ரொமேனியாவின் constanta நகரை நோக்கி பயணிக்கிறேன். கருங்கடல் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு நகரம் இது. துருக்கி உக்ரைன் ,ரஷ்யா, பல்கேரியா , ரொமேனியா ஆகிய ஐந்து நாடுகளை எல்லைகளாக கொண்டது கருங்கடல்.
கருங்கடல் என்றால் கருப்பு நிறத்தில் இருக்கும் என்று பொருளல்ல. பண்டைய காலத்தில் கிரேக்கர்கள் இப்பகுதியில் பயணிப்பது மிகுந்த சிரமமான ஒரு பகுதியாகவும் கடல் பயணம் செய்பவர்களுக்கு மிகுந்த சோதனைகளை ஏற்படுத்திய பகுதி என்பதாலும் இதனை கருங்கடல் என பெயரிட்டு அழைத்தனர். எப்படி நமக்கு தக்க வரலாற்றுச் சான்றுகள் தெரியாததினால் களப்பிரர் காலத்தை இருண்ட காலம் என பெயரிட்டு அழைத்து வருகின்றோமோ அதேபோல கருங்கடலின் காரணப் பெயரும் நிலைத்து போயிருக்கிறது. ரொமேனியாவின் constanta நகரம் கருங்கடலை ஒட்டிய ஒரு நகரம். சுற்றுலா தளம் மற்றும் வணிக இடம். பண்டைய ரோமானிய பேரரசு கடல் வழியாக வந்து இறங்கி ரொமேனியாவில் கைப்பற்றி காலூன்றிய பகுதி.
No comments:
Post a Comment