Sunday, October 12, 2003

இத்தாலி - [Oct 3-5] - 7

வேட்டிக்கனிலிருந்து கொலோசியம் வருவதற்கு 2 பஸ்கள் எடுத்து வரவேண்டும். அதற்கு பதிலாக சீக்கிரமாக செல்ல நினைத்ததால், ஒரு Taxi எடுத்துக் கொண்டேன். 5 நிமிடங்களுக்குள் Colosseum இருக்கும் இடத்தை அடைந்தேன். Colosseum ரோமானிய நாகரிகத்தின் மிகப்பெரிய பழமை வாய்ந்த ஒரு அற்புதம் என்றே சொல்ல வேண்டும்.
உலகின் பல மூலைகளிலிருந்தும் வந்திருந்த சுற்றுப் பயணிகள் ஏராளம். பல வகையான முகங்கள்; வர்ணங்கள்; ஆடை அலங்காரம் என சாதாரண நாளிலேயே இந்த இடம் திருவிழா கோலம் பூண்டு இருந்தது. வாசலிலேயே பழங்காலத்து ரோமானிய உடைகளில் Gல்adiators நின்று கொண்டு வருவோர் போவோரிடம் பேசிக் கொண்டும் வித்தை காட்டிக் கொண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருந்தனர்.

கொலோசியத்தில் உள்ள மிகப் பெரிய Amphitheatre, Vespasian என்பவனால் 72 A.D- யில் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. அது முடிவுறாத நிலையில் அவன் இறந்து விடவும், அவனது மகனான Titus இந்த வேலையைத் தொடர்ந்து முடித்தான். ஹீப்ரூ சிறைக் கைதிகள் இந்தக்கட்டிடத்தைக் கட்ட பயன்படுத்தப்பட்டனர். இதன் உண்மையான பெயர் Flavian Amphitheatre என்றாலும் பரவலாக Colosseum என்றுதான் அழைக்கப்படுகின்றது. இது கட்டிமுடிக்கப்பட்டதும் அதற்காக சிறப்பாக ஏற்படுத்தப்பட்டிருந்த விழாவில் ஏறக்குறைய 9000 காட்டு விலங்குகள் இங்கெ பலி கொடுக்கப்பட்டதாம். அதற்குப் பின்னர்தான், உயிரை பலிவாங்கும் ஒரு வகை வீர விளையாட்டான Professional Gladiators எனப்படுபவர்கள் கலந்து கொள்ளும் சண்டை விளையாட்டுக்கள் இங்கே நிகழ்த்தப்பட்டன.
உண்மையில் இதனை விரும்பாத பேரரசர் Constantine இந்த வகை விளையாட்டை நிறுத்துவதற்காக பல முறை முயன்றும் ரோமானிய பழமை வாதிகளால் இது மறுக்கப்பட்டு தொடர்ந்து நிகழ்ந்து வந்தது என சான்றுகள் கூறுகின்றன.
கொலோசியம் உள்ளே சென்று சுற்றிப்பார்ப்பதர்க்கு 10 EURO கட்டணம் வசூலிக்கின்றனர். ஒவ்வொரு மூலையும் ஒவ்வொரு கதை சொல்லும் வகையில் இந்த இடம் அமைந்திருக்கின்றது. [ நமது தமிழ் சினிமா பாட்டுக்களுக்கு இந்த locations இன்னும் படமாக்கப் பயன்படவில்லை என நினைக்கின்றேன். ஒரு வேளை அவர்கள் முயன்று பார்த்தும் அனுமதி கிடைக்காமல் இருக்கலாம்.(??) ] இதனை முழுமையாகப் பார்த்து விட்டு வாசலிலேயே இருந்த கடைகளில் தேடிப்பார்த்து அழகிய சில நினைவுச் சின்னங்களையும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன். கொலோசியம் அருகிலேயே அகழ்வாய்வுகளின் வழி கண்டெடுக்கப்பட்ட மேலும் பல கட்டிடங்களும் நினைவுச் சின்னங்களும் இருந்தன. அவற்றையும் பார்த்து விட்டு கொலோசியத்தின் எதிர்ப்புறத்தில் இருந்த ஒரு உணவுக் கடையில் உணவுக்காக அமர்ந்தேன்.மிக அருமையாக அலங்கரிக்கப்பட்ட 4 வகை காய்களைக் கொண்ட பீஸா ( 4 seasons Pizza) ஒன்றை ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எனக்கு அடுத்த மேசையில் இரண்டு ரோமானிய Gladiators ( வேஷம் அணிந்திருந்தவர்கள்) உணவுக்காக வந்து அமர்ந்தனர். அவர்களால் போட்டிருந்த எல்லா ஆடைகளோடும் நாற்காலியில் அமர்ந்து சாப்பிட முடியவில்லை. உடனே ஒவ்வொன்றாக கழற்றி விட்டு உள்ளே அணிந்திருந்த T-Shirt -டுடன் சாப்பிட ஆயத்தமானார்கள். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்களுக்கு இதுவும் ஒரு வேடிக்கை காட்சியாகவே அமைந்துவிட்டது. சாப்பிட்டு முடித்த பின்னர் அருகாமையிலேயே இருந்த Victor Emmanuel கட்டிடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.. தொடரும்...

No comments:

Post a Comment