Thursday, November 5, 2009

மலாகா(ஸ்பெயின்) சுற்றுலா - செப்ட்-அக்டோபர் 2009 - 4

மிஹாஸ்புவன்ஜிரோலாவிலிருந்து அடுத்து எங்கள் பயணம் மிஹாஸ் நோக்கியது. மிஹாஸ் நகரத்தை புவன்ஜிரோலாவிலிருந்து 20 நிமிடத்தில் சென்றடைந்தோம். சற்று மலைப்பாங்கான இடம். நகரின் உள்ளே நுழையும் போது வெள்ளை வர்ணத்திலான குடியிருப்புப் பகுதிகளைத் தூரத்திலிருந்தே பார்க்கமுடிந்தது.அண்டாலூசியாவிற்கு அதிலும் மலாகாவிற்கு வரும் அனைவரும் இந்த சிறிய நகரத்தைப் பயன பட்டியலில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளவேண்டும். வெள்ளை நிரத்தில் வர்ணம் பூசப்பட்டு பூக்களும் செடி கொடிகளும் அலங்கரிக்க காட்சியளிக்கும் இந்த குடியிருப்புப் பகுதிகளே மிகப் பெரிய ஒரு ஈர்ப்பு. இந்த நகரில் சுற்றுலா பயணிகளைக் கவரும் பல அம்சங்கள் உள்ளன. உதாரணமாக ஆங்காங்கே காணப்படும் அழகுப் பொருட்கள் பீங்கான் (porcelain) சமையல் மற்றும் அலங்கார கைவினைப் பொருட்கள் போன்றவை இங்கு வருகையளிக்கும் சுற்றுலா பயணிகள் திரும்பிச் செல்லும் போது எடுத்துச் செல்ல நல்ல ஞாபகச் சின்னம்.குதிரை வண்டிகளில் மட்டுமல்ல சவாரி, கழுதை டாக்ஸிகளிலும் இங்கு உண்டு. ஒவ்வொரு கழுதைக்கும் ஒரு அட்டை தலையில் கட்டப்பட்டு அதில் அந்தக் கழுதையின் பதிவு செய்யப்பட்ட டாக்சி எண் உள்ளது. 15 நிமிட சாவரியில் மிஹாஸின் வெள்ளை கிராமத்து சாலைகளைப் பார்த்தவாரே பவனி வரலாம்.Bullring - காளைவளையம். ஸ்பெயின் காளை பந்தயத்திற்கு புகழ்பெற்ற நகரம். அண்டலூசியாவின் கலைகளில் உலகப் பிரசித்தி பெற்றது காளை அடக்கும் விளையாட்டு. இங்கு காளையை அடக்குவது மட்டுமல்ல; மாறாக அதனை அடக்க முயல்பவர் அதனை ஈட்டியினால் தாக்கி கொல்வதே வழக்கம். இங்கு காளை அடக்கும் காட்சிகள் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறுகின்றன
.போட்டியில் பங்கு கொள்ளும் காளைகள் அவற்றிற்கென குறிப்பிடப்பட்டுள்ள தனி அறைகளில் காத்திருக்கின்றன. போட்டிகளைக் காண ஒவ்வொரு வாரமும் மக்கள் இங்கு கூடுகின்றனர். போட்டி நடைபெறாத சம்யம் இந்த வளையத்தைச் சுற்றிப் பார்க்க 3 யூரோ வசூலிக்கப்படுகின்றது.மலாகா வைன்(wine) உற்பத்திக்கு மிக பிரசித்தி பெற்ற நகரம். மாலையில் உணவருந்துகையில் சிவப்பு வைன் (dry / sweet) வகை வைன் உணவோடு அருந்துவது இங்குமட்டுமல்ல ஐரோப்பா முழுமைக்கும் உயரிய பண்பாடாகவும் கருதப்படுவது. பொதுவாகவே இரவு உணவின் போது வைன் இருப்பது ஐரோப்பிய கலாச்சாரம். இதில் ஸ்பெயினின் அண்டலூசியா விதிவிலக்கல்ல.கத்தோலிக்க தேவாலயங்கள் - மிஹாஸ் சிறு நகரிலேயே மூன்று கத்தோலிக்க தேவாலயங்களைப் பார்க்க முடிந்தது. இதற்கு மேலும் கூட சில இருக்கலாம். மூன்றிலும் ஒரு ஒற்றுமையைப் பார்த்தேன். ஏசு கிறிஸ்துவின் சிலைகள் ஆங்காங்கே இருந்தாலும் மேரி அன்னையின் சிலைக்கு பிரதான இடம் கொடுக்கப்பட்டிருப்பது இங்கு ஒரு புதுமை. ஜெர்மனியில் ஏறக்குறைய எல்லா தேவாலயங்களிலும் பிரதான இடத்தில் ஏசு சிலை தான் உள்ளன. அண்டலூசியாவில் ஒரு மாற்றம். அன்னா மரியா (Anna Maria) இங்கு மூலக் கருவறையில் வீற்றிருக்கிறார். இது குறிப்பிடத்தக்க ஒரு வித்தியாசம் என்றே எண்ணத் தோன்றுகின்றது.No comments:

Post a Comment