Thursday, April 18, 2019

ரொமேனியா பயணம் - 2- பேருந்து பயணம்

மத்திய கிழக்கு ஐரோப்பாவின் நாடுகளில் ஒன்று ரொமேனியா.
பொதுவாக பலர் ரொமேனியாவையும் ரோம் நகரத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்வார்கள். ரோம் நகரம் பண்டைய ரோமானியப் பேரரசின் மையமாகத் திகழ்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நகரம். இன்றைய இத்தாலியின் தலைநகரம்.
ரொமேனியா மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்று. ஏறக்குறைய 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாடு. உக்ரேன், புல்காரியா, ஹங்கேரி, செர்பியா ஆகிய நான்கு நாடுகளை எல்லையாகக் கொண்டும் கருங்கடலை ஒரு பகுதியில் எல்லையாகவும் கொண்ட நாடு இது.
ஐரோப்பாவின் 10 நாடுகளைக் கடந்து செல்லும் டனூப் நதி ரொமேனியாவின் நிலத்திற்கும் வலம் சேர்க்கின்றது. அடுத்த 4 நான்கு நாட்கள் ரொமேனியாவின் தலைநகர் புக்காரெஸ்ட் நகரில் ..அவ்வப்போது இந்த நகருக்கு தொடர்புள்ள சில வரலாற்றுச் செய்திகளை வாய்ப்பு கிடைக்கும்போது புகைப்படங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
காலையில் விமான நிலையம் வந்து இறங்கி பேருந்தில் புகாரஸ்ட் நகர் நோக்கி பயணித்த போது எடுத்த புகைப்படங்கள் சில..பொருளாதார ரீதியாக ஏழ்மையான நாடு என்பது விமான நிலையத்திலிருந்து சாலையில் செல்லும் போதும் ஒவ்வொரு இடத்திலும் பிரதிபலிக்கின்றது.
-சுபா




No comments:

Post a Comment