Sunday, April 16, 2017

சுலோவாக்கியா - சுலோவாக்கியா பயணம் 12

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சுலோவாக்கியா பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நாடு. 2004ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த பின்னர் மேற்கு ஐரோப்பிய நாடுகளுடனான பொருளாதார அனுகூலங்களை அதிகமாக அநுபவித்து வரும் நாடு இது எனச் சொல்லலாம்.
பெரிய ஐடி நிறுவனங்களின் கால் செண்டர்களும் சேவை நிலையங்களும் இங்கே காளான்கள் போல முளைத்தன. நான் பணிபுரியும் ஹ்யூலட் பெக்கார்ட் நிறுவனத்தின் ஐரோப்பிய சேவை மையமும் இங்கு தொடங்கப்பட்டது. அந்த பணிக்காக 2005ம் ஆண்டு ஒரு முறை ப்ராட்டிஸ்லாவா வந்திருந்தேன். பின்னர் 2009ம் ஆண்டு 3 நாட்கள் ட்ரெய்னிங் அளிப்பதற்காக இங்குள்ள அலுவலகம் வந்திருந்தேன். அந்த நினைவுகள் மனதில் இருக்கின்றன.
இன்று சுலோவாக்கியா ஜெர்மனி, பிரான்சு போன்ற பணக்கார ஐரோப்பிய நாடுகளின் கார் உற்பத்தி தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும் ஆலைகளைக் கொண்டிருக்கின்றது. வோக்ஸ்வாகன், சிட்ரஒன் போன்ற கார் உற்பத்தி தொழிற்சாலைகள் இங்கிருந்தே இயங்குகின்றன.
யூரோ விற்க்கு மாறியதனால் மேலும் பல அனுகூலங்களை சுலோவாக்கியா அனுபவிக்கின்றது. ஆனால் இன்னமும் குரோன் புழக்கத்தில் தான் செக் நாடு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஹங்கேரியும் யூரோவிற்கு இன்னமும் மாறவில்லை.
முன்னர் ஹங்கேரி சுலோவாக்கியாவை 10 நூற்றாண்டுகள் ஆட்சி செய்து அதன் கீழ் வைத்திருந்தது. பேரரசாக ஹங்கேரிய அரசு திகழ்ந்தது. ஆனால் இன்றோ ஐரோப்பாவின் ஏழை நாடுகள் வரிசையில் ஹங்கேரியும் இருக்கின்றது.
வாழ்க்கை உயர்வதும் தாழ்வதும் மனிதர்களுக்கு மட்டுமானதல்ல, நாடுகளுக்கும் பொருந்தும்.!

ப்ராட்டிஸ்லாவா பேருந்து நிலையம் - சுலோவாக்கியா பயணம் 11

ப்ராட்டிஸ்லாவா பேருந்து நிலையம்.
இங்கிருந்து பேருந்துகள் ஐரோப்பாவில் முக்கிய நகரங்களுக்குச் செல்கின்றன. புடாபெஷ்ட், வார்சாவ், க்ராக்காவ், பெர்லின், சோபியா, வியன்னா என பட்டியல் நீள்கின்றது.
என் பயணம் மீண்டும் புடாபெஷ்ட் நோக்கி...






Saturday, April 15, 2017

குழந்தையின் கொஞ்சல் - சுலோவாக்கியா பயணம் 10



குழந்தையின் கொஞ்சல் என்பது பெரும்பாலும் தாயுடன் இணைந்த வகையில் காட்டப்படும். தந்தையும் குழந்தையும் உள்ள சிற்பங்கள் குறைவே. இது ப்ராட்டிஸ்லாவா பழைய சிட்டிஹால் அருங்காட்சியகத்தில் பார்த்த சிற்பம்.
தந்தை குழந்தை..இருவர் முகத்திலும் அன்பு அழகாகத் தெரியும் வகையில் வடிக்கப்பட்டுள்ளது. 16ம் நூ. சிற்பம் இது.


Cumil - சுலோவாக்கியா பயணம் 9

இந்த சிலையின் பெயர் Cumil.
இதன் தலைத்தொப்பியின் மேல் பகுதியைத் தொட்டு மனதில் என்ன நினைத்துக் கொண்டாலும் அது நடக்கும் என்பது சுலோவாக்கிய மக்களின் நம்பிக்கைகளில் ஒன்று.
எல்லோரும் தொட்டு தொட்டு அந்தப்பகுதி மட்டும் பளிச்சுன்னு இருக்கின்றது.
 என்ன செய்வது?
எல்லோருக்கும் மனதில் நினைப்பது நடந்து விட வேண்டும் என்ற ஆசையிலேயே தானே வாழ்க்கை ஓடுகின்றது...!




witches (சூனியக்காரிகள்) - - சுலோவாக்கியா பயணம் 8

மூலிகை மருத்துவம், ஆராய்ச்சி என ஈடுபட்ட அறிவாளிகளான பெண்களை கடந்த நூற்றாண்டுகளில் ஐரோப்பா witches (சூனியக்காரிகள் ) என அழைத்து அவர்களது செயலை நீதிமன்றம் கொண்டு சென்று அங்கே அவர்களுக்குக் கொடூரமான தண்டனைகளை வழங்கியது. இதனை நிகழ்த்திய ஜெர்மனி, ஆஸ்திரியா, பிரான்சு, செக், பெல்ஜியம், போன்ற நாடுகளின் வரிசையில் சுலோவாக்கியாவும் ஒன்று.
ஏராளமான அறிவு தாகம் கொண்ட வெண்கள் கொடூரமான கொலை கருவிகளைக் கொண்டு கொல்லப்பட்டனர். இன்று 'கொடுமை பயங்கரம் அருங்காட்சியகம்' சென்ற போது ஏறக்குறைய 50 இத்தகைய கருவிகளை நேரில் பார்த்தேன்.
இன்று இத்தகைய கொடுமைகளை ஆணுலகம் நிகழ்த்தவில்லையென்றாலும் கூட பொதுவாக பெண்களுக்கெதிரான ஆணாதிக்க மனப்பான்மை என்பது உலகில் எல்லா இன மக்கள் சிந்தனையிலும் ஏதாவது ஒரு வகையில் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது.


சாலையோர மனிதர்கள் - - சுலோவாக்கியா பயணம் 7


இங்கும் சாலையோர மனிதர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்றனர். வெகு குறைவுதான்.. தனியாக இருக்கின்றனர். குடும்பங்கள் இல்லை.


Bratislava Kilometer Zero - - சுலோவாக்கியா பயணம் 7


Bratislava Kilometer Zero..
நாடுகளின் சாலை தூரத்தைக் கணக்கிடும் மையப்புள்ளி பல நாடுகளில் இருக்கின்றன. சுலோவாக்கியாவின் சாலை கணக்கு மையப்புள்ளி Michael's Gate கீழே அமைந்துள்ளது. இதில் இருந்து ஏனைய வேறு நகரங்கள் எவ்வளவு தூரம் உள்ளன என்பது கணக்கிடப்படுகின்றது.