Friday, April 19, 2019

ரொமேனியா பயணம் - 7- ஜிப்சி

சிந்து நதிக்கரையில், அதாவது இன்றைய பாக்கிஸ்தான் நிலப்பகுதியில் வாழ்ந்த பண்டைய சிந்தி இன மக்கள் பெருவாரியாக வடக்கு நோக்கி சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் கால்நடையாகவே குடி பெயர்ந்தனர். ரொமேனியாவில் ரொமானி இனத்தவர் என அழைக்கப்படும் இவர்கள் ஜிப்சிக்களாகவே ஐரோப்பா முழுவதும் பரந்து விரிந்து வாழ்கின்றனர். முறையான வாழ்க்கை முறை தொழில் என்றில்லாமல் பொதுவாகவே திருட்டு, பிச்சை எடுத்தல், குறி சொல்லுதல், ஜோதிடம் பார்த்தல், என்ற வகையிலேயே இவர்கள் ரொமேனியா மட்டுமன்றி ஹங்கேரி மற்றும் ஏனைய கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் அறியப்படுகின்றனர்.

ரொமேனியாவின் மக்கள் தொகையில் இந்த சிந்தி ஜிப்சி இன மக்கள் 3 விழுக்காட்டினர்.

இந்த இன மக்களைப் பற்றியும் இவர்களின் பூர்வீகம் பற்றியும் தொடர்ந்து ஆய்வுகள் நிகழ்ந்தமையின் விளைவாக இவர்களது பூர்வீகம் பண்டைய இந்தியா என்பதும் இவர்கள் சமூக கட்டமைப்பில் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்ட சமூகமாக வாழந்தவர்கள் என்றும் இவ்வாய்வுகள் விவரிக்கின்றன. இவர்களது மொழிக்கூறுகள் ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழிக்கூறுகளை உள்ளடக்கியவை என்பது ஆய்வில் அறியப்பட்டது. இந்தோ ஐரோப்பிய இனக்குழு என்ற வகையில் இந்த மக்கள் அடையாளப்படுத்தப்படுகின்றனர். ரொமேனியாவில் இந்த ஜிப்சி இன மக்கள் நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டு சமூகப் புறக்கணிப்புக்குள்ளாகிய வகையில் வாழ்ந்து வந்தனர் என்பது கண்கூடு.

பொதுவாகவே கைப்பைகளைத் திருடிச் சென்றுவிடுவர், பிச்சை கேட்டு நச்சரிப்பர் என்ற பொதுவான என்ணம் இவர்கள் மேல் சாதாரண ரொமேனிய மக்களுக்கு இருக்கின்றது.

இன்று ருமேனியாவின் மிக முக்கிய கலாச்சார நடனம் மனேலா ஜிப்ஸி மக்களின் கொடையாகும். காம இச்சையை வெளிப்படுத்தும் விதமாக அங்க அசைவுகள் கொண்ட ஒரு வகை நடனம் இது. இன்று இந்த ரோமா மக்கள் மிகப் பெரிய வீடுகளைக் கட்டிக் கொண்டு ஏதோ ஒரு வகையில் வருமானத்தை தேடிக்கொண்டு வாழ்கின்றார்கள். இவர்களது மாடமாளிகைகள் போன்ற வீடுகளை கிட்ச் அருங்காட்சியகத்தில் உள்ள புகைப்படங்களின் வழி காட்டுகிறேன் பாருங்கள்.
-சுபா









No comments:

Post a Comment