில் இரண்டு புத்த பிக்குகள் அமர்ந்து பொதுமக்களுடன் உரையாடிக் கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment