Sunday, April 21, 2019

ரொமேனியா பயணம் - 18- கிராமங்கள் அருங்காட்சியகம்

புக்காரெஸ்ட் நகரில் உள்ள கிராமங்கள் அருங்காட்சியகம் இது. மிக வித்தியாசமாக ரொமேனியாவின் பண்டைய காலம் தொட்டு கிராமங்களில் உள்ள வீடுகளை காட்சிப்படுத்தும் ஒரு வளாகம் -திறந்தவெளி அருங்காட்சியகம். இதில் 370 பழங்கால கிராமத்து வீடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 60,000 அரும்பொருட்கள் அதிலும் குறிப்பாக விவசாயம்.. கிராமத்து வாழ்க்கை, ஆகியவற்றை விபரிக்கும் வகையிலான பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன. மிக பிரமாண்டமான முறையில் கண்களைக் கவரும் வகையில் பசுமையான தோட்டத்தின் உள்ளே இந்த வளாகம் அமைந்துள்ளது.
உள்ளே நுழைந்து செல்லும் பொழுது நம்மை கடந்த நூற்றாண்டுகளுக்கு இங்கு உள்ள வீடுகள் அழைத்துச் சென்று விடுகின்றன. ஆங்காங்கே இசைக்கருவிகளை வாசித்து கொண்டிருக்கும் கலைஞர்கள் கிராமத்து விவசாய பொருட்கள் ,பலகாரங்கள் கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் பெண்மணிகள் அமர்ந்திருக்கிறார்கள். சமய போதகர்கள் ஒரு பகுதியில் அமர்ந்து இருக்கின்றார்கள் .அனைவரும் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்துகின்றனர் ...விற்பனைக்கும் வைத்திருக்கின்றனர்..
இத்தகைய அருங்காட்சியகத்தை பார்க்கும்போதெல்லாம் மனதில் தமிழகத்திலும் இப்படி தமிழ் பண்பாட்டை விவரிக்கும் நேர்த்தியான ஒரு கிராம அருங்காட்சியகம் வைப்பது அவசியம் என்ற எண்ணம் எனக்கு எழுகிறது.
-சுபா

https://www.facebook.com/subashini.thf/videos/2403424883234228/






No comments:

Post a Comment