ரொமேனியாவின் ஒரு orthodox கிறித்துவ தேவாலயம்.
இந்த வகை கிருத்துவம் சார்ந்த கோயில்கள் மிகுந்த கலைநயத்துடன் வடிக்கப்பட்டுள்ளன. கட்டிடங்களின் உள்ளே முழுமையாக சுவர் சித்திரங்கள் அலங்கரிக்கின்றன. புகாரஸ்ட் நகரின் அனைத்து தேவாலயங்களிலும் காலையிலேயே மக்கள் வழிபாட்டிற்கு வந்து விடுகின்றார்கள். ஆர்த்தடாக்ஸ் சமயத்தின் சின்னங்களான குருமாரின் ஓவியம், நூல்கள் ஆகியவற்றின் முன் மண்டியிட்டு வணங்கி தொழுகின்றார்கள். காலையில் ஒரு வழிபாட்டின்போது orthodox சமயகுரு ஒருவர் பொதுமக்களுக்கு ஆசி வழங்குவதை பார்த்தேன். மக்கள் வரிசையாக நின்று ஆசி பெற்றுக்கொண்டு பின்னர் கோயிலின் சின்னங்கள் இருக்கும் இடத்தில் அமர்ந்து வழிபாடு செய்துவிட்டு அமைதியாக செல்கின்றார்கள். பின்னணியில் ஒலிபெருக்கியில் சமய பாடல் மெலிதாக ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. ரொமேனிய மக்கள் மிகத் தீவிரமாக ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சமயத்தை பின்பற்றுபவர்கள்.
-சுபா

https://www.facebook.com/subashini.thf/videos/2403254583251258/
No comments:
Post a Comment