Saturday, April 27, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 11

ஆஸ்திரியாவை நினைக்க வைக்கும் மனிதர்கள் - 1

ஐரோப்பாவில் பலருக்கும் பரிட்சயமில்லாத நாடுகளில் ஆஸ்திரியாவும் ஒன்று என்று தான் சொல்வேன். சுற்றுலா பயணம் என்றாலே பலருக்கும் சுவிஸர்லாந்து தான் ஞாபகத்திற்கு வரும்.  அல்லது ப்ரான்ஸின் தலைநகரமான பாரீஸ் ஞாபகத்திற்கு வரும். ஆனால் இயற்கை அழகின் மொத்த உருவமாக இருக்கும் ஜெர்மனியின் தெற்குப் பகுதியும் ஆஸ்திரியாவும் பலருக்கு அறிமுகமானதில்லை. ஆனாலும் ஆஸ்திரியாவில் பிறந்தோ அல்லது இங்கே வாழ்ந்து புகழ்பெற்ற சிலரை நிச்சயமாக பலர் அறிந்திருக்கலாம். அப்படிப் பட்ட சிலரைப் பற்றிய தகவல்களை இந்தப் பதிவில் பகிர்ந்து கொள்ளலாமே என நினைக்கின்றேன்.

இசைப்ரியர்களுக்கு பரிட்சயமான பெயர்களில் யோகன் ஸ்ட்ரவுஸ்  (Johann Strauß), மோஸார்ட் (Wolfganf Amadeus Mozart), ப்ரான்ஸ் ஷூபெர்ட், அண்டொன் ஃபோன் வேபர்ன் போன்ற இசை மேதைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

மோஸார்ட் (1756 - 1791) 

Inline image 6

ஆஸ்திரியாவைப் பிரபலப்படுத்தும் சாக்லெட்கள், நினைவுச் சின்னங்களில் மோஸார்ட்டின் படங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த இசை மேதை உலகப்புகழ்பெற்று விளங்கினார் என்பதை அறிந்த பலர் இவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர் என்ற தகவலை அறியாதிருப்பர். ஆஸ்திரியாவின் சால்ஸ்புர்க் நகரத்தில் பிறந்தவர் இவர். ஒரு வயலின் ஆசிரியரும் இசையமைப்பாளருமாகிய தனது தந்தையைப் போலவே இசையில் தீவிர ஆர்வம் கொண்டவர். இளமை காலத்திலேயே இவரது இசைப் புலமை வியக்கும் தன்மை பெற்றிருந்தது. 50க்கும் மேற்பட்ட சிம்பொனிக்களையும்  24 ஓப்பரா இசைப்படைப்புக்களையும் உருவாக்கியவர். இவரது Don Giovanni  ஒப்பரா இன்றும் ஐரோப்பா மட்டுமின்றி உலகப்புகழ்பெற்ற ஓப்பரா படைப்புக்களில் ஒன்றாகத் திகழ்வது. மோஸார்ட்டின் இன்னொரு புகழ்மிக்க ஓப்பரா The Magic Flute. யூடியூபில் இந்த ஓப்பரா முழுமையாக ஒன்றை இங்கே கண்டு களிக்கலாம். http://www.youtube.com/watch?v=b11ElH3qm2M

Inline image 5
யோகன் ஸ்ட்ரவுஸ் (1825 - 1899) 
யோகன் ஸ்ட்ரவுஸ் பொதுமக்கள் விரும்பி மகிழும் நாட்டிய மெல்லிசை (dance music and light music) க்குப் புகழ்பெற்று விளங்கியவர். 
Inline image 7

500க்கும் மேற்பட்ட படைப்புக்களை உருவாக்கியவர். ஆஸ்திரியாவின் தலைநகரமான வியன்னாவில் பிறந்து வளர்ந்தவர் இவர். தனது தந்தையின் விருப்பத்திற்கும் மாறாக இசையில் நாட்டத்தை வளர்த்து வந்தவர் தன்னை இசையமைப்பாளராக வளர்த்துக் கொண்டு மிகத் திறமையாக பல்வேறு தரப்பினரின் தேவைக்கேற்ற வகையில் தனது இசையைப் பிரபலப்படுத்தினார். உள்ளூரில் மட்டுமல்லாது ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ச்பெர்க், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் பயணம் செய்து பெரிய இசை நிகழ்ச்சிகளை நடத்தி புகழ்பெற்றார். மெல்லிசை மட்டுமன்றி ஓப்பரா படைப்புக்களிலும் தனது நாட்டத்தை செலுத்தியவர் இவர். இவரது "A Night in Venice",  "The Gypsy Baron" ஆகியவை இன்றும் பலரால் பேசப்பட்டும் பயண்படுத்தப்படும் ஓப்பரா படைப்புக்கள்.


இசைத்துறைக்குச் சிறப்பு சேர்த்தோரைப் போல பல ஓவியக் கலைஞர்களும் ஆஸ்திரியாவில் பிறந்து உலகப் புகழ் பெற்றவர்களாகத் திகழ்கின்றனர்.  உதாரணமாக குஸ்தாவ் க்லிம்ட், அங்கெலிக்கா காவ்மான்  ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

Inline image 4
Klimt, Gustav (1862 - 1918)

குஸ்தாவ் க்லிம்டின் ஓவியங்களைப் பரவலாக ஐரோப்பாவின் பல நிதி நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும் நான் பார்த்திருக்கின்றேன். இவர் ஆஸ்திரியாவின் வியன்ன்னா அருகில் உள்ள பாவ்ம்கார்ட்டன் பகுதியில் பிறந்தவர். 


Inline image 3

இவரது படைப்புக்கள் வர்ணக் கலவையாக பரிமளிக்கும். மொஸைக் வடிவில் புள்ளி புள்ளியாக வர்ணங்கள் உருவங்களை உருவாக்கி நிற்கும். பாத்திரப்படைப்புக்கள் காம உணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மையினதாகவும் அமைந்திருக்கும். இணையத்தில் தேடினால் இங்கே அவரது படைப்புக்களாக உருவாகிய பல படங்களைக் காணலாம்.

No comments:

Post a Comment