சிங்கப்பூர் தேசிய நூலகம்.. ஆய்வாளர்களுக்கு மிக அருமையான சேகரங்களை கொண்டிருக்கும் உலகத்தரம் வாய்ந்த ஒரு நூலகம். இன்றைய மதியம் இப்பகுதியில் மலாயா சிங்கை ஆகிய நாடுகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வெளிவந்த தமிழ் சஞ்சிகைகளை தேடி அலசிக்கொண்டிருந்தேன். இங்குள்ள அலுவலர்கள் மிக நட்புடன் பழகுகின்றனர். எனக்கு உறுப்பினர் அட்டை இல்லாத போதும் எந்த சிரமமும் தராமல் எனக்கு தேவையான மைக்ரோ பிலிம் சஞ்சிகைகளை வழங்கினர். துரை சகோதர் இடையில் சிறிது நேரம் வந்து இருந்து கூடுதல் உதவியும் செய்தார். 1910, 29 , 39, 51 ஆகிய காலகட்டங்களில் வெளிவந்த சிங்கையின் சஞ்சிகைகள் சிலவற்றை மின்னாக்கம் செய்ய முடிந்தது.
சிங்கை தேசிய நூலகத்தின் வளாகத்தின் சில காட்சிகள்..
1 comment:
என்னுடைய மென்பொருள் மற்றும் இயங்குதள அறிவுக்கு இங்கு தான் உரம் போடப்பட்டன.
Post a Comment