Wednesday, May 1, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 12


ஆஸ்திரியாவை நினைக்க வைக்கும் மனிதர்கள் - 2

ஆஸ்திரியாவின் புகழை உலகுக்குச் சொல்லிக் கொண்டிருப்பவர்களில் இசைக் கலைஞர்களும் ஓவியர்களும் மட்டும்தானா என்று சிலர் கேட்கலாம். இன்னும் பலரும் இருக்கின்றார்கள். அவர்களை மறந்து விட முடியுமா? அவர்களில் ஒரு சிலரைப் பார்ப்போமே!

சிக்மண்ட் ப்ராய்ட் (1856 - 1939) 


உளவியல் துறைக்கு இவரது பங்களிப்பு விலைமதிக்க முடியாதது என்று கருதப்படுவது. மே மாதம் 6ம் திகதி 1856ல் ஆஸிதிரியாவின் தெற்கு மொரோவியாவில் பிறந்தவர். வியன்னா பல்கலைகழகத்தில் நியூரோலொஜி துறையில் பட்டம் பெறுவதற்கும் முன்னரே இவர் மருத்துவமும் படித்தவர். உளவியல் பிரச்சனைகளின் மூல காரணங்களை ஆராய்வதாக அமைந்தவை  இவரது ஆய்வுகள். உள்ளத்தின் அடித்தளத்திலே புதைந்து கிடைக்கும் காம உணர்வுகள் எவ்விதம் பல்வேறு வகையில் உளவியல் பிரச்சனைகளுக்கு மூலகாரணமாகின்றன என்ற வகையில் இவர் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். இவரது மிகப் பிரசித்தி பெற்ற ஆய்வு நூல் The Interpretation of Dreams. இது 1900 ஆண்டு வெளிவந்த்தது. அவர் இறுதிக் காலம் வரை வியன்னாவில் இருக்கவில்லை.  தான் இறப்பதற்கு ஓராண்டிற்கு முன்னர் இவர் லண்டனுக்கு இடம்பெயர்ந்தார். தற்சமயம் ஆஸ்திரியாவின் வியன்னாவில் பெர்க்காஸா 19ல் அவர் முன்னர் இருந்த ஆய்வகத்தை மியூசியமாகவும் வைத்திருக்கின்றரகள். ஆக வியன்னா செல்பவர்கள் சென்று பார்த்து வர வேண்டிய முக்கிய இடங்களில் இதுவும் ஒன்று என்று குறித்துக் கொள்ள மறக்க வேண்டாம்.

சிக்மண்ட் ப்ராய்ட் பற்றிய ஒரு வீடியோ பதிவுடன் அவரது வாழ்க்கை குறிப்பையும் http://www.biography.com/people/sigmund-freud-9302400 என்ற பக்கத்தில் காணலாம். இதில் உள்ள ஒரு வீடியோ பதிவில் இவர் காதல் மருத்துவர் என்று சிறப்புடன் அழைக்கப்பட்டாலும் தான் பெண்களை என்றுமே முழுதாகப் புரிந்து கொள்ளவில்லை என்று சொல்வதாகக் குறிப்பிடுகின்றனர். :-)


அடோல்ப் ஹிட்லர் (1989 - 1945)ஏப்ரல் மாதம் இவர் வாழ்வில் முக்கியமான ஒரு மாதமாகத்தான் இருந்திருக்கின்றது. ஏப்ரல் 20ல் பிறந்து ஏப்ரல் 30ல் இறந்தவர். ஆஸ்திரியாவில் பிறந்தவர் ஆனாலும் ஜெர்ம்னியோடு தன் வாழவை ஐக்கியப்படுத்திக் கொண்டவர். ஆரிய சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கி தானே அதன் தளபதியாக இருக்க வேண்டும் என மிகச் சூசகமாக தன் திட்டங்களை வகுத்து செயல்படுத்தியவர். யூத மக்களை அழிப்பதே தனது ஆரிய தேசத்தைத் தூய்மை படுத்த ஒரு வழி என்று தனக்கு ஒரு சித்தாந்ததை வளர்த்து அதனையே ஜெர்மானிய மக்களின் சிந்தனையில் திணித்து மக்களை இயக்கியவர். ஹிட்லர் பெயரும் மீசை ஸடைலும் அறியாதவர்கள் உலகில் எந்த நாட்டிலுமே இருக்க முடியாது. ஜெர்மனியின் சான்ஸலராக 1933 முதல் 1945 வரை இருந்தவர்.

ஹிட்லர் பிறந்து வளர்ந்தது ஹங்கேரிக்கு அருகில் உள்ள ஆஸ்திரியாவின் ப்ரானாவ் பகுதியில். தனது 3 வயதில் இவரது குடும்பம் ஆஸ்த்ரியாவிலிருந்து ஜெர்மனிக்குக் குடியேறினர். முதலாம் உலகப் போருக்குப் பின்னர் படையில் சேர்ந்து பின்னர் படிப்படியாக நாஸி கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் ஜெர்மனியின் சான்ஸலராகியதும் தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி சர்வாதிகாரியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். ஜெர்ம்னியில் மட்டுமல்லாமல், போலந்தைக் கைப்பற்றி பின்னர் ஸ்கேண்டினேயாவுக்கு போர்தொடுக்க ஆரம்பித்ததுடன் ப்ரான்ஸ், பெல்ஜியம், லுக்ஸம்பெர்க், நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்குத் தனது படையை அனுப்பினார். அதோடு நில்லாமல் ஸ்டாலினுடன் செய்து கொண்ட ஒப்பந்ததையும் மீறி ரஷ்யாவிற்கு 3 மில்லியன் ஆட்கள் கொண்ட படையை அனுப்பி வைத்தார். 2ம் உலகப்போருக்குக் காரணகர்த்தாவாக தன்னை ஆக்கிக் கொண்டார்.

1945ல் இவரது படைகள் தோல்வி கண்டு வருவதையும் தனது சித்தாந்தம் வெற்றி பெறாது என்பதையும் உணர்ந்து கொண்டார். ஏப்ரல் 29ம் தேதி தனது காதலியான ஈவா ப்ரவுனை பெர்லினில் ஒரு பங்கரில் திருமணம் செந்து கொண்டார். மறு நாள் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

ஈவா ப்ரவுன் தற்கொலை செய்து இறக்கவில்லை என்றும் உயிருடன் பின்னர் பல ஆண்டுகள் இருந்ததாகவும் பல தகவல்கள் உலாவினாலும் அவர் ஹிட்லருடன் ஒரே நாளில் இறந்து விட்டதாகத்தான் எல்லோரும் நம்புகின்றோம். ஹிட்லர் செய்து வைத்த மிகப் பெரிய சேதம் ஜெர்மனியில் இன்றும்தொடர்ந்து பேசப்பட்டும் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டும் வருகின்றன. பல திரைப்படங்கள் அக்கால நிலையை விளக்குவனவாக வெளிவந்திருக்கின்றன. ஆஸ்திரியாவில் பிறந்தாலும் ஜெர்மனியில் தனது வாழ்க்கையை ஐக்கியப்படுத்திக் கொண்ட சர்வாதிகாரிதான் ஹிட்லர்.

ஹிட்லரின் இளமைக் கால படங்கள், பல சரித்திர விவரணங்கள் அடங்கிய மிக அருமையான ஒரு வீடியோ பதிவையும் மேலும் பல வரிசைக்கிரமாமன விளக்கங்களையும் இங்கே காணலாம்.  http://www.biography.com/people/adolf-hitler-9340144?page=4


அர்னோல்ட் ஷ்வார்ட்ஸ்னெகர் (1947 ..)


அமெரிக்காவின் ஹாலிவூட் பிரபலமாகிவிட்டதோடு கலிபோர்ணியாவின் கவர்னராகவும் உயர்ந்த இவரும் ஆஸ்திரிய பூர்வீகத்தைக் கொண்டவர்தான். ஆக்‌ஷன் படங்கள் என்றால் நினைவில் வருபவர். The Terminator  படத்தைப் பார்த்தவர்கள் நம்மில் பலர் நிச்சயமாக இருப்போம். உயரம், அவரது தீவிர பயிற்சி செய்த உறுதியான உடல் ஆகியவை ஆக்‌ஷன் படங்களுக்கும்  சைன்ஸ் பிக்‌ஷன் படங்களுக்கும் இவரை  தகுதியாக்கின.

இவரைப் பற்றிய பல தகவல்கள் http://www.biography.com/people/arnold-schwarzenegger-9476355?page=1 வலைப்பக்கத்தில் காணலாம்.

No comments:

Post a Comment