நம்ம ஊர் கிளி ஜோசியம் இங்கே ரொமானியாவிலும் இருக்கின்றது. சிந்தி இன மக்கள் இந்த கிளி ஜோசியம் பார்க்கும் வேலையை செய்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களில் இரண்டு பேர் கையில் ஒரு பலகை போல வைத்துக் கொண்டு அதன் மேல் ஒரு பெட்டிக்குள் சோதிடம், குறி செல்வதற்கான புகைப்படங்களுடன் கூடிய எழுத்துக்கள் அடங்கிய காகிதங்களை வைத்திருக்கின்றார்கள். அதில் ஒரு சங்கிலி கட்டி மூன்று கிளிகளை வைத்திருக்கின்றார்கள். அந்தப் பலகையை கையில் தூக்கிக் கொண்டு குடும்பம் குடும்பமாக சாலைகளில் gypsy மக்கள் செல்கின்றார்கள். இவர்களிடம் யார் ஜோதிடம் பார்ப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனாலும் இந்த வகை ஜோதிடக்காரர்கள் இங்கு இருக்கின்றார்கள். அவர்கள் வேகமாக சத்தமாகப் பேசிக் கொண்டே செல்வதால் நிறுத்தி புகைப்படம் எடுக்க முடியவில்லை.
-சுபா
-சுபா
No comments:
Post a Comment