Saturday, April 15, 2017

ப்ராட்டிஸ்லாவா - - சுலோவாக்கியா பயணம் 4



இன்று ஒரு நாள் ப்ராட்டிஸ்லாவாவில் இருந்ததில் இந்த நாட்டினைப்பற்றியும் மக்கள் பற்றியும் நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. ப்ராட்டிஸ்லாவா சுலோவாக்கியாவின் தலைநகர்.
அடிப்படையில் சுலோவாகிய இன மக்களின் பூர்வீகமானது இன்றைய போலந்து, செக் போன்ற பகுதியிலிருந்து தொடங்குகின்றது.
6ம் நூ.வாக்கில் மோரோவிய பேரரசில் ஒரு பகுதியாக சுலோவாக்கியா இருந்தது. 907ல் ஜெர்மானியப் பேரரசு போர் தொடங்கிய போது ஹங்கேரியப் பேரரசின் ஆளுமைக்குள் சுலோவாக்கியா வந்தது 10 நூற்றாண்டுகள் இதுதொடர்ந்தது.
1918ல் 1ம் உலகப் போரில் ஹாப்ட்புர்க் பேரரசு வீழ்ச்சியடைந்ததால் அதிலிருந்து பிரிந்து செக் நாட்டுடன் இணைந்தது.
செக்கோஸ்லாவாக்கியா பிறந்தது.
2ம் உலகப்போரின் போது ஜெர்மனி தன் ஆளுமைக்குள் செக்கோஸ்லாவாக்கியாவை கொண்டு வந்தது.
போரின் முடிவில் ரசியா 1945ல் ஜெர்மனியிலிருந்து விடுபட உதவியது. 1948 கம்யூனிச கட்சி இந்த செக்கொஸ்லொவாக்கியாவின் முக்கிய சக்தியாக இருந்தது.
42 ஆண்டுகால கம்யூனிச ஆட்சி 1968ல் முடிவுக்கு வந்தது.
படிப்படியான அரசியல் நிகழ்வுகள் ..
1993ஜனவரியில் செக் நாடும் சுலோவாக்கியாவும் இரு தனி நாடுகளாக சண்டையின்றி பிரிந்தன.
இரண்டும் இரு வேறு மொழி பேசும் இன மக்கள் உள்ள நாடு. இரண்டும் தனித்துவத்துடன் இன்று தனி நாடுகளாக உள்ளன.
சுலோவாக்கியாவின் மக்கள் தொகை 5.4 லட்சம் தான். கத்தோலிக்க கிறிஸ்துவ மதம் பெறும்பாண்மை அதிகாரப்பூர்வ மதமாக உள்ளது. ரோமா ஜிப்சி மக்கள் 2% இங்குள்ளனர். சுலோவாக்கிய மொழியோடு மிக அதிகமாக ஜெர்மானிய டோய்ச், செக், ஹங்கேரி மொழியும் ஆங்கிலமும் மக்கள் புழக்கத்தில் உள்ள மொழிகள்.

No comments:

Post a Comment