Sunday, April 21, 2019

ரொமேனியா பயணம் - 19-புக்காரஸ்ட் கிராம அருங்காட்சியகம்

புக்காரஸ்ட் கிராம அருங்காட்சியகம்.
ரொமேனிய மக்கள் மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். இன்றும் அதன் தொடர்ச்சியை தான் காண்கின்றோம். மிகப் பெரிய தொழில் புரட்சியோ தொழில் வளர்ச்சியோ இங்கு பெரிதாக காணப்படவில்லை. விவசாயம் , விவசாயம் சார்ந்த தொழில்கள்.. மீன் பிடித்தல் என்பது போன்ற வகையிலேயே இந்த நாட்டின் மிகப் பரவலான மக்களின் வாழ்க்கை அமைந்திருக்கின்றது.
இன்றைய காலகட்டத்தில் உள்நாட்டில் வேலை போதாமையால் பல இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறி மேற்கு ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி இங்கிலாந்து அயர்லாந்து ஆகிய நாடுகளுக்குக் குடிபெயர்ந்தார்கள். பலர் திருட்டுத்தனமாகவும் தகுந்த ஆவணங்கள் இன்றியும் பணிகளுக்காக மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு வந்து விடுகின்றார்கள். சட்டவிரோதமாக பணிபுரிய வந்து பின்னர் திருப்பி அனுப்பப்படும் பலர் இருக்கின்றார்கள் நன்கு கல்விகற்று ஜெர்மனியில் தொழிலை வாங்கிக்கொண்டு ஜெர்மனியிலேயே வாழ்ந்துவிடும் ரொமேனியர்களும் இருக்கின்றார்கள். மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், கணினித் துறையிலும் என பலர் ஜெர்மனியில் இன்று தனது வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். ஜெர்மனியின் மக்கள் தொகையில் மிகக் குறிப்பிடத்தக்க வகையில் ரொமேனிய மக்களும் இடம் பெறுகின்றார்கள்.
-சுபா

https://www.facebook.com/subashini.thf/videos/2403422683234448/







No comments:

Post a Comment