Saturday, October 27, 2018

SriLanka - 7. கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில்

நேற்று மாலை கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் ஒரு விவாத மேடை நிகழ்வு நடைபெற்றது. இரண்டு அணிகளில் 4 ஆண்கள் 4 பெண்கள் என விவாதித்தனர். அனைவரும் 20 வயதுகளில் உள்ள இளையோர். தலைப்பு இலங்கை அரசில் தமிழ்க் கட்சிகளில் நிலைப்பாடு பற்றியது.
விவாதித்தோரின் தமிழ் ஆளுமை, உச்சரிப்பு, சமகால அரசியல் அறிவு, சமூக சிந்தனை என்னை வியக்க வைத்தது.
நிகழ்ச்சியைப் பார்க்க வந்தோரில் 50 விழுக்காடு இளையோரே. இதுவும் எனக்கு ஒரு வியப்பு. ஒரு உரை நிகழ்ச்சியைக் காண ஆர்வத்துடன் இளையோர் வந்து அமர்ந்திருப்பது அவர்களுக்கு அரசியல் சிந்தனைகள் சமூக நலனுக்கு முக்கியம் என்ற உணர்வு இருப்பதை வெளிப்படுத்துவதைக் காண்கிறேன்.
இந்த இளையோருக்கு என் பாராட்டுக்கள்.






No comments:

Post a Comment